பொடி வச்சு பேசிய ஜெய்சங்கர்.. டிரம்புக்கு அனுப்பிய ஸ்ட்ராங் மெசேஜ்! BRICS தான் இனி எல்லாம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: சமீபத்தில் நாடாளுமன்றத்தில் பிரிக்ஸ் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேசியிருந்தது மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது. இவரது பேச்சு அமெரிக்க அதிபர் டிரம்ப்புக்கு அனுப்பிய வலுவான மெசேஜ் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

வரி விஷயத்தில் டிரம்ப்பின் ஆட்டம் கொஞ்சம் ஓவராகவே போய்க்கொண்டிருக்கிறது. அவர் வீசும் கத்தி இந்தியா மீது எப்போது திரும்பும் என்று சொல்லப்பட்டு வரும் நிலையில்.. ஜெய்சங்கரின் பேச்சு அமெரிக்காவால் கூர்ந்து கவனிக்கப்பட்டிருக்கிறது.

BRICS Jaishankar international

வரி எனும் ஆயுதத்தை அமெரிக்கா கையில் எடுத்த பிறகு பிரிக்ஸ் அமைப்பு சிதைந்துவிட்டதா? அதிலிருக்கும் இந்தியா என்ன நிலைப்பாட்டில் இருக்கிறது என்று மக்களவையில் எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பப்பட்டிருந்தது. இதற்கு பதிலளித்து பேசிய ஜெய்சங்கர், "கடந்த 20 ஆண்டுகளாக பிரிக்ஸ் அமைப்பு சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இந்த காலத்தில் புதிய உறுப்பினர்கள் பிரிக்ஸில் இணைந்திருக்கின்றனர். நாங்கள் சமகால பிரச்சனை பற்றி தீவிரமாக விவாதித்து வருகிறோம்.

ஆப்கானிஸ்தானில் அமைதி, காசாவில் நிரந்தர போர்நிறுத்தம், லெபனான் நிலைமை, சூடான் மற்றும் ஹைட்டியில் மனித உரிமை மீறல்கள், உக்ரைன் மற்றும் அதைச் சுற்றி நிகழும் அசாதாரண சூழல், சிரியாவின் பிராந்திய ஒருமைப்பாடு ஆகியவை பற்றி நாங்கள் விவாதித்து அதற்கான தீர்வை நோக்கி நகர்கிறோம். பிரிக்ஸ் அமைப்பு நிலையான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. நாங்கள் பன்முகத்தன்மையுடன் உலகளாவிய ஒழுங்கை கட்டி எழுப்ப விரும்புகிறோம்.

மற்ற அமைப்புகளில் ஒரு நாடு மட்டும் தலைமை பொறுப்பில் இருந்து, மற்ற நாடுகளை ஆட்டி படைக்கும். பிரிக்ஸ் இப்படி செயல்படவில்லை. அதன் உறுப்பினர்கள் அனைவருக்கும் தலைமைப்பண்பை பிரிக்ஸ் வழங்குகிறது. இங்கு நாங்கள்தான் தலைவர்கள்" என்று கூறியுள்ளார்.

பிரிக்ஸ் நாடுகள் எப்போது தப்பு செய்யும்.. எப்போது வரி போட்டு அதை காலி செய்யலாம் என கண்களில் விளக்கெண்ணைய்யை ஊற்றி பார்த்துக்கொண்டிருக்கும் டிரம்ப்புக்கு ஜெய்சங்கர் நச் பதிலடியை கொடுத்திருப்பதாக சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். தற்போதைய பாஜக தலைமையிலான மத்திய அரசு வலதுசாரி சித்தாந்தத்தை கொண்டிருந்தாலும் கூட, வெளியுறவுத்துறை உறவில் ஏற்பட்ட மாற்றம் பிரிக்ஸ் அமைப்பில் இந்தியாவின் உறவை மேலும் ஆழப்படுத்தியிருக்கிறது. அதன் வெளிப்பாடுதான் ஜெய்சங்கரின் பேச்சு என்றும் சிலர் கூறுகின்றனர்.

அமெரிக்காவின் ஆட்டம் இப்படியே ஓவராக போய்க்கொண்டிருந்தால், பிரிக்ஸ் கரன்சி வேண்டாம் என்று சொன்ன ஜெய்சங்கரே, இந்தியா பிரிக்ஸ் கரன்சியை நோக்கி நகர்கிறது என்று சொல்லுவார் பாருங்க என சர்வதேச அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

2006ம் ஆண்டு பிரேசில், இந்தியா, சீனா, ரஷ்யா என 5 நாடுகள் சேர்ந்து பிரிக்(BRIC) எனும் அமைப்பை உருவாக்கின. இதில் 2010ல் தென்னாப்பிரிக்கா இணைந்தது. எனவே பிரிக், பிரிக்ஸாக (BRICS) மாறியது. இப்போது இந்த அமைப்பில் 11 நாடுகள் உறுப்பினர்களாகவும், 9 நாடுகள் பார்வையாளர்களாகவும் இருக்கின்றன. ஆசியாவில் பிரிக்ஸ் இல்லாமல் எதுவும் நடக்காது என்கிற நிலை உருவாகியிருக்கிறது. டிரம்பின் வரி அச்சுறுத்தல் காரணமாக இந்த அமைப்பில் மேலும் சில நாடுகள் இணைந்திருக்கின்றன.

இந்த அமைப்பு தொடர்ந்து பலம் பெற்று வருவதற்கு முக்கியமான காரணம் பன்முகத்தன்மைதான். ஐரோப்பாவை எடுத்துக்கொண்டால் பிரிட்டன் சொல்வதுதான் சட்டம். G7 நாடுகளை எடுத்துக்கொண்டால் அமெரிக்கா சொல்வதுதான் சட்டம். ஆனால் பிரிக்ஸில் அப்படி கிடையாது. இங்கு சீனா மிகுந்த அதிகாரம் கொண்டு இருந்தாலும் அதன் பப்பு நம்மிடம் வேகாது. ரஷ்யாவை பற்றி பெரிய கவலை நமக்கு கிடையாது. ஏனெனில் அது நமது நட்பு நாடு. இந்த 2 நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகளை விட இந்தியா சீனியர் என்பதால் BRICS நமக்கு பாதுகாப்பாக அமைப்பாக இருக்கிறது.

பிரிக்ஸ் பற்றி டிரம்ப் புலம்பி வரும் நிலையில், ஜெய்சங்கரின் பேச்சு சர்வதேச அளவில் மிகுந்த கவனம் பெற்றிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+