ராகுல் லண்டன் பேச்சு & அதானி விவகாரம்! 7ஆவது நாளாக முடங்கியது நாடாளுமன்றம்! நாள் முழுக்க ஒத்திவைப்பு
பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் அமர்வு நடைபெற்று வருகிறது
டெல்லி: நாடாளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வில் 7ஆம் நாள் இன்று கூடியது. அவையில் அமளி ஏற்பட்ட நிலையில், இரு அவைகளும் நாள் முழுக்க ஒத்திவைக்கப்பட்டது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உரையுடன் கடந்த ஜன.31ஆம் தேதி நாடாளுமன்ற தொடர் ஆரம்பித்தது. முதலில் பொருளாதார ஆய்வறிக்கையும் அதன் பிறகு பட்ஜெட்டும் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த இந்த பட்ஜெட்டில் பல்வேறு முக்கிய அறிவிப்புகள் இடம் பெற்றிருந்தது. அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறுகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடர்
இரு அமர்வுகளாக பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெறுவதில், முதல் அமர்வு ஏற்கனவே முடிந்துவிட்டது. இதற்கிடையே கடந்த திங்கள்கிழமை இரண்டாம் அமர்வு தொடங்கியது. இரண்டாம் அமர்வு தொடங்கியதில் இருந்தே இதுவரை அவை நடவடிக்கைகள் நடைபெறவில்லை. இரு அவைகளும் தொடர்ந்து முடங்கியே வருகிறது. ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை ஆளும் தரப்பு வலியுறுத்தி வருகிறது.

ராகுல் லண்டன் பேச்சு
தனது பாரத் ஜாடோ யாத்திரையை முடித்துவிட்டு பிரிட்டன் சென்ற ராகுல் காந்தி அங்கு கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம், பிரிட்டன் நாடாளுமன்றங்களில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார். அப்போது அவர் இந்தியாவில் நாடாளுமன்றம், நீதித்துறை ஒடுக்கப்படுவதாக விமர்சித்திருந்தார். ஆளும் தரப்பு மீது பல்வேறு விமர்சனங்களை அவர் முன்வைத்த நிலையில், இந்த விஷயத்தைத் தான் பாஜக கையில் எடுத்துள்ளது. ராகுல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்பதை பாஜக வலியுறுத்தி வருகிறது.

விளக்கம்
நாடாளுமன்றத்தில் தனக்குப் பேச வாய்ப்பளித்தால் தனது பேச்சு குறித்து விளக்குவேன் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார். இருப்பினும், மன்னிப்பு கேட்கும் வரை நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்க மாட்டோம் என்று பாஜக தரப்பில் கூறுகின்றனர். ராகுல் காந்தியை இடைநீக்கம் செய்ய வேண்டும் என்பதையும் பாஜக வலியுறுத்தி வருகிறது. கடந்த சனிக்கிழமை நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் ராகுல் காந்தி தனது லண்டன் பேச்சு குறித்து விளக்கியிருந்தார்.

நாடாளுமன்றம்
இன்று என்ன நடக்கும் ஆளும் தரப்பு ராகுல் விவகாரத்தை எடுத்துள்ளது என்றால், எதிர்க்கட்சிகள் அதானி விவகாரத்தைக் கையில் எடுத்துள்ளது. அதானி குறித்து வெளியான அறிக்கை குறித்து விவாதிக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். தனியார் நிறுவனம் பெற்ற கடன் விவரங்களை நாடாளுமன்றத்தில் தெரிவிக்க முடியாது என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் திட்டவட்டமாகக் கூறிவிட்டார். இருப்பினும், எதிர்க்கட்சிகள் இதை விடுவதாக இல்லை. இந்தச் சூழலில் 6ஆவது நாளாக இன்று நாடாளுமன்றம் கூடியது.

நாள் முழுக்க ஒத்திவைப்பு
அப்போது எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் அதானி விவகாரத்தைக் குறிப்பிட்டு கோஷங்களை எழுப்பினர். இதையடுத்து அவை மதியம் 2 மணி வரை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அப்போதும் ஆளும் தரப்பு மற்றும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதையடுத்து லோக்சபா, ராஜ்யசபா என்று இரண்டும் நாள் முழுக்க ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. நாளை விடுமுறை தினம் என்பதால் அடுத்து வரும் வியாழக்கிழமை (மார்ச் 23) காலை 11 மணிக்குக் கூடுகிறது.
-
நாத்திகவாதி என சொல்லிவிட்டு.. தாய்க்கு கிறிஸ்துவ முறைப்படி இறுதி சடங்கு ஏன்! பிரகாஷ் ராஜ் விளக்கம் -
மீண்டும் பிரம்மாஸ்திரத்தை கையில் எடுக்கும் மத்திய அரசு.. ரூ.2.5 லட்சம் கோடி மெகா திட்டம்! -
20,000 பாடல்கள் பாடிய சுஜாதாவிற்கு இப்படி ஒரு பிரச்சனையா? 5 வருடங்களாக பாடாத காரணம்! உருக்கம் -
யூடியூபரை பார்க்க கோவை டூ சென்னை.. 4 பள்ளி மாணவிகள் செயல்.. பெற்றோர் அறிய வேண்டிய பாடம் -
2020ல் 10 லட்சத்திற்கு வாங்கியிருந்தால் இன்று1.7 கோடி ரூபாய்.. இந்தியன் வங்கி மேஜிக் -
டெல்லி போட்ட ஸ்கெட்ச்.. எடப்பாடி 'மூவ்'.. நள்ளிரவில் மாறிய தமிழக டிஜிபி.. விறுவிறு பின்னணி! -
விஜய் சேதுபதிக்கு கடன்! 25 லட்சத்தை வாரி வழங்கிய ஆதவ் அர்ஜுனா.. பிரமாண பத்திரத்தில் கசிந்த ரகசியம் -
கருணாநிதி என்ற என் இயற்பெயரை கருணாஸ் என மாற்றினேன்.. அந்த பெயர் தான் மீண்டும் எனக்கு.. : கருணாஸ் -
எங்கிட்ட எப்படி ஆதரவு கேட்கலாம்? கவுண்டம்பாளையம் அதிமுக வேட்பாளரிடம் சொன்ன வார்த்தை.. பின்னணி -
செங்கோட்டையன் வீட்டிற்கே கிளம்பி செல்லும் விஜய்.. கடுப்பான ஆதவ் அர்ஜுனா, புஸ்ஸி? என்ன நடக்குது? -
"ஹார்முஸ் மோதலில்.. மாலுமிகளை இழந்த ஒரே நாடு நாங்கள் தான்.." போருக்கு நடுவே இந்தியா சொன்ன வார்த்தை -
வடபழனி- பூந்தமல்லி மெட்ரோ ரயில் சேவை உறுதியானது.. மேற்கு சென்னைக்கு மக்களின் ஏக்கம் நிறைவேறுது












Click it and Unblock the Notifications