BRICS Unites: பிரிக்ஸ் காட்டும் வழி.. கெட்டியாக பிடித்துக்கொண்ட இந்தியா! அமெரிக்கா அலறுதே!
டெல்லி: ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கெல்லாம் வரி போடுவோம் என்று அறிவித்த அமெரிக்கா, இந்தியா மீது 50% வரியை போட்டிருக்கிறது. இதனை சமாளிக்க பிரிக்ஸ் நாடுகளுடனான வர்த்தகத்தில் இந்தியா கவனம் செலுத்த தொடங்கியிருக்கிறது. பிரிக்ஸ் அமைப்பில் இந்தியா முழுமையாக பங்கேற்கும் போது, அமெரிக்க நிச்சயம் பலத்த அடி வாங்கும். இதற்கிடையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இந்தியா வந்திருப்பது கவனம் பெற்றிருக்கிறது.
சீனா வெளியூர் துறை அமைச்சர் இந்தியா வந்து இருப்பதற்கும், அமெரிக்கா அதன் சொந்த நாணயமான டாலரின் மதிப்பை இழப்பதற்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. இந்தியா வெளிநாடுகளில் இருந்து பல்வேறு பொருட்களை வாங்குகிறது. குறிப்பாக கச்சா எண்ணெய், இயந்திரங்கள், மின்னணு பொருட்கள், ரத்தின கற்கள், நகைகள், உரங்கள் மற்றும் ரசாயனங்கள் ஆகியவற்றை வெளிநாடுகளில் இருந்து டாலர்களைக் கொண்டு நாம் இறக்குமதி செய்கிறோம்.

அந்நிய செலாவணி
எனவே அமெரிக்க டாலர் நமக்கு மிக முக்கியமானதாகும். இதைத்தான் அந்நிய செலாவணி என்று சொல்கிறார்கள். அதாவது வெளிநாடுகளில் இருந்து பொருட்களை வாங்கி உள்ளூர் தேவைகளுக்கு பயன்படுத்த தேவையான வெளிநாட்டு கரன்சியான டாலர் கையிருப்பைத்தான் அந்நிய செலாவணி என்று குறிப்பிடுகிறார்கள். கடந்த 2024 ஆம் ஆண்டு நம் கையில் 74.89 பில்லியன் அமெரிக்க டாலர் கையிருப்பு இருந்தது. இது முன் எப்போதும் இருந்ததை விட அதிகமான கையிருப்பாகும்.
ஆக அமெரிக்க டாலர் வேண்டுமெனில் அமெரிக்காவுடன் நாம் வர்த்தகம் செய்ய வேண்டும். ஆனால் அமெரிக்காதான் நமக்கு வரி போட்டு விட்டதே! இதனால் வர்த்தகம் பாதிக்கப்பட்டிருக்கிறது. எனவே வேறு வழிகளில் டாலர் வாங்குவதை யோசிக்காமல், டாலரையே தவிர்ப்பது குறித்து இந்தியா யோசித்து வருகிறது.
பிரிக்ஸும் டாலரும்
அதாவது கச்சா எண்ணெய், இயந்திரங்கள் உள்ளிட்ட பொருட்கள் வாங்கதான் டாலர்கள் தேவை. இதே பொருட்களை பிரிக்ஸ் நாடுகள் தங்கள் சொந்த கரன்சியில் விற்பனை செய்ய தயாராக இருக்கிறது. உதாரணத்திற்கு ரஷ்யாவை எடுத்துக் கொள்ளுங்கள்.
ரஷ்யாவில் இருந்து நாம் பெருமளவு கச்சா எண்ணெய் இறக்குமதி செய்து வருகிறோம். ரஷ்யாவுக்கு இதற்காக அமெரிக்க டாலரில் பணம் கொடுப்பதில்லை, மாறாக நம் உள்ளூர் நாணயமான ரூபாயில் பணத்தை கொடுக்கிறோம். அவர்கள் அதை வாங்கிக் கொண்டு கச்சா எண்ணெய்யை நமக்கு விற்பனை செய்கிறார்கள்.
சொந்த நாணயம்
அதேபோல இயந்திரங்கள், மின்னணு சாதனங்கள், ரசாயன பொருட்கள் மற்றும் இதர நுகர்வோர் பொருட்களை சீனாவில் இருந்து நம்மால் வாங்க முடியும். கடந்த ஆண்டு மட்டும் சுமார் 127.71 பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு சீனாவுடன் நாம் வர்த்தகம் செய்திருக்கிறோம். இதில் 113.46 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவிற்கு நாம் சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்து இருக்கிறோம். இனி வரும் காலங்களில் டாலர்களில் அல்லாமல் தனது சொந்த நாணயத்தில் வர்த்தகம் செய்ய இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்ய சீனா தயாராக இருக்கிறது.
இந்தியா-சீனா முயற்சி
அதாவது நாம் வாங்கும் பொருட்களுக்கு இனி அமெரிக்க டாலரில் பணம் தரத் தேவையில்லை. மாறாக ரூபாயில் பணம் தந்தால் போதுமானது. அப்படியெனில் நமக்கு ஓராண்டுக்கு ஏறத்தாழ 114 பில்லியன் அமெரிக்க டாலர் மிச்சமாகும். ஒருபுறம் டாலர் கையிருப்பு அதிகரிக்கும், மறுபுறம் நம்முடைய இந்திய ரூபாயின் மதிப்பும் உயரம். இந்த வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய இந்தியா-சீனா தொடர்ந்து முயற்சித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாகத்தான் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் இன்று இந்தியா வந்திருக்கிறார். அவர் பிரதமர் மோடியை சந்தித்து வர்த்தக விஷயங்கள் குறித்து உரையாடுவார் இதில் இருதரப்பிலும் சில ஒப்பந்தங்கள் எட்டப்பட வாய்ப்புள்ளன. அது சாத்தியமானால் நமக்கு டாலரின் அவசியம் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து விடும். எனவே அமெரிக்கா எவ்வளவு வரி போட்டாலும் அது நமக்கு பெரிய அளவுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது.
-
பாகிஸ்தான் கூட டிரம்ப்பை மதிக்கல.. அமெரிக்காவை சீண்டும் ஷெரீப் அரசு.. இனி தான் இருக்கு சம்பவம்! -
யுரேனியத்தை ஒப்படைத்தால் கூட.. ஈரான் தப்பிக்காது! டிரம்ப் கொடுத்த பகிரங்க வார்னிங்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
அண்ணன் வர்றாரு! என்னப்பா ஆரம்பிச்சுருவோமா? அண்ணாமலை ஆரம்பிக்கும் ’பார்ட்டி’.. இதுதான் கொடி, சின்னமா? -
விஜய் செய்த சாணக்கியத்தனம்.. சத்தமில்லாமல் வெளியேற்றப்பட்ட கம்யூனிஸ்ட்கள்! இதை யாரும் கவனிக்கலையே! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
இசக்கி சுப்பையா யார் தெரியுமா? அடுத்து தாவும் அரசியல் புள்ளி இவரா? தவெக பக்கம் சாயும் அதிமுக கோட்டை












Click it and Unblock the Notifications