இது அமலாக்கத்துறை அல்ல... பாஜகவின் தேர்தல் மேலாண்மை துறை.. மத்திய அரசை கடுமையாக சாடிய காங்கிரஸ்
டெல்லி: மத்திய பாஜக அரசு அமலாக்கத்துறையை, தேர்தல் மேலாண்மை துறையாக பயன்படுத்துகிறது. ராகுல்காந்தியை பார்த்து பாஜக பயப்படுவதால் இத்தகைய செயலை செய்கிறது என காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ரன்தீப் சிங் சுர்ஜேவாலா கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.
நேஷனல் ஹெரால்டு வழக்கில் ராகுல்காந்தி அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு நேற்று ஆஜரானார். இதையொட்டி நேற்று நாடு தழுவிய அளவில் காங்கிரஸ் சார்பில் கடும் போராட்டம் நடத்தப்பட்டது.
இதையடுத்து டெல்லியில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் மூத்த தலைவர்கள், எம்பி, எம்எல்ஏக்கள் திரண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். போலீசார் கைது செய்தனர். மூத்த தலைவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியதாக பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன.

2 வது நாள் ராகுல் ஆஜர்
இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களாக கேசி வேணுகோபால், ப சிதம்பரம் உள்பட பலர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில் தான் இன்று 2வது நாளாக ராகுல்காந்தி அமலாக்கத்துறை முன்பு ஆஜரானார். முன்னதாக அவர் தனது சகோதரி பிரியங்கா காந்தியுடன் டெல்லி காங்கிரஸ் அலுவலம் வந்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பிறகு ராகுல்காந்தி அங்கிருந்து புறப்பட்டு அமலாக்கத்துறை அலுவலகத்துக்கு சென்றார்.

போராட்டம் - கைது
இதையொட்டி நேற்று டெல்லி அக்பர் சாலையில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் முன்பு தலைவர்கள், தொண்டர்கள் குவிந்திருந்தனர். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக காங்கிரஸ் தலைவர்கள், தொண்டர்களை போலீசார் கைது செய்து வேனில் அழைத்து சென்றனர். இதனால் அங்கு காங்கிரஸாருக்கும், போலீசாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பான சூழல் நிலவியது. இருப்பினும் போலீசார் அவர்களை குண்டுகட்டாக தூக்கிச்சென்று கைது சென்றனர். காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா உள்பட ஏராளமான தலைவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இது அமலாக்கத்துறை அல்ல
முன்னதாக ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது: கல்வான் பள்ளத்தாக்கு விவகாரம், பணவீக்கம், நாட்டின் வேலையில்லா திண்டாட்டம் போன்ற பிரச்னைகளை ராகுல் காந்தி எழுப்பி பிரதமர் மோடியின் அரசை எதிர்க்கிறார். இதனால் மத்திய அரசு கலக்கமடைந்துள்ளது. கடந்த 8 ஆண்டுகளாக அமலாக்கத்துறையை மத்திய பாஜக அரசு தேர்தல் மேலாண்மைத் துறையாக பயன்படுத்தி வருகிறது. அமலாக்கத்துறையின் பின்னால் இருந்து கொண்டு மத்திய அரசு எதிர்க்கட்சியின் குரலை முடக்குகிறது.

பாஜகவின் இலக்கு ஏன்?
இந்த வேளையில் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை மட்டும் ஏன் பாஜக இலக்காக கொண்டுள்ளது? பொதுப் பிரச்சினைகளை எழுப்பும் குரல்களை நசுக்க சதி நடக்கிறதா? மோடி அரசுக்கு கிடைக்க வேண்டிய பலன்களுக்கு ராகுல்காந்தி தடையாக இருக்கிறாரா? என்ற கேள்விகள் எழுகின்றன. இதற்கு பதில் என்னவெனில் பெட்ரோல்-டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர், உணவு பொருட்கள் என எதுவாக இருந்தாலும் நாட்டின் நடுத்தர மக்கள், ஏழைகள் சந்திக்கும் பிரச்சனைகளின் குரலாக ராகுல் காந்தி உள்ளார்.

பயப்படும் மத்திய அரசு
கொரோனா தடுப்பூசிக்கு கட்டணம் நிர்ணயிப்பதன் மூலம் கோடிகளில் லாபம் ஈட்ட முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ராகுல் காந்தி குரல் எழுப்பியதால் தான் இலவச தடுப்பூசி வழங்க கோரினார். மேலும் சில தனியார் நிறுவனங்களின் தொழில்அதிபர்களுக்கு சாதகமாக பிரதமர் இருப்பதை ராகுல் காந்தி விமர்சித்தார். பிரான்சில் ரபேல் ஒப்பந்தம், இலங்கையில் மின்சார ஒப்பந்தத்தை தனியார் நிறுவனத்திற்கு வழங்குமாறு அழுத்தம் கொடுக்கிறார். இதனை ராகுல்காந்தி அம்பலப்படுத்தினார். ஒருங்கிணைந்த காங்கிரஸ், ஏழைகளின் குரலாக ராகுல்காந்தி இருப்பதால் அவரை பார்த்து மத்திய பாஜக அரசு பயப்படுகிறது'' என விமர்சனம் செய்துள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications