பாஜக இன்ஸ்டா வீடியோ அதிரடி நீக்கம்! ஏராளமானவர்கள் ரிப்போர்ட் அடித்ததால் பரபரப்பு.. என்ன நடந்தது?

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்டாகிராம் பக்கத்தில் வெளியிடப்பட்ட வீடியோவுக்கு எதிராக பலரும் ரிப்போர்ட் அடித்து வந்த நிலையில் தற்போது அந்த வீடியோ அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்த வீடியோ மற்றும் நீக்கப்பட்டதன் பின்னணி தொடர்பான பரபரப்பான தகவல் வெளியாகி உள்ளது.

7 கட்டங்களாக லோக்சபா தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கடந்த மாதம் 19, 26 ஆகிய தேதிகளில் 2 கட்ட லோக்சபா தேர்தல் நடந்து முடிந்துவிட்டது. இன்னும் 5 கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது. வரும் 7 ம் தேதி 3வது கட்ட லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது.

BJP video deleted from official BJP instagram page after the hate speech reports


இந்நிலையில் தான் 2வது கட்ட வேளையில் பிரதமர் மோடி பேசியது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. குறிப்பாக காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை தொடர்பாக அவர் கூறிய தகவல்கள் பெரும் பரபரப்பை கிளப்பின.

அதாவது, பிரதமர் மோடி தனது பிரசார மேடைகளில், ‛‛லோக்சபா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தால் இந்துக்களின் சொத்துகளை பிடுங்கி இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும்’’ என தெரிவித்தார். மேலும் காங்கிரஸ் கட்சி மத்தியில் ஆட்சியில் இருந்தது இந்தியாவில் முஸ்லிம்களுக்கு தான் முதல் அதிகாரம் என கூறியதாக தெரிவித்தார்.

எஸ்சி, எஸ்டி இடஒதுக்கீட்டை முஸ்லிம்களுக்கு வழங்க துடித்த காங்கிரஸ் - பிரதமர் மோடி கடும் ‛அட்டாக்’


பிரதமர் மோடியின் இந்த பேச்சு பெரும் விவாதத்தை கிளப்பியது. காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனத்தை பதிவு செய்தன. மேலும் பிரதமர் மோடி மதத்தின் அடிப்படையில் வெறுப்பு பேச்சை பேசுவதாக தேர்தல் ஆணையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதற்கிடையே தான் பிரதமர் மோடியின் இந்த பேச்சை முன்வைத்து கடந்த மாதம் 30ம் தேதி பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அனிமேஷன் காட்சியாக வீடியோ வெளியிடப்பட்டது. அந்த வீடியோவும் சர்ச்சையை கிளப்பியது. இதையடுத்து பலரும் எதிர்ப்பு தெரிவித்து கமெண்ட் பதிவிட்டனர். அதோடு வீடியோ வெறுப்பை உருவாக்குவதாக கூறி பலரும் ரிப்போர்ட் அடித்தனர். வகுப்புவாத பிரச்சனையை தூண்டு்ம வகையில் வீடியோ இருப்பதாக கூறி ரிப்போர்ட் செய்தனர்.

‛‛முஸ்லிம் முதல் தாலி வரை’’.. திடீரென பிரசார யுக்தியை மாற்றிய பிரதமர் மோடி.. பின்னணியில் 2 காரணம்


இந்நிலையில் தான் பாஜகவின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து அந்த வீடியோ நீக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த வீடியோவை பாஜகவே நீக்கியதா? இல்லாவிட்டால் புகார் மற்றும் ரிப்போர்ட் காரணமாக இன்ஸ்டாகிராம் நிறுவனமே தூக்கியதா? என்பது பற்றி விபரம் தெரியவில்லை. ரிப்போர்ட் அடித்தவர்களுக்கு வீடியோ நீக்கப்பட்டுள்ளதாக மட்டுமே தகவல் சென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+