பாஜகவினரை ஏக காண்டாக்கிய சு.சுவாமியின் குசும்பு ட்வீட்.. ஜோக்கடிச்சுட்டோம்னு நினைப்பு
Recommended Video
டெல்லி: லோக்சபா தேர்தல் முடிவுகள் எப்படி வருமோ? என்கிற பதற்றத்தில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் எதையாவது உளறிக் கொட்டி உணர்ச்சியேற்றி வருகிறார். இந்த களேபரத்தை ரசிப்பது போல பாஜக ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி போட்ட பதிவு கட்சியினரை செம காண்டாக்கியுள்ளது.
தேர்தல் முடிவுகள் வரும் 23-ந் தேதி வெளியாக உள்ளன. பொதுவாக தொங்கு நாடாளுமன்றம்தான் அமையக் கூடும் என கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இதையடுத்து எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் முயற்சிகள் படுதீவிரமாக நடைபெற்று வருகின்றன. பாஜகவுக்கு ஆதரவாக மாநில கட்சிகள், காங்கிரஸுக்கு ஆதரவாக மாநில கட்சிகள், பாஜக, காங்கிரஸுக்கு ஆதரவு தராத கட்சிகள் என இப்போதே அணிகள் களைகட்டி வருகின்றன.
இந்த நிலையில் பாஜகவின் ராஜ்யசபா எம்.பி. சுப்பிரமணியன் சுவாமி, தேர்தல்களில் பாஜக 50 சீட்டுகளுக்கு குறைவாக பெற்றால் ஆச்சரியமடைவேன் என ஒரு ட்வீட் போட்டிருந்தார். பாஜக தலைவர்கள் பெரும்பான்மை பலத்துடன் ஆட்சி அமைப்போம் என பேசி வரும் நிலையில் 50 சீட்டுகள் பற்றி சுப்பிரமணியன் சுவாமி ட்வீட் போட்டிருக்கிறாரே என எல்லோரும் குழம்பிப் போயினர்.
😆UP elections
— Subramanian Swamy (@Swamy39) May 13, 2019
பின்னர் நான் சொன்னது உத்தரப்பிரதேசத்தை மட்டும் என இன்னொரு ட்வீட் போட்டார். அதாவது சுப்பிரமணியன் சுவாமி ஜோக்கடித்துவிட்டாராம்..அவரே அதை எமோஜிக்கள் மூலம் வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
ஆனால் சுப்பிரமணியன் சுவாமியின் இந்த ட்வீட்டுகள் பாஜகவினரை செம காண்டாக்கிவிட்டது என்பதுதான் யதார்த்தம்.
-
"சிங்க பெண்ணுக்கே பாதுகாப்பில்லாத ஆட்சி!" பெண் காவலருக்கு பாலியல் தொல்லை.. சாடிய நயினார் நாகேந்திரன் -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு -
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள்












Click it and Unblock the Notifications