தனி நபர் வருமான வரியில் மாற்றமில்லை.. சலுகை காட்டாத அரசு.. மாத ஊதியம் பெறுவோர் ஏமாற்றம்
டெல்லி: தனி நபர் வருமான வரியில் எந்த ஒரு மாற்றத்தையும் மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கவில்லை.
2021-22ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பித்தார். முதல் முறையாக டிஜிட்டல் முறையில் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டது.
காலை 11 மணிக்கு ஆரம்பித்த பட்ஜெட் உரை, தொடர்ந்து 1 மணிநேரம் 50 நிமிடங்கள் நீடித்தது. கொரோனா காலத்தில் தாக்கல் செய்யக் கூடிய பட்ஜெட் என்பதால், தனிநபர் வருமானத்தை உயர்த்துவதற்கு உரிய அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று கடும் எதிர்பார்ப்பு இருந்தது.

வருமான வரி ஸ்லாப்
அதிலும் குறிப்பாக மாதச் சம்பளதாரர்கள் தங்கள் வருமான வரி ஸ்லாப்பில், மாற்றங்கள் வருமா என்று எதிர்பார்த்தனர். ஏனெனில், தற்போது, 2.5 லட்சம் முதல் 5 லட்சம் வருவாய் ஈட்டுவோருக்கு 5% வருமான வரி பெறப்படுகிறது. 5 லட்சம் முதல் 10 லட்சம் வருவாய் பெறுவோரிடம் 20% வருமான வரி பெறப்படுகிறது. 10 லட்சத்திற்கு அதிகமான வருமானம் ஈட்டுவோரிடம் 30% வருமான வரி பெறப்படுகிறது.

சலுகை பற்றி எதிர்பார்ப்பு
இதில் ஏதேனும் மாற்றங்கள் செய்தால் மக்களுக்கு நல்லது என்ற எதிர்பார்ப்பு இருந்தது. அதாவது 5 லட்சம் வரையிலான வருவாய் ஈட்டுவோரிடம் வருமான வரி பெறாமல் தவிர்ப்பது, 5 லட்சம் முதல் 10 லட்சம் வரையில் வருவாய் ஈட்டுவோரிடம் 10 சதவீதம் மட்டும் வருமான வரி பெறுவது உள்ளிட்ட சலுகைகளை அறிவிப்பாரா நிர்மலா சீதாராமன் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

அதே வருமான வரி தொடரும்
ஆனால், பட்ஜெட் உரையில் தனிநபர் வருமான வரி தொடர்பான எந்த ஒரு அறிவிப்பும் வெளியாகவில்லை. இதேபோல கார்பொரேட் வரியும் மாறவில்லை. எனவே தற்போது நடைமுறையில் உள்ள அதே போன்ற வருமான வரி ஸ்லாப் தொடரும் என்பது இதன் பொருளாகும். வருமான வரித் தாக்கல் செய்யக் கூடிய விண்ணப்பங்களில், இனிமேல் முதலீட்டு ஆதாயங்கள் மீதான வருமானம், வங்கி வட்டி வருமானம் ஆகியவற்றின் விவரங்கள் முன்கூட்டியே நிரப்பப்பட்டு இருக்கும் என்றும் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

மாதச் சம்பளதாரர்கள்
வருமான வரி பற்றி அறிவிப்பு வெளியிடாததால், மாத சம்பளக்காரர்கள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர். வருமான வரியில் மிச்சமானால் அது பிற செலவீனங்களுக்கு பயன்படுத்தப்படும் வாய்ப்பு இருந்தது. இப்போது அரசுக்கே அந்த பணம் வரியாக போகப்போகிறது என்று மாதச் சம்பளதாரர்கள் அங்கலாய்க்கிறார்கள்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன?












Click it and Unblock the Notifications