கொங்கு நாட்டுக்கு சூப்பர் திட்டம்.. சேலம் டூ கொச்சி சாலையில் 2 மேம்பாலங்கள்! திருப்பூர் எம்பி தகவல்
டெல்லி: சேலம் - கொச்சி இடையிலான தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகளை தடுப்பதற்கு மேம்பாலங்கள், சர்வீஸ் சாலைகள் அமைக்கப்பட உள்ளதாக திருப்பூர் இந்திய கம்யூனிஸ்டு எம்பி சுப்பராயன் தெரிவித்து இருக்கிறார்.
திருப்பூர் மக்களவைத் தொகுதி இந்திய கம்யூனிஸ்டு கட்சி உறுப்பினரான சுப்பராயன் தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையரகமான NHAI வின் தலைவர் சந்தோஷ் குமார் தலைநகர் டெல்லியில் சந்தித்தது மேம்பாலம், சர்வீஸ் சாலைகள் அமைப்பது தொடர்பாக கோரிக்கை வைத்தார்.

சேலம் - கோச்சி தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை புறவழிச் சாலையில் விபத்துகளை தடுக்க பெருந்துறை - காஞ்சிக்கோயில் சாலை, துடுப்பதி சாலை, வாய்பாடி சாலை, பெத்தாம்பாளையம் சாலை, விஜயமங்கலம் சாலை ஆகிய இணைப்பு சாலைகளில் மேம்பாலம் மற்றும் சர்வீஸ் சாலைகளை அமைக்க கோரினார்.
அதேபோல மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரியை சந்தித்து இதற்கு உடனடியாக ஒப்புதல் அளித்து நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை விரைவாக தொடங்க வேண்டும் என அவர் வலியுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், "விபத்துகளைத் தடுப்பதற்காக சேலம் - கொச்சி தேசிய நெடுஞ்சாலையில், பெருந்துறை புறவழிச் சாலையில் பெத்தாம்பாளையம் சாலை, பெருந்துறை - காஞ்சிக்கோயில் சாலை, துடுப்பதி சாலை, விஜயமங்கலம், வாய்பாடி சாலை ஆகிய இணைப்புச் சாலைகளின் சந்திப்புகளில் மேம்பாலங்கள் மற்றும் சா்வீஸ் சாலைகள் அமைக்க மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இந்த நிலையில் ரூ.70.82 கோடி மதிப்பில் துடுப்பதி சாலை மற்றும் காஞ்சிக்கோயில் சாலை சந்திப்புகளில் 2 மேம்பாலங்கள் அமைக்கவும், விஜயமங்கலம் - வாய்பாடி சாலை, பெத்தாம்பாளையம் சாலை பகுதிகளில் சா்வீஸ் சாலைகள் அமைக்கவும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளன.
இதற்கான முன்மொழிவுகள் இறுதி ஒப்புதலுக்காக, டெல்லியில் உள்ள தேசிய நெடுஞ்சாலைத் துறை ஆணையத்தின் தலைமை அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. இந்த திட்டத்துக்கு விரைவில் ஒப்புதல் அளித்த, நிதி ஒதுக்கீடு செய்து பணிகளைத் தொடங்க வலியுறுத்தி மத்திய நெடுஞ்சாலைத் துறை அமைச்சா் நிதின் கட்கரியையும் அண்மையில் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன்." என அவர் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
-
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
கேட்கும்போதே நெஞ்சம் உறைகிறது.. சஹாரா பாலைவன மணலில் பழுதான லாரி. தாகத்துடன் அநியாயமாய் மாண்ட 49 பேர் -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
சென்னை ரோட்டை கண்ணில் ஒத்திக்கலாம்.. பெங்களூர் நிலைமை படுமோசம்.. டிகே சிவகுமார் என்ன செய்வார்? -
"திமுக இல்லாதது கவலையளிக்கிறது.." ரொம்பவே வருத்தப்பட்டு பேசிய திருமாவளவன்.. என்ன மேட்டர்? -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி -
விலகிய 113 ஒன்றிய செயலாளர்கள்.. தவெகவின் ஆபரேஷனால் மிரண்ட அறிவாலயம்! ஸ்டாலின் எடுத்த முக்கிய முடிவு -
"16 ஆண்டுகளுக்கு பின் தாய் வீட்டிற்கு.." வேல்முருகன் எமோஷ்னலாக சொல்ல.. சட்டென குறுக்கிட்ட அன்புமணி -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம்












Click it and Unblock the Notifications