பாஜகவின் அதிரடிக்கு பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, பிஜூ ஜனதா தள் ஆதரவு- ஜேடியூ வெளிநடப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கி வந்தத அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவை ரத்து செய்யும் மத்திய அரசின் அதிரடி நடவடிக்கைக்கு பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, அதிமுக, பிஜு ஜனதா தளம் கட்சிகள் ஆதரவு அளித்தன. ஆனால் பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் மத்திய அரசின் நடவடிக்கைக்கு எதிராக ராஜ்யசபாவில் வெளிநடப்பு செய்தது.

ஜம்மு காஷ்மீருக்கான சிறப்பு உரிமைகளை அளித்து வந்தது அரசியல் சாசனத்தின் 370-வது பிரிவு. இதனை ரத்து செய்வதுடன் ஜம்மு காஷ்மீரை 2 யூனியன் பிரதேசங்களாகவும் பிரிப்பதாக அறிவித்தது மத்திய அரசு.

BSP, AAP support to Centre on Revoking Artcile 370

ராஜ்யசபாவில் உள்துறை அமைச்சர் அமித்ஷா இதை கடும் அமளிகளுக்கு இடையே அறிவித்தார். அப்போது மக்கள் ஜனநாயக கட்சியின் எம்பிக்கள் ஜனாதிபதியின் அறிவிக்கை நகலை கிழித்து எறிந்தனர். இதனால் அக்கட்சியின் 2 எம்.பிக்கள் சஸ்பென்ட் செய்யப்பட்டனர்.

மத்திய அரசின் நடவடிக்கைக்கு காங்கிரஸ், திமுக, மதிமுக, திரிணாமுல் காங்கிரஸ், இடதுசாரிகள், சமாஜ்வாதி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. பாஜகவின் கூட்டணி கட்சியான ஐக்கிய ஜனதா தளம் வெளிநடப்பு செய்தது.

அதேநேரத்தில் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி, பிஜூ ஜனதா தளம், அதிமுக, சிவசேனா, ஒய்எஸ்.ஆர் காங்கிரஸ், தெலுங்குதேசம் கட்சிகள் மத்திய அரசின் முடிவுக்கு ஆதரவு தெரிவித்தன. பாஜகவுக்கு எதிராக வரிந்து கட்டி நிற்கும் பகுஜன் சமாஜ், ஆம் ஆத்மி. தெலுங்குதேசம் கட்சிகளின் ஆதரவு அக்கட்சிக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+