மோடியின் 70வது பிறந்த நாள்... முதல்வர் எடப்பாடி, ராகுல், ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து
டெல்லி: பிரதமர் மோடியின் 70-வது பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி, தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.
பிரதமர் நரேந்திர மோடியின் 70வது பிறந்த நாள் இன்று பாஜகவினரால் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. மிக எளிய குடும்பத்தில் பிறந்து குஜராத் முதல்வராகவும் நாட்டின் பிரதமராகவும் உயர்ந்தவர் நரேந்திர மோடி.

நள்ளிரவில் டெல்லி கேட்
மோடியின் 70-வது பிறந்த நாள் கொண்டாட்டங்கள் நள்ளிரவு முதலே களைகட்டிவிட்டன. டெல்லி இந்தியா கேட் பகுதியில் நள்ளிரவில் பாஜகவினர் மோடியின் பிறந்த நாளை இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர். தமிழகத்திலும் நேற்றே கோவையில் 70 கிலோ லட்டு தயாரிக்கப்பட்டு பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட்டது. பிரதமர் மோடிக்கு அரசியல் தலைவர்கள் பிறந்த நாள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு நலத் திட்டப் பணிகளையும் பாஜகவினர் மேற்கொண்டும் வருகின்றனர்.

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்
மோடிக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தெரிவித்துள்ள வாழ்த்து: இந்திய வாழ்வியலுக்கும் , இந்திய ஜனநாயக பாரம்பரியத்துக்கும் நீங்கள் ஒரு லட்சியத்துடன் கூடிய விசுவாசம், மதிப்புகள் வழங்கிக் கொண்டிருக்கிறீர்கள். கடவுள் உங்களை எப்போதும் ஆரோக்கியமாகவும் மகிழ்ச்சியாகவும் வைத்திருக்க வேண்டும். தேசம் தொடர்ந்து உங்கள் விலைமதிப்பற்ற சேவைகளைப் பெறுவதற்கு எனது வாழ்த்துகள் மற்றும் பிரார்த்தனைகள். இவ்வாறு ராம்நாத் கோவிந்த் வாழ்த்தியுள்ளார்.

ராகுல், எடப்பாடி, ஸ்டாலின்
பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதேபோல் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓபிஎஸ், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோரும் மோடிக்கு வாழ்த்து கூறியுள்ளனர். தமிழக பாரதிய ஜனதா கட்சியினரும் மோடியின் பிறந்த நாளை பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம் கொண்டாடி வருகின்றனர்

டாக்டர் ராமதாஸ் வாழ்த்து
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தமது ட்விட்டர் பக்கத்தில் பிரதமர் மோடிக்கு வாழ்த்து கூறியுள்ளார். அவரது வாழ்த்து செய்தி: 70 ஆவது பிறந்தநாள் காணும் பிரதமர் நரேந்திர மோடி (@narendramodi )அவர்கள் அனைத்து நலன்கள் மற்றும் வளங்களுடன் நூற்றாண்டு கடந்து ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன். பொது வாழ்வில் மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி சாதனைகளை படைக்க வாழ்த்துகள்! இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.
-
பாஜகவில் இருந்து விலகிய கரு நாகராஜன்.. அண்ணாமலை தொடங்கிய இயக்கத்தில் இணைந்தார்! -
அண்ணாமலை ராஜினாமா ஏற்பு.. இனி அடிப்படை உறுப்பினர் கூட கிடையாது.. பாஜக அதிகாரப்பூர்வ அறிவிப்பு -
Annamalai: பாஜகவில் இருந்து விலகி தனிக்கட்சி ஆரம்பித்தவர்கள்.. அரசியலில் ஜொலித்தார்களா? சறுக்கினரா? -
ஒரே நாளில் 13 லட்சம் உறுப்பினர்கள்.. குவியும் ஆதரவு.. நன்றி தெரிவித்த அண்ணாமலை! -
பாஜகவில் இருந்து விலகிய பெண் பிரபலம்! கை - தலையில் கட்டு போட்டு.. சிரிச்சே ஃபேமஸானாரே! அவரே தான்! -
பாஜக ஓவர்.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை! 20 மணி நேரத்தில் இத்தனை உறுப்பினர்களா! அதிரும் அரசியல் களம் -
10 மணி நேரத்தில் 10 லட்சத்தை தாண்டியது.. குவிந்த ஆதரவு.. உற்சாகத்துடன் அண்ணாமலையே போட்ட பதிவு -
CJP Protest LIVE: கரப்பான் பூச்சி கட்சி போராட்டத்தில்.. இணைந்த இடதுசாரி மாணவர் அமைப்புகள்! -
Annamalai: புதிய கட்சியா.. பாஜகவில் நீடிப்பாரா.. நாளை 12 மணிக்கு முடிவை அறிவிக்கும் அண்ணாமலை? -
அண்ணாமலை புதிய அரசியல் இயக்கம் அறிவிப்பு.. அடுத்த பொதுத்தேர்தலில் போட்டியிட போவதாகவும் அதிரடி -
பாஜகவின் பிளான் 'பி'.. அண்ணாமலை பின்னால் ஆர்எஸ்எஸ்! மாணிக்கம் தாகூர் வார்னிங்! -
திமுக போல தோற்காம இருக்கனும்னா திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற விஜய் அரசு ஓகே சொல்லனும்- நயினார்












Click it and Unblock the Notifications