என்ன நியாயம்? எடியூரப்பாவுக்கு க்ரீன் சிக்னல்.. அத்வானி உள்ளிட்டோருக்கு முதியோர் குழுவில் இடம்!
டெல்லி: 75 வயதானவர்களை முதியோர் குழுவில் இடம்பெற வைத்து ஒதுக்கி வைக்கும் கொள்கைக்கு விடைகொடுத்துவிட்டு 76 வயதாகும் எடியூரப்பா கர்நாடகா முதல்வராக பச்சைகொடி காட்டியுள்ளது பாஜக மேலிடம்.
2014-ல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி அமைந்த போது முன்னாள் துணை பிரதமர் அத்வானிக்கு கேபினட்டில் என்ன இடம் கிடைக்கும் என்பது விவாத பொருளாக இருந்தது. முன்னாள் துணை பிரதமர் என்பதால் அமைச்சர் பதவி கொடுப்பது சரியாக இருக்காது என்கிற கருத்தும் முன்வைக்கப்பட்டது.

ஆனால் பாஜக மேலிடமோ அத்வானி, முரளிமனோகர் ஜோஷி உள்ளிட்ட 75 வயதை கடந்தவர்களை ஒதுக்கி வைக்கும் வகையில் கட்சியில் ஆலோசனை குழு என ஒன்றை உருவாக்கி அதில் இடம்பெறவைத்தனர். இதனால் அத்வானி உள்ளிட்ட கட்சியின் மூத்த தலைவர்கள் கடும் அதிருப்தியில் இருந்து வருகின்றனர்.
இதே பாணியில் 75 வயது என்பதால் குஜராத் முதல்வராக இருந்த ஆனந்திபென் பட்டேலும் ராஜினாமா செய்ய வைக்கப்பட்டார். 75 வயதை காரணம் காட்டி மத்திய அமைச்சராக இருந்த நஜ்மா ஹெப்துல்லா, சித்தேஸ்வராவும் ராஜினாமா செய்தனர்.
அத்துடன் எந்த தேர்தலிலும் அத்வானி உள்ளிட்ட மூத்த கட்சித் தலைவர்களை பிரசாரத்துக்கு கூட பாஜக அழைப்பது இல்லை. அண்மையில் நடைபெற்ற லோக்சபா தேர்தலிலும் இந்த அவமானம் தங்களுக்கும் நேரிடும் என கருதியே மூத்த பாஜக தலைவர்கள் பலரும் ஒதுங்கி மவுனம் காத்தனர்.
இந்த அடிப்படையில்தான் கர்நாடகாவில் மீண்டும் முதல்வராக 76 வயதாகும் எடியூரப்பாவுக்கு வாய்ப்பு கிடைக்குமா? கிடைக்காதா? என்கிற கேள்விகள் எழுந்தன. ஆனால் பாஜக மேலிடம் எடியூரப்பாவுக்கு மட்டும் விதிவிலக்கு அளித்துள்ளது.
தற்போது கர்நாடகா முதல்வராக 4-வது முறையாக எடியூரப்பா பதவி ஏற்க உள்ளார். ஏற்கனவே 3 முறை முதல்வராக பதவி வகித்த எடியூரப்பா 5 ஆண்டுகாலம் முழுமையாக பதவி வகித்தது இல்லை. சொற்பநாட்களில் பதவியை பறிகொடுத்த வரலாற்றுக்கு சொந்தக்காரர் எடியூரப்பா என்பது குறிப்பிடத்தக்கது.
-
டெல்லி கொடுத்த ஸ்வீட் பாக்ஸ்.. அப்படியே அமுக்கிய தலைகள்! அடுக்கிய அண்ணாமலை! காங்கிரஸில் கலகம்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
கை, கால்களை வெட்டினால்தான் பயம் வரும்! பலாத்கார வழக்கில் கட் அண்ட் ரைட்டாக சொன்ன கர்நாடக ஹைகோர்ட் -
சிம்பிளாக பதவியேற்பு.. கர்நாடகாவில் கவனத்தை ஈர்க்கும் டி.கே.சிவகுமார்! காரணம் இதுதான்!












Click it and Unblock the Notifications