"உங்களுக்கு அதிகாரம் இல்லை!" விவசாயிகள் போராட்டம் குறித்து சர்ச்சை.. கங்கனாவை எச்சரித்த பாஜக

Subscribe to Oneindia Tamil

டெல்லி: விவசாயிகளின் போராட்டத்தை வங்கதேச வன்முறையுடன் தொடர்புப்படுத்தி கங்கனா ரனாவத் பேசியது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே கங்கனா ரனாவத்தின் இந்தப் பேச்சைக் கண்டித்துள்ள பாஜக, கட்சியின் கொள்கை குறித்துப் பேச அவருக்கு அதிகாரம் இல்லை என்றும் தெரிவித்துள்ளது.. மேலும், அவரது கருத்து பாஜகவின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என்றும் தெளிவுபடுத்தியுள்ளது.

இமாச்சல பிரதேசத்தில் இருந்து எம்பியாக பாஜக சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டவர் கங்கனா ரனாவத். அவ்வப்போது சில சர்ச்சை கருத்துகளைக் கூறுவதை இவர் வழக்கமாக வைத்திருக்கிறார்.

kangana ranaut bjp politics

அதன்படி சமீபத்தில் விவசாயிகளின் போராட்டத்தை வங்கதேச வன்முறையுடன் தொடர்புப்படுத்தி இவர் சொன்ன கருத்துகள் விவாதத்தைக் கிளப்பியது. இதற்கிடையே கங்கனாவின் கருத்து பாஜகவின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை என்று பாஜக விளக்கமளித்துள்ளது.

பாஜக விளக்கம்: இது தொடர்பாக பாஜக வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "விவசாயிகள் போராட்டம் குறித்து பாஜக எம்பி கங்கனா ரனாவத் கூறியது கட்சியின் அதிகாரப்பூர்வ கருத்து இல்லை. கங்கனா ரனாவத் கூறிய கருத்தை பாஜக ஏற்கவில்லை. பாஜகவின் கொள்கை விவகாரம் குறித்துப் பேச கங்கனா ரனாவத்திற்கு அனுமதி இல்லை. அதற்கான அதிகாரமும் அவருக்கு இல்லை.

வரும் காலத்தில் இதுபோல பேசக்கூடாது என்று கங்கனா ரனாவத்துக்கு பாஜக உத்தரவிட்டுள்ளது. அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி தேவை என்ற முழக்கத்தில் பாஜக உறுதியாக இருக்கிறது" என்று கூறப்பட்டுள்ளது.

சர்ச்சை: முன்னதாக விவசாயிகள் போராட்டம்: குறித்து கங்கனா ரனாவத் சில சர்ச்சை கருத்துகளைக் கூறியிருந்தார். அதாவது நரேந்திர மோடி அரசு கடுமையான நடவடிக்கைகள் எடுக்காமல் இருந்திருந்தால் விவசாயிகளின் போராட்டத்தால் இந்தியாவிலும் வங்கதேசத்தில் இப்போது ஏற்பட்டுள்ளதைப் போன்ற சூழல் ஏற்பட்டு இருக்கும் என்று கங்கனா ரனாவத் கூறியிருந்தது சர்ச்சையைக் கிளப்பியது குறிப்பிடத்தக்கது.

இது தொடர்பாகப் பாலிவுட் நடிகையும் எம்பியுமான கங்கனா ரனாவத் வெளியிட்ட வீடியோவில், "விவசாயிகள் போராட்டம் என்ற பெயரில் வங்கதேசத்தில் நடந்தது போன்ற அராஜகம் இந்தியாவிலும் நடந்திருக்கலாம். இந்தியாவில் இருக்கும் சிலருடன் சேர்ந்து சதி செய்து இந்தியாவை அழிக்க வெளிநாட்டுச் சக்திகள் திட்டமிடுகிறது. நமது தலைமை தொலைநோக்கு பார்வையுடன் சரியான நடவடிக்கை எடுக்காமல் இருந்திருந்தால் அவர்கள் வெற்றி பெற்றிருப்பார்கள்" என்று அதில் கூறப்பட்டுள்ளது.

பாடம் எடுத்த பாஜக தலைவர்கள்: கங்கனா ரனாவத் இதுபோன்ற பேச்சுகளைப் பேசக் கூடாது என்று ஹரியானா மற்றும் பஞ்சாபில் உள்ள பாஜக தலைவர்களும் வலியுறுத்தியுள்ளனர். இது தொடர்பாகப் பஞ்சாப் பாஜக தலைவர் ஹர்ஜித் கிரேவால் கூறுகையில், "விவசாயிகளைப் பற்றி பேச கங்கனாவுக்கு அதிகாரம் இல்லை. கங்கனாவின் கருத்து பாஜகவின் கருத்து இல்லை.

அது அவருடைய தனிப்பட்ட கருத்து. பிரதமர் மோடியும் பாஜகவும் எப்போதும் விவசாயிகள் பக்கம் நிற்பவர்கள். எதிர்க்கட்சிகள் நாங்கள் விவசாயிகளுக்கு எதிரானவர்கள் என்பது போன்ற பிம்பத்தை உருவாக்க முயல்கிறார்கள். கங்கனாவும் இந்த கருத்தைச் சொல்லி அதையே தான் செய்கிறார். உணர்ச்சிவசப்பட்டு இதுபோன்ற கருத்துகளை அவர் சொல்லக்கூடாது" என்றார்.

முதல்முறை இல்லை: அதேநேரம் விவசாயிகள் போராட்டம் குறித்து கங்கனா இதுபோன்ற கருத்துகளைச் சொல்வது இது முதல்முறை இல்லை. விவசாயிகள் போராட்டத்தின் போது, யாரோ ஒரு வயதான பெண்ணை ஷாஹீன் பாக் போராட்டத்தின் முக்கிய நபராக இருந்த பில்கிஸ் பானு என்று தவறாக கங்கனா ரனாவத் விமர்சித்தார். மேலும், எல்லா போராட்டங்களுக்கும் ரூ.100 கொடுத்தால் வந்துவிடுவார்கள் என்றும் சர்ச்சை கருத்தைத் தெரிவித்தார்.

இதற்கிடையே கடந்த ஜூன் 6ம் தேதி இந்த விவகாரத்தின் எதிர்வினையாக சண்டிகர் விமான நிலையத்தில் கங்கனா ரனாவத் சென்ற போது அங்கிருந்த சிஐஎஸ்எஃப் அதிகாரி அவரை அறைந்தார். விவசாயச் சட்டங்களுக்கு எதிரான போராட்டத்தை கங்கனா கொச்சைப்படுத்தியதாலேயே அறைந்ததாகவும் அந்த போராட்டத்தில் தனது தாயும் இருந்ததாகவும் அந்த சிஐஎஸ்எஃப் பெண் அதிகாரி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+