அய்யா சாமீகளா... உதயநிதிக்கு ஒருவார்த்தை கண்டனம் தெரிவியுங்க... காங், ஆர்ஜேடியிடம் பாஜக கெஞ்சல்
டெல்லி: சனாதன தர்மத்தை ஒழிப்போம் என தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சுக்கு எப்படியாவது காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி), ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியூ) கட்சிகள் தெரிவிக்க வேண்டும் என பாஜக அடம்பிடித்துக் கொண்டிருக்கிறது.
சென்னையில் நடைபெற்ற மாநாட்டில் பேசிய திமுக இளைஞரணி செயலாளரும் தமிழ்நாடு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், சனாதன ஒழிப்பு மாநாடு என்கிற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிற இந்த மாநாட்டில் வாழ்த்துரை வழங்கும் வாய்ப்பைத் தந்த மாநாட்டு ஏற்பாட்டுக் குழுவுக்கு எனது நன்றியை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த மாநாட்டின் தலைப்பே என்னைக் கவர்ந்திருக்கிறது. சனாதன எதிர்ப்பு மாநாடு என்று போடாமல் சனாதன ஒழிப்பு மாநாடு என்று போட்டிருக்கிறார்கள். சிலவற்றை மட்டும் தான் எதிர்க்க வேண்டும். சிலவற்றை ஒழித்தே தீர வேண்டும். அந்த வகையில், சனாதனம் என்பதை எதிர்ப்பதை விட ஒழிப்பதே சரியாகும். எனவே, இந்த மாநாட்டுக்கு மிகப் பொருத்தமான தலைப்பு தான் வைக்கப்பட்டுள்ளது என்றார்.

ஆனால் வட இந்திய பாஜகவினர், சனாதன தர்மத்தை பின்பற்றும் 80% இந்துக்களை இன அழிப்பு- இனப்படுகொலை செய்ய சொல்கிறார் உதயநிதி ஸ்டாலின் என நேற்று முதல் திட்டமிட்ட பொய் பிரசாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அகில இந்திய ஊடகங்கள், செய்தி ஏஜென்சிகளும் இதனை ஊதி ஊதி பெரிதாக்கி வருகின்றனர்.
இது தொடர்பாக பதிலளித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒட்டு மொத்த இந்தியாவே சனாதனம் குறித்து பேசிக்கொண்டு இருக்கிறது. இன்னமும் பேச வேண்டும். நான் சொன்னது போல் நிறைய பேருக்கு வயிற்றெரிச்சல் வந்துள்ளது, Genocide என நான் சொன்னதாக பயித்தியக்காரத்தனமாக சிலர் பேசுகின்றனர். சனாதனம் கோட்பாடு ஒழிக்க வேண்டும் என்று தான் பேசினேன். திராவிடத்தை ஒழிக்க வேண்டும் என்கிறார்கள் சிலர். அதற்கு திமுகவினரை எல்லாம் கொலை செய்வதாக அர்த்தமா.
எல்லாருக்கும் எல்லா கிடைக்க வேண்டும் என்பதே திராவிட கொள்கை. முன்பு பெண்கள் படிக்க கூடாது. மேலாடை அணிய கூடாது. இதையெல்லாம் மாற்றியதே திராவிட மாடல், வேண்டுமென்று பாஜகவினர் போலி செய்தி பரப்புகின்றனர். இந்தியா கூட்டணி கூட்டம் வெற்றியடைந்ததை திசைதிருப்பவே பாஜகவினர் இப்படி செய்கின்றனர். வதந்திகள் பரப்புவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என திட்டவட்டமாக கூறி இருந்தார்.
இந்நிலையில் டெல்லியில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மூத்த பாஜக தலைவர் ரவிசங்கர் பிரசாத், ராகுல் காந்தி, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, நிதிஷ்குமார் (ஜேடியூ), தேஜஸ்வி யாதவ் (ஆர்ஜேடி) ஒருவர் கூட உதயநிதி பேச்சை கண்டிக்கவில்லை. ராகுல் காந்தி குறைந்தபட்சம் ஒரு அறிக்கையாவது கொடுத்திருக்கலாமே.. இது ரொம்பவும் அதிர்ச்சியாக இருக்கிறது என












Click it and Unblock the Notifications