முஸ்லீம் கிராமங்களில் வாக்குப்பதிவை குறைக்க லஞ்சம்.. பாஜக பிரமுகரின் பகீர் வீடியோ.. என்ன நடந்தது
டெல்லி: உத்தரப் பிரதேசத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களில் வாக்குப்பதிவைக் குறைக்க போலீசார் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு பாஜக பிரமுகர் லஞ்சம் கொடுக்க திட்டமிடும் வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.
நமது நாட்டில் ஏழு கட்டங்களாக லோக்சபா தேர்தல் நடக்கும் நிலையில், அதில் 6 கட்ட வாக்குப்பதிவு முடிந்துவிட்டது. கடைசிக் கட்ட தேர்தல் மட்டும் ஜூன் 1ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதன் காரணமாகப் பிரச்சாரம் மிகத் தீவிரமாக நடந்து வருகிறது. இந்தச் சூழலில், தேர்தலில் வாக்குப்பதிவைக் குறைக்க பாஜக பிரமுகர் ஒருவர் போலீசார் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு பாஜக பிரமுகர் லஞ்சம் கொடுக்க திட்டமிடும் வீடியோ இணையத்தில் பகீர் கிளப்பியுள்ளது.
உத்தரப் பிரதேசம்: இதற்கிடையே உத்தரப் பிரதேச மாநிலத்தில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களில் வாக்குப்பதிவைத் தாமதப்படுத்தி அதைக் குறைக்க பாஜக பிரமுகர் முயன்றுள்ளார். இதற்காக அந்த பாஜக பிரமுகர் உள்ளூர் போலீசார் மற்றும் வாக்குச்சாவடி அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க முயன்றுள்ளார். இது தொடர்பான வீடியோ இணையத்தில் இப்போது பகீர் கிளப்பியுள்ளது.
ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஏபிசி நியூஸ் என்ற நிறுவனம் இது தொடர்பான வீடியோவை வெளியிட்டுள்ளது. ட்விட்டர் தளத்தில் டிரெண்டாகும் அந்த வீடியோவில் புவனேஷ் குமார் என்ற பாஜக பிரமுகர், வாக்குப்பதிவைக் குறைக்க என்னவெல்லாம் செய்யலாம் என்பது குறித்துப் பல விஷயங்களை விளக்குகிறார். இதன் மூலம் பாஜகவுக்குப் பலன் கிடைக்கும் என்றும் அவர் கூறுகிறார்.
The ABC has obtained and verified a video showing a BJP worker named Bhuvnesh Kumar Varshney plotting to bribe police and polling officials in UP's Sambhal constituency before the May 7 poll. Watch the full video below with captions. pic.twitter.com/TWeihzlEDL
— Meghna Bali (@meghnabali) May 24, 2024
திட்டம்: கடந்த மே 7ஆம் தேதிக்கு உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் தொகுதியில் லோக்சபா தேர்தல் நடந்த நிலையில், அப்போது இந்த வீடியோ எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. இது தொடர்பாக புவனேஷ் அந்த வீடியோவில், "இங்கு வரும் வாக்காளர்களிடம் போலி ஆவணங்களை எடுத்து வந்ததாக வாக்குச்சாவடி முகவர்கள் குற்றஞ்சாட்டலாம்.. இதில் வாக்குப்பதிவு தாமதமாகும்.
ஆனால், எந்த காரணத்தைக் கொண்டும் வன்முறையைப் பயன்படுத்தாதீர்கள்.. துப்பாக்கி உட்பட எந்தவொரு ஆயுதங்களையும் பயன்படுத்த வேண்டாம்.. தாக்கக் கூட முற்பட வேண்டாம்.. சும்மா அது இது எனக் குற்றஞ்சாட்டி வாக்குச்சாவடியில் குழப்பத்தை ஏற்படுத்துங்கள்.. இதுபோல பதற்றம் இருப்பது தெரிந்தாலே பெண்கள் வாக்குச்சாவடிகளுக்கு வருவதை நிறுத்திவிடுவார்கள்.. இதைச் செய்தாலே வாக்குப்பதிவை நம்மால் குறைத்துக் காட்ட முடியும்" என்றார்.
லஞ்சம்: தொகுதியில் உள்ள மற்ற வாக்குச் சாவடிகளில் இருக்கும் போலீஸ் அதிகாரிகளுக்கும் லஞ்சம் கொடுக்க மற்ற பாஜக பிரமுகர்களையும் அவர் வலியுறுத்துகிறார். இது தொடர்பாக அந்த நபர், "நீங்கள் வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் அவர்களைச் சந்தித்து லஞ்சம் கொடுங்கள்.. அதிகாரிகளுக்கு 500 [ரூபாய்] மற்றும் ஜூனியர்களுக்கு 100 [ரூபாய்] கொடுங்கள் அதுவே போதும். அவர்கள் வேண்டாம் எனச் சொன்னாலும்.. டீ குடிக்கத் தான் இந்த தொகை.. வேறு எதற்கும் இல்லை என்று சொல்லி பாக்கெட்டில் பணத்தை வைத்துவிடுங்கள்" என்றார்.
மிரட்டல்: சம்பல் தொகுதியில் உள்ள முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள கிராமங்களில் பல வாக்காளர்களிடம் ஏபிசி நியூஸ் நேர்காணல் செய்ததாகவும் கூறப்படுகிறது. அப்போது போலீஸ் தங்களிடம் மிரட்டல் விடுத்ததாகவும் அவர்கள் பேச்சு வாக்களிக்க வருவதைத் தடுக்கும் வகையிலேயே இருந்ததாகவும் அவர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே சம்பல் போலீசார் இது தொடர்பாக விளக்கமளித்துள்ளனர். இந்த வீடியோ குறித்து ஏற்கனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் வாக்குப்பதிவுக்கு சில நாட்களுக்கு முன்பே புவனேஷ் குமார் கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்தனர்.
அதேபோல ஓவரி கிராமத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு வீடியோவும் இணையத்தில் பரவியது. அதில் வாக்காளர்களை போலீஸ் அதிகாரிகள் துரத்துவதையும் அவர்களைத் தடியடியால் அடித்து கையில் இருந்த வாக்காளர் சீட்டுகளை பிடுங்குவதும் தெளிவாகத் தெரிந்தது.
-
பூனைக்குட்டி வெளியே வந்துருச்சு! Don't care.. அண்ணாமலை பற்றி அமித் ஷா சொன்ன வார்த்தை! கலகல கமலாலயம்! -
அண்ணாமலையின் புதிய அரசியல் அத்தியாயம்! செப்டம்பர் 14ல் வெளியாகிறது கட்சிப் பெயர்? -
2026 போயே போச்சு.. அதான் 2031 இருக்கே! அமித் ஷா கையில் ’ஆபரேசன் தமிழ்நாடு’.. வங்கத்து கணக்கு எடுபடுமா? -
நயினார் நாகேந்திரனுக்கு.. கேரள ஆளுநர் பதவி! அள்ளிக்கொடுக்கும் பாஜக! அப்போ.. அண்ணாமலை ரூட் சரிதான்! -
ரஜினிகாந்த் உடன் பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திடீர் மீட்டிங்.. போயஸ் கார்டனில் ஆலோசித்தது என்ன? -
திருட்டு நடக்கிறது என்பதால் மால்களை மூடிவிடலாமா? மத்திய அரசுக்கு நக்கலாக கேள்வி எழுப்பிய டெலிகிராம் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
SP Velumani: உங்க சங்காத்தமே வேண்டாம்.. சிங்கப்பூர் சென்ற SP வேலுமணி.. எடப்பாடிக்கு பைனல் மெசேஜ்












Click it and Unblock the Notifications