"வெல்லாத இடங்களில் எல்லாம்".. நேரடியாக பிரதமர் மோடி பேசியதை கவனித்தீர்களா.. அதிர்ந்த நாடாளுமன்றம்
டெல்லி: எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் எப்போதும் எங்களுக்கு ராசியானது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் நோ பால்களை வீசி உள்ளனர். 2024 தேர்தலில் இதுவரை வெல்லாத இடங்களில் எல்லாம் வென்று புதிய ரெக்கார்ட் படைப்போம் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீது செவ்வாய்க்கிழமை அன்று மக்களவையில் விவாதம் தொடங்கியது.

இந்த விவாதத்தில் நேற்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பேசுகையில், நான் மணிப்பூருக்கு அண்மையில் சென்றேன். ஆனால் நமது பிரதமர் அங்கு செல்லவில்லை. இப்போதுவரை அவர் ஏன் செல்லவில்லை?. மணிப்பூர், இந்தியாவில் இருப்பதாகவே பிரதமர் கருதவில்லை.
நான் இங்கு மணிப்பூர் என்ற வார்த்தையை பயன்படுத்தினேன். ஆனால், உண்மையில் அது இப்போது மணிப்பூராகவே இல்லை. அதை இரண்டாக பிளந்து விட்டீர்கள். நான் மணிப்பூர் சென்றபோது, நிவாரண முகாம்களில் தங்கியவர்களை சந்தித்தேன். ஒரு பெண்ணிடம், "உங்களுக்கு என்ன நடந்தது?" என கேட்டேன்.
அதற்கு அப்பெண், "என் ஒரே ஆண் குழந்தையை என் கண் முன்பாக சுட்டு கொலை செய்து விட்டார்கள். இரவு முழுவதும் குழந்தையின் உடலுடன் இருந்தேன். பிறகு பயந்துகொண்டு வீட்டை விட்டு வெளியேறினேன்" என்று என்னிடம் கூறினார்.
நான் அவரிடம், "உங்களுடன் ஏதாவது எடுத்துக்கொண்டு வந்தீர்களா?" என்று கேட்டேன். அதற்கு அந்த பெண்மணி, தான் உடுத்திய உடைகளையும், ஒரு புகைப்படத்தையும் மட்டுமே எடுத்து வந்ததாக என்னிடம் தெரிவித்தார்.
மணிப்பூரில், நீங்கள் இந்தியாவை கொன்று விட்டீர்கள். உங்கள் கொள்கைகள், மணிப்பூரை கொலை செய்யவில்லை. மணிப்பூரில் உள்ள இந்தியாவை கொன்றிருக்கிறது. மணிப்பூர் மக்களை கொலை செய்ததன் மூலம் பாரத மாதாவை கொலை செய்து விட்டீர்கள். நீங்கள் தேசபக்தர்கள் அல்ல, தேசவிரோதிகள்" என ராகுல் காந்தி ஆவேசமாக பேசினார்.
மக்களவையில் எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இன்று பதில் அளித்து பேசினார். அப்போது அவர் பேசுகையில், இந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் எங்களுக்கானது அல்ல.. எதிர்க்கட்சிகளுக்கானது..
கடவுள் மிகவும் அன்பானவர். அவர் கொடுத்த சமிக்கை தான் நம்பிக்கை இல்லா தீர்மானம். இது கடவுளின் ஆசிர்வாதம் என்று நான் நம்புகிறேன்.
2018 இல் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தார்கள். அப்போதும் இப்படித்தான் நடந்தது. அதற்கு அடுத்து நடந்த தேர்தலில் எதிர்க்கட்சிகள் தோல்வி அடைந்தன.

எதிர்க்கட்சிகளின் நம்பிக்கை இல்லா தீர்மானம் எப்போதும் எங்களுக்கு ராசியானது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் எதிர்க்கட்சிகள் நோ பால்களை வீசி உள்ளனர். 2024 தேர்தலில் இதுவரை வெல்லாத இடங்களில் எல்லாம் வென்று புதிய ரெக்கார்ட் படைப்போம்.. எங்கள் மீது நம்பிக்கை வைத்துள்ள நாட்டு மக்களுக்கு நன்றி. வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவும், தேசிய ஜனநாயக கூட்டணியும் அதிக இடங்களில் வெற்றி பெறும். நாட்டின் வளர்ச்சியில் எதிர்கட்சிகளுக்கு அக்கறை இல்லை.
ஊழல் செய்த எதிர்க்கட்சிகள் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன. இந்த தீர்மானத்தில் பேசப்பட்ட அம்சங்கள் ஆச்சர்யமானவை.. நான் கற்பனை கூட செய்து பார்க்கவில்லை.. 3 நாட்களாக விவாதத்தை கவனித்து வருகிறேன். மணிப்பூர் மோதலால் எதிர்க்கட்சிகள் அவையை முடக்கி உள்ளன. எவற்றை எல்லாம் அரசியல் செய்யக்கூடாதோ, அதை எல்லாம் அரசியல் செய்கின்றன. எல்லா தருணங்களிலும் எதிர்க்கட்சிகள் மக்களுக்கு துரோகம் செய்கின்றன." என பிரதமர் மோடி பேசினார்.
வெல்லாத இடங்களில் எல்லாம் வென்று ரெக்கார்ட் படைப்போம் என பிரதமர் மோடி குறிப்பிடுவது தமிழகத்தை தான் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் இந்த முறை அதிக இடங்களில் வென்று திமுகவிற்கு செக் வைக்க பாஜக விரும்புகிறது. அதைத்தான் நேரடியாகவே பிரதமர் மோடி பேசியிருப்பதாகவும் கூறப்படுகிறது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications