Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

‛ஓவைசி வீட்டில் கருப்பு மை வீச்சு’.. ‛ஜெய் பாலஸ்தீன்’ கோஷம் தான் காரணமா? டெல்லியில் பெரும் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவரும், ஹைதராபாத் எம்பியுமான அசாதுதீன் ஓவைசியின் டெல்லி இல்லத்தின் மீது கருப்பு மை ஊற்றப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இவர் எம்பியாக பதவியேற்றபோது லோக்சபாவில் ‛ஜெய் பாலஸ்தீன்' என கோஷமிட்டது சர்ச்சையான நிலையில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவராக இருப்பவர் அசாதுதீன் ஓவைசி. இவர் கடந்த 2004 முதல் ஹைதரபாத் லோக்சபா தொகுதியின் எம்பியாக இருந்து வருகிறார்.

asaduddin owaisi

கடந்த 2004, 2009, 2014, 2019 ஆகிய ஆண்டுகளில் வெற்றி பெற்றிருந்த இவர் மீண்டும் சமீபத்தில் முடிந்த லோக்சபா தேர்தலில் மீண்டும் ஹைதரபாத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்த தேர்தலில் ஓவைசி 6,61,981 ஓட்டுகள் பெற்றார். இவரை எதிர்த்து களமிறங்கிய பாஜக வேட்பாளர் கொம்பெல்லா மாதவி லதா 3,23,894 ஓட்டுகள் பெற்றார். காங்கிரஸ் வேட்பாளர் முகமது வாலிஉல்லா சமீர் வெறும் 62,962 ஓட்டுகள் மட்டுமே பெற்றார். இதன்மூலம் 3,38,087 ஓட்டுகள் வித்தியாசத்தில் ஓவைசி மீண்டும் வெற்றி பெற்றார். இதன்மூலம் அவர் ஹைதராபாத் தொகுதியில் இருந்து 5வது முறையாக எம்பியாகி இருக்கிறார்.

இந்நிலையில் தான் கடந்த 24ம் தேதி லோக்சபா கூட்டத்தொடர் தொடங்கியது. இதையடுத்து தேர்தலில் வெற்றி பெற்ற அனைவரும் எம்பிக்களாக பதவியேற்றனர். அசாதுதீன் ஓவைசியும் எம்பியாக பதவியேற்றார். இந்த வேளையில் அவர் ‛ஜெய் பாலஸ்தீன்' என்று முழங்கினார்.இது சர்ச்சையானது. இந்தியாவில் எம்பியாக தேர்வான நிலையில் இன்னொரு நாட்டுக்கு ஆதரவாக அவர் முழக்கமிட்டதால் பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இத்தகைய சூழலில் தான் டெல்லியில் உள்ள அசாதுதீன் ஓவைசியின் வீடு மீது கருப்பு மை ஊற்றப்பட்டுள்ளது. அதாவது நேற்று இரவு அவரது வீட்டுக்கு சென்ற மர்மநபர்கள் கருப்பு மையை ஊற்றிவிட்டு சென்றுள்ளனர். அதாவது வீட்டின் முன்புறம் கதவின் அருகே அசாதுதீன் ஓவைசியின் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. இந்த பெயர் பலகையில் கருப்பு மை ஊற்றப்பட்டுள்ளது. இதுபற்றி தகவல் அறிந்தவுடன் டெல்லி போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை மேற்கொண்டனர்.

மேலும் அசாதுதீன் ஓவைசியின் பெயர் பலகையில் ஊற்றப்பட்டு இருந்த கருப்பு மை அகற்றப்பட்டது. இதற்கு ஓவைசி மற்றும் அவரது கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ஓவைசி மேடைகள் தோறும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தலைவர்களை கடுமையாக விமர்சனம் செய்து வருவதை வாடிக்கையாக வைத்துள்ளார். இந்நிலையில் தான் பாஜகவினர் மீது அவர்கள் சந்தேகம் அடைந்துள்ளனர். இருப்பினும் தற்போதைய சூழலில் அவரது வீட்டின் மீது யார் கருப்பு மை ஊற்றினார்கள்? என்பது தெரியவில்லை. இதுபற்றி போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+