அமெரிக்காவை கலங்கவிடும் ‛பிரிக்ஸ்'.. தலைமையேற்ற இந்தியா.. லோகோவை கவனிச்சீங்களா?
டெல்லி: அமெரிக்காவை கலங்கடிக்கும் ‛பிரிக்ஸ்' அமைப்பின் 2026ம் ஆண்டுக்கான உச்சி மாநாட்டுக்கு நம் நாடு தலைமையேற்றுள்ளது. இதையடுத்து நம் நாட்டின் சார்பில் ‛பிரிக்ஸ்' உச்சி மாநாட்டுக்கான லோகோ மற்றும் கருப்பொருள் இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

‛பிரிக்ஸ்' அமைப்பில் மொத்தம் 10 நாடுகள் உள்ளன. இந்த கூட்டமைப்புக்கு ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு நாடுகள் தலைமையில் உச்சி மாநாடு நடக்கும். அந்த வகையில் 20206ம் ஆண்டுக்கான தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றுள்ளது. இன்று அதிகாரப்பூர்வமாக ‛பிரிக்ஸ்' தலைவராக நம் நாடு உருவானது.
மேலும் இந்த ஆண்டு நம் நாட்டில் தான் ‛பிரிக்ஸ்' கூட்டமைப்பின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதற்காக சிறப்பு லோகோ, ‛தீம்', தனி இணையதளம் உள்ளிட்டவை உருவாக்கப்பட்டுள்ளது.
டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்று இந்தியா தலைமையிலான ‛பிரிக்ஸ்' உச்சிமாநாட்டுக்கான லோகோ மற்றும் ‛தீம்' (கருப்புபொருள்) மற்றும் அதற்கான அதிகாரப்பூர்வ இணையதளம் உள்ளிட்டவற்றை அறிமுகம் செய்தார். இந்த சின்னம் நம் நாட்டின் தேசிய மலரான தாமரையை பிரதிபலிக்கும் வகையில் உள்ளது. ஒவ்வொரு இதழ்களும் பிரிக்ஸ் நாடுகளின் நிறத்தை குறிக்கிறது.
தாமரை மலரின் மையப்பகுதியில் இருகைகளால் கும்பிட்டு வரவேற்பது போல் லோகோ அமைக்கப்பட்டுள்ளது. இதுபற்றி ஜெய்சங்கர் கூறியதாவது: ‛‛ 2026ல் பிரிக்ஸ் அமைப்பு தனது 20ம் ஆண்டை நிறைவு செய்யும். வளரும் பொருளாதார நாடுகளுக்கான ஒரு முக்கியமான ஒத்துழைப்பு அமைப்பாக இது உருவாகி உள்ளது. பிரிக்ஸ் உறுப்பு நாடுகளிடையே உள்ள ஒத்துழைப்பு, பகிரப்பட்ட சவால்களை சமநிலையுடனும் உள்ளடக்கிய முறையிலும் தீர்க்க உதவும் என்ற இந்தியாவின் நம்பிக்கையை இது பிரதிபலிக்கிறது
இன்று வெளியிடப்பட்ட சின்னம் மேற்கூறிய நடைமுறையை பிரதிபலிக்கும். சின்னத்தில் உள்ள இதழ்களின் நிறங்கள் பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் நிறங்ளை குறிப்பதோடு, ஒற்றுமை, பன்முகத்தன்மை மற்றும் அமைப்பு உருவானதன் நோக்கம் உள்ளிட்டவற்றை தெளிவாக எடுத்துரைக்கிறது.
மேலும் பிரிக்ஸ் அமைப்பு ஒவ்வொரு நாடுகளின் தனித்துவ அடையாளத்தை மதிக்கும். அதேபோல் பிற நாடுகளுடன் சேர்ந்து பங்களிப்பு செய்து பலம் பெறும் என்பதையும் இந்த சின்னம் வெளிப்படுத்துகிறது. உலகளாவிய நாடுகளின் நலன்களை மேம்படுத்தும் வகையில் பிரிக்ஸ் அமைப்பின் சாத்தியமுள்ள புதிய நாடுகளை ஒன்றிணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது'' என்றார்.
இந்த லோகோ என்பது மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் போட்டி வைத்து தேர்வு செய்தது. அதில் சுதீப் சுபாஷ் காந்தி இந்த லோகோவை உருவாக்கி உள்ளார். அதுமட்டுமின்றி இந்த முறை ‛தீம்' என்பது ‛மனிதநேயத்திற்கே முன்னுரிமை மற்றும் மக்களை மையப்படுத்திய அணுகுமுறை' என்பது கருப்பொருளாக கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போது உலக நாடுகள் இடையே மோதல் அதிகரித்துள்ளது. மக்கள் கொத்து கொத்தாக கொல்லப்படுகின்றனர். இதனால் மனிதநேயத்தை முன்னுறுத்தியும், மக்களை அரவணைக்கும் அணுகுமுறை அவசியம் என்பதை அடிப்படையாக வைத்து இந்த ‛தீம்' உருவாக்கப்பட்டுள்ளது.
பிரிக்ஸ் கூட்டமைப்பை பொறுத்தவரை மொத்தம் 10 நாடுகள் உள்ளன. பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ஈரான், ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகள் உள்ளன. மேலும் பல நாடுகள் இந்த கூட்டமைப்பில் இணைய ஆர்வம் காட்டி வருகின்றன. இதில் பிரேசில், சீனா, ரஷ்யா, ஈரான் உள்ளிட்ட அமெரிக்காவுக்கு எதிரியாக உள்ளன. நம் நாட்டுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே தற்போது பிரச்சனை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த கூட்டமைப்பில் உள்ள பல நாடுகளும் டிரம்பின் வரி விதிப்பால் பாதிக்கப்பட்டுள்ளன.
இதனால் அமெரிக்காவின் டாலரின் மதிப்பை குறைக்கம் வகையில் ‛பிரிக்ஸ்' நாணயம் உள்பட பல்வேறு விவகாரங்களை ‛பிரிக்ஸ்' கூட்டமைப்பு பரிசீலனையில் உள்ளது. இது டிரம்பின் தூக்கத்தை கலைத்துள்ளது. இப்படியான சூழலில் தான் ‛பிரிக்ஸ்' கூட்டமைப்பின் தலைமை பொறுப்பை நம் நாடு ஏற்றுள்ளது. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாட்டுக்கான தேதி இன்னும் வெளியாகவில்லை. இதுபற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.
-
இந்தியாவிற்கு மிகப்பெரிய அறிவிப்பு.. சுரேஷ் கோபி vs நரேந்திர மோடி.. அடுத்தடுத்து கவனித்தீர்களா? -
"மறைமுக ஊரடங்கு?" இந்தியாவை மெல்ல சுத்துபோடும் ஆபத்து.. கூட்டி கழிச்சு பாருங்க எல்லாம் புரியும் -
ஹார்முஸ் நீரிணையை கடந்து.. இந்தியாவுக்கு வந்த 2 எல்பிஜி கப்பல்கள்! ஆனால் பிரச்சனை இன்னும் முடியல! -
1 மணி நேரம் நின்றாலும் ஒரு சொட்டு பெட்ரோல் இல்லை! ஹைதராபாத்தில் நிலைமை இதுதான்.. கள நிலவரம் இதுதான்! -
போருக்கு நடுவே துபாய் செய்த காரியம்.. நெகிழ்ந்து போன இந்தியர்கள்.. இதை யாரும் எதிர்பார்க்கல -
பெட்ரோல், டீசல் பற்றாக்குறை என பரவும் வதந்தி.. யாரும் நம்பாதீங்க! விளக்கமளித்த மத்திய அரசு -
அனைத்து அத்தியாவசிய மருந்துகளின் விலையும் உயர்கிறது.. ஏப்ரல் 1 முதல் அமல்.. அதிர்ச்சி அறிவிப்பு -
இந்தியாவுக்கு வழிவிட்ட ஈரான்.. கேஸ் தட்டுப்பாடு சரியாகுமா? இல்லத்தரசிகளே இதை கவனியுங்க! -
"LPG கனெக்ஷன் மொத்தமாக நிறுத்தப்படும்.." மத்திய அரசு மிக முக்கிய எச்சரிக்கை! என்ன மேட்டர்? -
அமெரிக்கா அனுமதி கொடுத்தும்.. தயக்கம் காட்டும் இந்தியா! ஈரான் எண்ணெய் வாங்குவதில் பெரிய சிக்கல்! -
ஈரானை அரவணைக்கும் இந்தியா.. மீண்டும் தொடங்கும் கச்சா எண்ணெய் வர்த்தகம்? மத்திய அரசு பிளான் -
ஈரானுடன் ரகசிய டீல்.. சைலன்ட்டாக அம்பானி சம்பவம்.. 2019க்கு பின் இந்தியா வரும் 50 லட்சம் பேரல் ஆயில்












Click it and Unblock the Notifications