பட்ஜெட் முடிந்ததும்.. வேக வேகமாக.. எதிர்க்கட்சிகளின் இருக்கைக்கு சென்ற பிரதமர் மோடி! ஏன்? என்னாச்சு?
டெல்லி: இன்று பட்ஜெட் முடிந்ததும் பிரதமர் மோடி எதிர்க்கட்சியினர் இருக்கை அருகே சென்று சில நிமிடங்கள் பேசிக்கொண்டு இருந்தார்.
பெரும் எதிர்பார்ப்பிற்கு இடையே மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட் 2022ஐ தாக்கல் செய்தார். பல்வேறு புதிய வரி விதிப்புகள் தொடர்பான அறிவிப்புகள் இன்று பட்ஜெட்டில் இடம்பெற்று இருந்தது. தனி நபர் வருமான வரி உச்ச வரம்பில் இந்த முறை மாற்றம் செய்யப்படவில்லை. இதில் பல புதிய டிஜிட்டல் சேவைகள் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.
அதேபோல் டிஜிட்டல் கரன்சி வெளியிடுவது தொடர்பான அறிவிப்பையும், க்ரிப்டோ பரிவர்த்தனை லாபத்திற்கு வரி, இ பாஸ்போர்ட் உள்ளிட்ட புதிய அறிவிப்புகளை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். மொத்தம் 90 நிமிடங்கள் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை நிகழ்த்தினார்.

பட்ஜெட் உரை
பொதுவாக பட்ஜெட் உரை முடிந்த உடன் அவை ஒத்திவைக்கப்படும். அதேபோல் இன்றும் அவை ஒத்திவைக்கப்பட்டது. பட்ஜெட் உரைக்கு பின்பாக பொதுவாக பிரதமர் மோடி உடனே அவையில் இருந்து வெளியேறுவதுதான் வழக்கம். பிரதமர் என்பதால் பொதுவாக பாதுகாப்பு காரணங்கள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக மோடி கூட்டம் முடிந்ததும் அவையில் இருந்து வெளியேறிவிடுவார். ஆனால் இன்று பிரதமர் அப்படி செய்யவில்லை.

மோடி
இன்று கூட்டம் முடிந்ததும் பிரதமர் மோடி அவையில் இருந்து வெளியேறாமல் சில நிமிடங்கள் அவைக்கு உள்ளேயே இருந்தார். அதிலும் முக்கியமாக திடீரென எழுந்து சென்று எதிர்க்கட்சிகளின் பக்கத்திற்கு சென்றார். அங்கு ஒரு சில எதிர்கட்சித் தலைவர்கள் நின்று கொண்டு இருந்தனர். அவர்களிடம் சகஜமாக பிரதமர் மோடி சில நிமிடங்கள் உரையாடினார். பட்ஜெட் குறித்து சில எம்பிக்களிடம் பிரதமர் மோடி சகஜமாக சிரித்தபடி உரையாடினார்.

மோடி உரையாடல்
பிரதமர் மோடி எதிர் தரப்பில் பேசிக்கொண்டு இருந்த போது அங்கு இருந்த சில காங்கிரஸ் எம்பிக்கள் பிரதமரை சுற்றி நின்று கவனித்துக்கொண்டு இருந்தனர். கேரளாவை சேர்ந்த ஆர்எஸ்பி கட்சி எம்பி என் கே பிரேமசந்திரன் பிரதமர் மோடிக்கு அருகில் நின்று கொண்டு இருந்தார். அவரிடம்.. பட்ஜெட் எப்படி இருக்கிறது..? என்று கேட்டார். அதோடு பட்ஜெட் காப்பி வந்துள்ளது. எல்லோருக்கும் வழங்கப்படும் என்று குறிப்பிட்டார். பிரதமர் மோடிக்கு என் கே பிரேமசந்திரன் தலையசைத்தபடி பதில் அளித்தார்.
Recommended Video

ஏன் இப்படி?
பிரதமர் மோடி பொதுவாக அவையில் இப்படி நடந்து கொள்ள மாட்டார் என்றாலும் இன்று அவர் இப்படி செயல்பட்டது பெரிய அளவில் கவனம் பெற்றது. அரசியல் நாகரீகமான விஷயமாக இது பார்க்கப்பட்டது. இன்று பட்ஜெட் தொடர்பாக பல நூறு காப்பிகள் லாரியில் வந்து இறங்கியது குறிப்பிடத்தக்கது. எம்பிக்கள் எல்லோருக்கும், பத்திரிகையாளர்களுக்கும் கொடுப்பதற்காக பட்ஜெட் ஆவணங்கள் கொண்டு வரப்பட்டது குறிப்பிடத்தக்கது.
-
மன் கீ பாத்தில் மோடி சொன்ன லஸ்ஸி! கோடைக்கு குளிர்ச்சி தரும் ‘நம்கீன் லஸ்ஸி’! வீட்டிலேயே செய்யலாமே! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி












Click it and Unblock the Notifications