அதிருப்தி தலைவர்களிடம் பணிந்து போகும் பாஜக.. எல்லாம் 5 மாநில தேர்தல் கொடுத்த பாடம்
டெல்லி: அதிருப்தி தலைவர்களுடன் பாஜக சாஃப்ட்டாக போக ஆரம்பித்துள்ளது. இதுவரை கடைபிடித்து வந்த கடும் நிலைப்பாட்டை தளர்த்திக்கொள்ள கட்சி தலைமை முன் வந்துள்ளது.
கடந்த சில வருடங்களாகவே, அதிருப்தியாளர்களை கடுமையாகவே கையாண்டு வந்த பாஜக, இப்போது தனது நிலைப்பாட்டை தளர்த்தியுள்ளது. குஜராத் முன்னாள் உள்துறை அமை அமைச்சர் கோர்தன் ஜடாபியா 2012ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், நரேந்திர மோடியை எதிர்த்து போட்டியிட்டார். இருப்பினும், தோல்வியடைந்தார்.

இந்த நிலையில் கோர்தன் ஜடாபியாவை பாஜகவில் இணைத்துக்கொண்டுள்ள அதன் தலைமை, 2019ம் ஆண்டு, லோக்சபா தேர்தலுக்காக உத்தர பிரதேச பொறுப்பாளர்களில் ஒருவராக இவரை நியமித்துள்ளது. 2014ல் இவர் தனது குஜராத் பரிவர்த்தனா கட்சியை, பாஜகவுடன் இணைத்துக்கொண்டார்.
இதுவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொண்டாலும் பதவிகள் தராமல் இருந்த பாஜக தலைமை இப்போது பதவியையும் தந்து தனது பெரிய தலைகளை கைக்குள் வைத்துக்கொள்ள முயற்சி செய்கிறது.
உத்தரபிரதேசம் போன்ற முக்கியமான ஒரு மாநிலத்தில் அதிருப்தி தலைவருக்கு பொறுப்பு வழங்கியுள்ளதை வைத்து பார்க்கும்போது பாஜக தலைமை தனது நிலைப்பாட்டை எந்த அளவுக்கு தளர்த்திக்கொண்டுள்ளது என்பதை அறிய முடியும் என்கிறார்கள் அரசியல் பார்வையாளர்கள்.
இவர் மட்டுமல்ல, மேலும் பல அதிருப்தி தலைவர்களும், 17 மாநிலங்களில் லோக்சபா தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் என்பதும் கவனிக்கத்தக்கது. 5 மாநில தேர்தலுக்கு பிறகுதான் பாஜக நெகிழ்ச்சித் தன்மையில் இறங்கியுள்ளது என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications