டெல்லி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

11 மாநிலங்களில் 59 தொகுதி இடைத்தேர்தல்களில் 40 இடங்களில் பாஜக அமோக வெற்றி!

Google Oneindia Tamil News

டெல்லி: நாடு முழுவதும் 11 மாநிலங்களில் 59 சட்டசபை தொகுதிகளில் தொகுதிகளில் நடைபெற்ற இடைத்தேர்தல்களில் பாஜக 40 இடங்களைக் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

மத்திய பிரதேசத்தில் 28 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நடைபெற்றது. இதில் பாஜக 19 இடங்களிலும் காங்கிரஸ் 9 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் மத்திய பிரதேசத்தில் பாஜகவுக்கு முழு பெரும்பான்மை பலம் கிடைத்திருக்கிறது.

BJP win 40 of 59 By Poll Assembly Seat Elections

குஜராத்தில் 8 தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் 8 இடங்களையுமே பாஜக கைப்பற்றியது. இது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

அதேபோல் உத்தரப்பிரதேசத்தின் 7 தொகுதி இடைத்தேர்தல்களில் 6-ல் பாஜக வென்றது; ஒரு தொகுதியில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றது.

கர்நாடகாவின் 2, தெலுங்கானாவின் ஒரு தொகுதி இடைத்தேர்தலிலும் பாஜக வென்றது. மணிப்பூரில் 5 தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜக 4ல் வென்றது.

பீகார்: 125 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக-ஜேடியூ; ஆர்ஜேடி அணிக்கு 110 இடங்கள்!பீகார்: 125 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியை தக்க வைக்கிறது பாஜக-ஜேடியூ; ஆர்ஜேடி அணிக்கு 110 இடங்கள்!

சத்தீஸ்கரில் 1 தொகுதி இடைத்தேர்தலில் காங்கிஅஸ் வென்றது. ஹரியானாவிலும் 1 தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

ஜார்க்கண்ட் மாநில 2 தொகுதி இடைத்தேர்தல்களில் காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலா ஒரு தொகுதியில் வென்றுள்ளன. ஒடிஷாவில் 2 தொகுதிகள் இடைத்தேர்தல்களிலும் பிஜூ ஜனதா தளம் வாகை சூடியுள்ளது. நாகலாந்து 2 தொகுதி இடைத்தேர்தல்களில் மாநில கட்சிகள் வென்றுள்ளன.

English summary
BJP has won 40 of 59 By Poll Assembly Seat Elections in 11 States.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X