கியரை மாற்றிய இந்தியா.. BRICS காட்டிய வெளிச்சம்! சிறு குறு தொழில்கள் இனி டாப்ல போகும்
டெல்லி: பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனி பேமென்ட் சிஸ்டத்தை உருவாக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. இது இந்தியாவில் உள்ள சிறு,குறு மற்றும் நடுத்தர தொழில்(எம்எஸ்எம்இ) நிறுவனங்களுக்கு பெரிய அளவில் உதவும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர்.
இந்திய பொருளாதாரத்தில் எம்எஸ்எம்இ துறை தவிர்க்க முடியாததாக இருக்கிறது. சுமார் 12 கோடி வேலை வாய்ப்புகளை இது உருவாக்குகிறது. இதனை பிரிக்ஸ் பேமென்ட் சிஸ்டம் பூஸ்ட்-அப் செய்யும் என்றும் சொல்லப்படுகிறது.

பிரிக்ஸில் முக்கிய முடிவு
கடந்த வாரம் பிரேசில் தலைநகர் ரியோ-டி-ஜெனிரோவில், பிரிக்ஸ் நிர்வாகிகளின் முக்கிய கூட்டம் நடைபெற்றிருந்தது. இதில் இந்தியா சார்பில், வெளியுறவுத்துறை அதிகாரியான டம்மு ரவி பங்கேற்றிருந்தார். இக்கூட்டத்தில் பிரிக்ஸ் நாடுகளுக்கு என தனி பண பரிவர்த்தனை முறையை உருவாக்குவது என்றும், அதை அனைத்து பிரிக்ஸ் நாடுகளும் பயன்படுத்துவது என்றும் முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.
பிரிக்ஸ் கிளியர்
இதற்கு பெயர் 'பிரிக்ஸ் கிளியர்'. சரி இது எப்படி இந்தியாவில் உள்ள சிறு குறு தொழில் நிறுவனங்களுக்கு உதவும் என்று கேட்கிறீர்களா? பதில் இருக்கு. முதல் விஷயம் இது சர்வதேச வணிகத்தை சொந்த நாணயத்தில் ஊக்குவிக்கிறது.
உதாரணமாக, திருப்பூரில் உள்ள ஒரு எம்எஸ்எம்இ பணியன் தயாரிப்பு நிறுவனம், தனது தயாரிப்புகளை நவீனமாக்க புதிய மெஷின்களை ரஷ்யாவிலிருந்து வாங்க விரும்புகிறார் எனில், அதற்கான பணத்தை நம்மூர் கரன்சியான ரூபாயில் கொடுக்கலாம். இப்போது நாம் 'ஸ்விப்ட்' எனும் அமெரிக்க பணப்பரிவர்த்தனை முறையை பயன்படுத்துகிறோம். இந்த முறையில் அமெரிக்க டாலர் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். இந்திய ரூபாய் எடுபடாது. 'பிரிக்ஸ் கிளியர்' எனும் பண பரிமாற்ற முறையின் மிகப்பெரிய பிளஸ் பாயிண்ட் இதுதான்.
எளிதான வர்த்தகம்
அதேபோல 'பிரிக்ஸ் கிளியர்-ஐ' பயன்படுத்துவதற்காக கட்டணம் குறைவு. இந்தியாவிலிருந்து, ரஷ்யாவுக்கும், தென்னாப்பிரிக்காவுக்கும் பணம் அனுப்பும் வகையில் இந்த பேமென்ட் சிஸ்டம் உருவாக்கப்பட்டிருக்கிறது. இதனை எம்எஸ்எம்இ நிறுவனங்கள் தற்போது நேரடியாக பயன்படுத்த முடியாது. அதாவது கூகுள் பே போல பயன்படுத்த முடியாது. ஆனால் விரைவில் இப்படி பயன்படுத்துவதற்கான சூழல் உருவாகும். அப்படியெனில் யோசித்து பாருங்கள் தென்னாப்பிரிக்காவில் உள்ள ஒருவருடன் இந்திய நிறுவனங்கள் எளிதாக வர்த்தகத்தை நடத்த முடியும்.
அச்சமில்லாத வர்த்தகம்
இந்தியாவின் வளர்ச்சிக்கு 'பிரிக்ஸ் கிளியர்' மிகவும் முக்கியமானது. ஏனெனில், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் உருவாக்கிய 'ஸ்விப்ட்' எனும் பணப்பரிவர்த்தனை முறையைதான் நாம் இப்போது வரை பயன்படுத்தி வருகிறோம். ஆனால் அதை பயன்படுத்த அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதெல்லாம் கூட அட்ஜெஸ்ட் செய்துக்கொள்ளலாம். ஆனால் அமெரிக்காவுடன் ஏதாவது பஞ்சாயத்து வந்தால் உடனே, 'ஸ்விப்ட்'-லிருந்து நம்மை வெளியே தூக்கிவிடுவார்கள். இந்த அச்சம் காரணமாகத்தான், புதிய பண பரிவர்த்தனை முறையை பிரிக்ஸ் உருவாக்க தொடங்கியுள்ளது.
இந்தியா ஏற்குமா?
எம்எஸ்எம்இ வளர்ச்சிக்கு இந்த பேமென்ட் சிஸ்டம் உதவுகிறது என்பதால், இந்தியாவுக்கு இது முக்கியமானது. நாடு முழுவதும் 6.3 கோடி எம்எஸ்எம்இ நிறுவனங்கள் இருக்கின்றன. இது 12 கோடி பேருக்கு வேலைவாய்ப்பை உருவாக்குகிறது. மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30% வரைலும், ஏற்றுமதியில் 48% வரையிலும் இந்நிறுவனங்கள் பங்களிக்கின்றன. குறிப்பாக கிராமப்புறத்தில் வளர்ச்சிக்கும், பெண்களின் பங்களிப்புக்கும் எம்எஸ்எம்இ துறை உதவுகிறது.
ஆக கூட்டி கழித்து பார்த்தால் பிரிக்ஸ் கிளியர் பேமென்ட் சிஸ்டம் நமக்கு லாபம்தான். இந்தியா இதை ஏற்றுக்கொள்ளுமா என்பதுதான் மில்லியன் டாலர் கேள்வி.
-
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை -
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி












Click it and Unblock the Notifications