கச்சத்தீவில் மத கலவரத்தை உருவாக்க புத்தர் சிலை- ஒத்திவைப்புத் தீர்மான நோட்டீஸ் கொடுத்த திருமாவளவன்!
டெல்லி: கச்சத்தீவில் மத கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது; இந்த சிலையை அகற்ற இந்தியா நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்பி நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ் கொடுத்துள்ளார்.
தமிழ்நாட்டுக்கு சொந்தமானது கச்சத்தீவு. 1970களில் மத்திய அரசு தன்னிச்சையாக கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்தது. இருந்த போதும் கச்சத்தீவு மீதான தமிழ்நாட்டு தமிழர்களின் அனுபவ உரிமையை அங்கீகரிக்கும் ஒப்பந்தமும் உருவானது. ஆனால் இந்த உரிமைகள் தொடர்ந்து மறுக்கப்பட்டு வருகின்றன. கச்சத்தீவு பகுதிக்கு தமிழ்நாட்டு மீனவர்கள் சென்றாலே இலங்கை கடற்படை சுட்டுக் கொல்வதும் தாக்குவதுமான போக்கை கடைபிடிக்கிறது.

இலங்கையில் உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த நிலையில் 2010-ம் ஆண்டு முதல் கச்சத்தீவு அந்தோணியார் தேவாலா திருவிழாவில் தமிழ்நாடு மற்றும் இலங்கை தமிழர்கள் பங்கேற்கின்றனர். இந்த நிலையில் கச்சத்தீவில் திடீரென இலங்கை கடற்படை புத்த விகாரையை கட்டி இருக்கிறது. இந்த புத்த விகாரை ரகசியமாக கட்டப்பட்டிருப்பது அம்பலமானது. இது தொடர்பான சர்ச்சை தொடர்ந்து கொண்டிருக்கிறது.
கச்சத்தீவில் ஏற்கனவே அந்தோணியார் தேவாலயம் அமைக்கப்பட்டிருக்கும் நிலையில் புத்த விகாரை அமைக்கப்பட்டிருப்பது மத மோதல்களை ஏற்படுத்தும் என்பது தலைவர்களின் கருத்து. இந்த விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் எனவும் தமிழ்நாட்டு தலைவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்பு தீர்மான மனு கொடுத்துள்ளதாக கூறியுள்ளார் விசிக தலைவர் திருமாவளவன். இது தொடர்பாக திருமாவளவன் கூறியதாவது: சிங்கள இனவெறியர்கள் மதக்கலவரத்தை உருவாக்கும் நோக்கத்தில் கச்சத்தீவில் புத்தர் சிலையை நிறுவியுள்ளனர். தற்போதுவரையில் அங்கே அந்தோனியார் ஆலயம் மட்டுமே இருந்தது, ஆண்டுதோறும் அங்கே ஓர் கிறித்தவ திருவிழா நடைபெற்று வருகிறது. கிறித்தவர்களை விரட்டியடிக்கும் நோக்கத்தில் சிங்கள இனவெறியர்கள் மாபெரும் புத்தர் சிலையை அங்கே நிறுவ திட்டமிட்டுள்ளனர். இது தமிழ்நாட்டு தமிழர்கள் மற்றும் ஈழத்தமிழர்களுக்கு எதிரான செயல் மட்டுமல்ல அவர்களின் மத உரிமைகளை மீறும் செயலாகும். இதனை வன்மையாகக் கண்டிக்கிறோம். அச்சிலையை அங்கிருந்து அகற்றி மதநல்லிணக்கத்தை மீட்டெடுக்க இந்திய அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்" என குறிப்பிட்டு நாடாளுமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மான மனு அளித்துள்ளேன். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.
-
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
தமிழகத்திற்கு வரும் 100 நாள் வேலை திட்ட நிதியில் 60% கட்.. 'VB-G RAM G' திட்டத்தில் மெகா அதிர்ச்சி -
நாடு கடத்தப்படும் கரப்பான் பூச்சி கட்சி தலைவர்? ஏர்போர்ட்டில் வைத்தே கைது செய்யவும் திட்டம்? -
சும்மா துங்கும் பொக்கிஷம்.. இந்திய வீடு, கோயில்கள் முடங்கிய 32,000 டன் தங்கம்! மத்திய அரசின் ப்ளான்! -
விமான நிலையத்தில் தப்பி தவறியும் "இந்த" இடங்களில் போட்டோ எடுக்காதீங்க.. உடனடி கைது தான்! ரூல்ஸ் என்ன -
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
இனி இந்தியாவை தொட முடியாது.. ரஷ்யா அனுப்பிய புதிய எஸ் 400 வான்வெளி பாதுகாப்பு சிஸ்டம்.. செம -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
பழைய பன்னீர்செல்வமா வாங்க.. அண்ணாமலையை விடாத அமித் ஷா! பாஜக அள்ளிக் கொடுக்கும் ரெண்டு லட்டு! என்ன?












Click it and Unblock the Notifications