அடேங்கப்பா BRICS கரன்சியால் இந்தியாவுக்கு இவ்வளவு நன்மைகளா.. நாடு வேற லெவலில் மாற போகுது!
டெல்லி: உலகின் பல நாடுகளை போலவே இந்தியாவும் 'டாலர்' எனப்படும் அமெரிக்க கரன்சியின் பிடியில் சிக்கியிருக்கிறது. ஆனால் இதற்கு மாற்றாக 'பிரிக்ஸ்' நாடுகள் புதிய கரன்சியை உருவாக்கி வருகின்றன. இது நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டால், பிரிக்ஸ் அமைப்பில் உள்ள மற்ற எந்த நாடுகளை காட்டிலும் இந்தியாதான் அதிகம் பயனடையும்.
இந்தியாவில் ஏதாவது ஒரு பொருள் வாங்க வேண்டும் என்றால் ரூபாய் நோட்டை கொடுத்து வாங்கிவிடுகிறோம். ஆனால், எல்லா பொருட்களும் இந்தியாவில் கிடைப்பதில்லையே. குறிப்பாக பெட்ரோல், டீசல் போன்றவை.. இவற்றை வளைகுடா நாடுகள்தான் விற்கின்றன. அவர்களிடம் நமது ரூபாய் நோட்டை கொடுத்தால் வாங்க மாட்டார்கள். அதற்காக அவர்களுடைய கரன்சியான 'திணார்'-ஐ நாம் இருப்பு வைத்துகொண்டு கொடுத்து வாங்க முடியாது. ஏனெனில் பெட்ரோல் மட்டும்தான் அங்கு கிடைக்கும், மற்றபடி நமக்கு தேவையான உலோகங்கள் தென்னாப்பிரிக்காவில்தான் கிடைக்கிறது.

தென்னாப்பிரிக்காவில் திணாரை நீட்ட முடியுமா? எனவே அவர்கள் நாட்டு கரன்சியை கொடுக்க வேண்டும். இதற்கெல்லாம் எங்கே போவது? எனவேதான் ஒரு பொதுவான கரன்சி தேவைப்படுகிறது. இந்த இடத்தை அமெரிக்காவின் கரன்சியான டாலர் வெற்றிகரமாக பிடித்து வைத்திருக்கிறது. டாலரை வைத்து வளைகுடாவில் கச்சா எண்ணெய்யையும், தென்னாப்பிரிக்காவில் உலோகங்களையும், ஆஸ்திரேலியாவில் நிலக்கரியையும் வாங்க முடியும்.
ஆனால் இதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. ஒன்று அந்நிய செலாவனி கையிருப்பு. அதாவது டாலர்தான் எல்லாத்துக்கும் தேவை என்பதால் அதை எப்போதுமே தேவையான அளவுக்கு இருப்பு வைத்திருக்க வேண்டும். இரண்டாவது சில்லறை செலவுகளுக்கு டாலரை பயன்படுத்த முடியாது. மூன்றாவது டாலருக்கு நிகராக நமது ரூபாய் மதிப்பை மெயின்டெயின் செய்வது. இதெல்லாம் கொஞ்சம் கஷ்டமான வேலைதான். மட்டுமல்லாது வெட்டி வேலையும் கூட.
ஏனெனில் நாம் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு என பொதுவான பணம் இருந்தால், மேற்குறிப்பிட்ட பிரச்னைகள் பற்றி கவலைப்பட அவசியம் இருக்காது. இதற்கான முயற்சியைதான் பிரிக்ஸ் அமைப்பு செய்து வருகிறது. பிரேசில், ரஷ்யா,இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா நாடுகளின் கூட்டமைப்புதான் பிரிக்ஸ்.
இந்த நாடுகளின் தலைவர்கள் ஆண்டுக்கு ஒருமுறை சந்தித்து பேசிக்கொள்கிறார்கள். இதன் மூலம் இந்த நாடுகளின் உறவு எந்த சிக்கலும் இல்லாமல் இருக்கிறது. மட்டுமல்லாது வணிகமும் அதிகரிக்க வழிவகை செய்கிறது. சமீபத்தில் நடந்த பிரிக்ஸ் கூட்டத்தில் பொதுவான கரன்சியை கொண்டுவருவது என்று பேசப்பட்டிருக்கிறது. இப்படி நடந்தால் இந்தியாவுக்கு அதிக லாபம் இருக்கிறது.
ஏனெினல் இந்தியா வளைகுடா நாடுகளில் வாங்கும் கச்சா எண்ணெய்யின் அளவை விட ரஷ்யாவிடம் அதிகம் வாங்க தொடங்கியுள்ளது. வளைகுடா எனில் டாலரை கொடுக்க வேண்டும். இதுவே ரஷ்யா எனில் பிரிக்ஸ் கரன்சியை கொடுத்துவிடலாம். அதேபோல அந்நிய செலாவணி குறித்து எந்த கவலையும் தேவையில்லை. ஏனெில் டாலர் இல்லை என்றாலும் கூட இந்தியாவால் சீனாவிலிருந்து எலக்ட்ரானிக் பொருட்களையும், தென்னாப்பிரிக்காவிலிருந்து உலோகங்களையும், பிரேசிலிலிருந்து தங்கம் மற்றும் செப்பு தாதுகளையும் வாங்க முடியும்.
மட்டுமல்லாது ஏற்றுமதி இறக்குமதி வேகமாக நடக்கும். இறக்குமதிக்காக நாம் செய்யும் செலவுகள் குறையும். மிக முக்கியமாக பிரிக்ஸ் கரன்சி, மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு இடையேயான ஒருங்கிணைந்த சந்தையை பலமாக கட்டமைக்கும்.
யாருக்கு தெரியும், இப்போது சவுதி, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு வேலைக்கு செல்லும் இந்தியர்கள், பிரிக்ஸ் கரன்சி வந்த பிறகு ரஷ்யாவுக்கும், சீனாவுக்கும் போகலாம். ஆக எப்படி பார்த்தாலும் நமக்கு இந்த விஷயத்தில் நல்ல லாபம் இருக்கிறது. எனவே மத்திய அரசு இந்த வாய்ப்பை தவறவிடக்கூடாது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications