இந்த படத்தை பாருங்க.. புரியும்.. இந்தியாவில் "வரிக் கொடுமையை" பாருங்க.. ராகுல் காந்தி ட்வீட்
டெல்லி: உலகின் வேகமாக வளர்ந்துவந்த பொருளாதாரத்தை, தற்போது எப்படி அழிப்பது என்பதே பாஜகவின் திட்டமாக இருப்பதாக காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
ஜூன் மாதம் நடைபெற்ற 47வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற்றது. இதில் பல்வேறு பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை திருத்தியமைக்க ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. அதில் எடையளவுச் சட்டத்தின் பாக்கெட்டுகளில் பேக் செய்து விற்பனை செய்யப்படும் பால், மோர், லஸ்ஸி உள்ளிட்ட பொருட்களுக்கு 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரியாக விதிக்கப்பட்டது.

வரி உயர்வு அமல்
அதேபோல் விலக்கு அளிக்கப்பட்ட அத்தியாவசிய பொருட்களான அரிசி, கோதுமை, மாவு உள்ளிட்ட பொருட்களுக்கும் 5 சதவிகிதம் ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டுள்ளது. செக் புக்கிற்கு 18 சதவிகிதம், 12 சதவிகிதமாக இருந்த எல்இடி பல்-புக்கான ஜிஎஸ்டி தற்போது 18 சதவிகிதமாக உயர்ந்தது. இந்தப் பொருட்களுக்கான புதிய ஜிஎஸ்டி வரி மாற்றம் இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது.

ராகுல் விமர்சனம்
இந்த நிலையில் ஜிஎஸ்டி வரி மாற்றத்தால் இன்று முதல் விலை அதிகமாக இருக்கும் பொருட்களின் பட்டியலை காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி ட்விட்டரில் பகிர்ந்து கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து ராகுல் காந்தி தனது ட்விட்டர் பக்கத்தில், ஒருகாலத்தில் உலகின் வேகமாக வளர்ந்துவந்த பொருளாதாரத்தை, தற்போது எப்படி அழிப்பது என்பதே பாஜகவின் திட்டமாக உள்ளது. அதுமட்டுமல்லாமல் அதிக வரி விதிப்பதோடு, வேலைவாய்ப்பையும் உருவாக்காமல் இருப்பதாக விமர்சித்துள்ளார்.

வரிவிகிதம்
அதோடு, தயிர், பன்னீர், அரிசி, கோதுமை, பார்லி, வெல்லம் மற்றும் தேன் போன்ற பொருட்களுக்கு தற்போது எப்படி வரி விதிக்கப்படுகிறது என்பதைக் காட்டும் வகையில் வரைபடம் ஒன்றை டிவிட்டரில் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் ரூ. 5 ஆயிரம் வசூலிக்கப்படும் மருத்துவமனைகளின் அறைகளுக்கு 5 சதவிகித வரியும், ரூ.1000க்கு குறைவான உணவக அறைகளுக்கு 12 சதவிகித ஜிஎஸ்டி-யும் விதிக்கப்பட்டுள்ளது.

ராகுல் கண்டனம்
அதேபோல் சோலார் வாட்டர் ஹீட்டர்களுக்கான ஜிஎஸ்டி 5 சதவிகிதத்தில் இருந்து 12 சதவிகிதமாகவும், எல்இடி விளக்குகள் மற்றும் சாதாரண விளக்குகள் மீதான ஜிஎஸ்டி 12 சதவிகிதத்தில் இருந்து 18 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் விமர்சித்துள்ளார். அதேபோல் பொதுமக்கள் பயன்படுத்தும் அத்தியாவசியப் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை உயர்த்தியதற்கும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
ராகுல் சொல்லியும் அடங்கலையே! கூட்டணிக்குள் குண்டு வைக்கும் மாணிக்கம் தாகூர்! -
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி அடுத்த குட் நியூஸ்? தமிழக அரசு அசத்திய ரூ.193 கோடி மகளிர் நிதி -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா?












Click it and Unblock the Notifications