உச்ச நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக பிஆர் கவாய் பதவியேற்றார்.. யார் இவர்?
டெல்லி: உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் இன்று பதவியேற்றார். குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு இவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். 51 வது உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணா நேற்றுடன் ஓய்வு பெற்ற நிலையில் இன்று உச்ச நீதிமன்றத்தின் 52 வது தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்றுள்ளார். அடுத்த 6 மாதத்துக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இவர் பதவி வகிப்பார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
உச்ச நீதிமன்றத்தின் 51-வது தலைமை நீதிபதியாக இருந்த சஞ்சீவ் கண்ணாவின் பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து, புதிய தலைமை நீதிபதியாக பி.ஆர்.கவாய் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்று புதிய தலைமை நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்றுக்கொண்டார். இவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

யார் இந்த பி ஆர் கவாய்?
2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற நீதிபதியாக பி ஆர் கவாய் பதவியேற்றிருந்த நிலையில் அடுத்த 6 ஆண்டுகளில் தலைமை நீதிபதியாக பதவி ஏற்றுள்ளார். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் பதவியேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
நீதிபதி கவாய் அடுத்த ஆறு மாதங்கள் மட்டுமே உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருப்பார். வரும் நவம்பரில் கவாய் ஓய்வு பெறும் நிலையில், சுமார் ஆறு மாதங்களுக்கு அவர் உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருப்பார். 2007ஆம் ஆண்டு நாட்டின் தலைமை நீதிபதியான கே.ஜி. பாலகிருஷ்ணனுக்குப் பிறகு தலைமை நீதிபதி பதவியை வகிக்கும் இரண்டாவது தலித் இவர் ஆவார்.
தேர்தல் பிரமாணப்பத்திரம் செல்லாது வழக்கு
கடந்த 1985 ஆம் ஆண்டு வழக்கறிஞராக பதவியேற்றுக்கொண்ட பிஆர் கவாய், மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றியுள்ளார். பிஆர் கவாய் பல்வேறு முக்கிய வழக்குகளில் தீர்ப்பளித்த நீதிபதிகளின் அமர்வில் அங்கம் வகித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து செய்ததை எதிர்த்த வழக்கு, தேர்தல் பிரமாணப்பத்திரம் செல்லாது என்ற உத்தரவிட்ட வழக்கு, பணமதிப்பிழப்பு நடவடிக்கை செல்லும் என தீர்ப்பளிக்கப்பட்ட வழக்கு ஆகிய வழக்குகளில் தீர்ப்பளித்த அமர்வில் இவரும் இடம் பெற்று இருந்தார்.
-
13 நாள் மனைவியுடன் கணவர் பேசாதது மனரீதியான கொடுமை அல்ல! கோவை இளைஞர் வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி -
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்? -
கங்கை அமரன் போட்ட போடு! பாரதிராஜாவின் 500 கோடி சொத்தில் வெடித்த சர்ச்சை! நீலாங்கரை பங்களா யாருக்கு -
40,000 கோடி முதலீட்டில் கப்பல் தளம்! அமைச்சர் கீர்த்தனாவின் மாஸ்டர் மூவ்! ஆனால் கனிமொழி சொல்வதென்ன -
ராஜ்மோகன் மெகா அறிவிப்பு.. அரசு பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு திட்டம்.. 5000 அரசுப் பள்ளிகளுக்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு வருகிறேன்! முடிவை அறிவித்தார் லாரன்ஸ்! விஜய்யின் தவெகவா? அண்ணாமலை இயக்கமா? -
"மீட்டிங் போட்டு.. யாரும் கமிஷன் தர வேண்டாம்னு சொன்னவரு.." ஆதவ் அர்ஜுனாவை புகழ்ந்து தள்ளிய ராஜ்மோகன் -
10 பைசா செலவு இல்லாம.. ரூ.7 லட்சம் கிடைக்கும்.. எத்தனை பேருக்கு இப்படியொரு திட்டம் இருப்பது தெரியும்? -
சிபிஐ எந்த கூட்டணியிலும் இல்லை.. தவெகவுக்கு எதிராக போராட்டத்தை அறிவித்த வீரபாண்டியன்! -
கடன் சுமையை சமாளிக்க முடியல.. அதிமுகவினர் தவெகவிற்கு தாவ இதுதான் காரணமா? ஆட்டம் காணும் அடித்தளம்!












Click it and Unblock the Notifications