மீண்டும் தாமரை.. லோக்சபா தேர்தலில் மக்கள் ஓட்டு பாஜகவுக்கு தான் - பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன்
டெல்லி: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்து தொடக்க உரையாற்றியபோது வரும் தேர்தலில் மக்கள் மீண்டும் பாஜகவை மாபெரும் வெற்றி பெற செய்வார்கள் எனக்கூறினார். இதை கேட்டவுடன் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் உற்சாகமாக மேசையை தட்டி வரவேற்றனர்.
மத்திய இடைக்கால பட்ஜெட் நாடாளுமன்றத்தின் லோக்சபாவில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து வருகிறார். இது நிர்மலா சீதாராமனின் 6வது மத்திய பட்ஜெட்டாகும். இந்த பட்ஜெட்டின் கீழ் பல்வேறு அறிவிப்புகளை அவர் வெளியிட்டு வருகிறார்.

இந்நிலையில் தான் இன்றைய பட்ஜெட் தாக்கலின் தொடக்கத்தில் நிர்மலா சீதாராமன் மத்திய அரசின் சாதனைகள் குறித்த விஷயங்களை பட்டியலிட்டு வந்தார். அப்போது அவர் கூறியதாவது: 2027 ம் ஆண்டுக்குள் இந்தியாவை 'விக்சித் பாரத்' ஆக மாற்ற தமத்திய அரசு செயல்பட்டு வருகிறது. இதனால் எங்களின் கவனம் என்பது "சப்கா சத், சப்கா விகாஸ்" என உள்ளது.
ஏழைகள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் விவசாயிகள் என்ற நான்கு பிரிவு மக்களின் மீது அரசு கவனம் செலுத்தி வருகிறது. இதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமரின் ஜன்மன் யோஜனா திட்டம் என்பது பழங்குடி மக்களுக்கு உதவி செய்து வருகிறது.
‛சிக்ஸ்’.. பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் சாதனை! சிதம்பரத்தை பின்னுக்கு தள்ளி மொராஜி தேசாயுடன் சமன்
கடந்த 10 ஆண்டுகளில் 25 கோடி மக்கள் வறுமையின் பிடியில் இருந்து வெளியேற அரசு உதவியுள்ளது. இதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மீண்டும் மக்கள் பாஜகவுக்கு அமோக ஆதரவு தந்து மத்தியில் ஆட்சி அமைக்க தேர்வு செய்வார்கள்’’ என்றார். இதை கேட்டவுடன் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பிக்கள் மேஜையை தட்டி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.












Click it and Unblock the Notifications