Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

”ஜிஎஸ்டி” வரி பயங்கரவாதத்தை ஏவிவிட்டுள்ளது மத்திய பாஜக அரசு- லோக்சபாவில் ராகுல் காந்தி கடும் தாக்கு!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: ஜிஎஸ்டி என்கிற வரி பயங்கரவாதத்தை மத்திய பாஜக அரசு ஏவிவிட்டுள்ளது; ஜிஎஸ்டி என்பது வரிவிதிப்பு தீவிரவாதம் என்று லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்தார். மத்திய பட்ஜெட்டானது பெரும் முதலாளிக்கானதாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது; இந்தியா முழுவதும் ஒருவித அச்சநிலை நிலவுகிறது; மத்திய அமைச்சர்களும் அச்சத்தின் பிடியில் இருக்கின்றனர் என்றும் ராகுல் காந்தி கடுமையாக தாக்கிப் பேசினார்.

லோக்சபாவில் பட்ஜெட் மீதான விவாதத்தில் ராகுல் காந்தி இன்று பேசியதாவது: மகாபாரதத்தில் 6 பேர் சக்கர வியூகத்தை அமைத்து கட்டுப்படுத்தினர். தற்போதும் நரேந்திர மோடி, அமித்ஷா, மோகன் பகவத், அஜித் தோவல், அம்பானி, அதானி என 6 பேரின் சக்கரவியூகத்தில் இந்தியா சிக்கிக் கொண்டுள்ளது (அப்போது சபாநாயகர் ஓம்பிர்லா குறுக்கிட்டு அம்பானி ,அதானி, அஜித் தோவல் சபை குறிப்பில் இடம்பெறாது; இதர 3 பேரின் பெயர் மட்டும் இடம் பெறும் என்றார். இதனால் அம்பானி, அதானி பெயரை A1, A2 என ராகுல் காந்தி குறிப்பிட்டார்). இந்தியாவில் தாமரை வடிவத்தில் சக்கரவியூகம் அமைந்துள்ளது. இந்த சக்கரவியூகத்தால் மாநில அரசுகள் ஒடுக்கப்படுகின்றன. பாஜகவின் இந்த சக்கர வியூகத்தை எதிர்த்து நாங்கள் போராடி வருகிறோம். இந்த சக்கரவியூகத்தை நிச்சயம் நாங்கள் தகர்த்து எறிவோம்.

budget 2024 rahul gandhi 2024

அச்சத்தில் மத்திய அமைச்சர்கள்: நாட்டின் மத்திய அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவரும் ஒருவித அச்சத்தில் உள்ளனர். மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரதமராக நினைத்தாலும் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிடும். மத்திய பட்ஜெட்டானது பெருமுதலாளிக்காக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வேலைவாய்ப்பின்மை என்பதை மோடி அரசானது வினாத்தாள் கசிவு என்பதாகிவிட்டது. அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை மூலம் எதிர்க்கட்சிகளை மத்திய அரசு ஒடுக்குகிறது.

ஜிஎஸ்டி வரி பயங்கரவாதம்: ஜிஎஸ்டி என்கிற வரி பயங்கரவாதத்தை மத்திய அரசு ஏவிவிட்டது. ஜிஎஸ்டி என்பது வரிவிதிப்பு தீவிரவாதம். ஜிஎஸ்டி மூலம் சிறு, குறு தொழில்கள் நசுக்கப்பட்டுவிட்டன. ஜிஎஸ்டியால் பாதிக்கப்பட்ட சிறு, குறு, நடுத்தர தொழில்களை பாதுகாக்க மத்திய அரசு தவறிவிட்டது.

கல்விக்கு நிதி எங்கே?: 20 ஆண்டுகளில் இல்லாத வகையில் கல்விக்கு குறைவாக நிதி ஒதுக்கபட்டுள்ளது. நிலம் கையகப்படுத்துதல் சட்டத்தை மத்திய அரசு பலவீனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் விவசாயிகலை நாடாளுமன்றத்துக்குள் அனுமதிக்க மறுக்கிறது மத்திய அரசு. விவசாயிகளின் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை உறுதி செய்ய சட்டமாக்க தவறிவிட்டது மத்திய பாஜக அரசு. இந்தியா கூட்டணி ஆட்சியில் விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச விலையை உறுதி செய்ய சட்டம் கொண்டுவருவோம்.

முதுகில் குத்திய மத்திய அரசு: மத்திய பட்ஜெட்டில் நடுத்தர மக்களுக்கு, விவசாயிகளுக்கு என எந்த ஒரு அறிவிப்புமே இல்லை. நடுத்தர மக்களின் முதுகில் குத்திவிட்டது மத்திய பாஜக அரசு. அக்னிபாத் திட்டத்தில் சேரும் ராணுவ வீரர்களுக்கு ஒரு ரூபாய் கூட ஓய்வூதியம் வழங்கப்படுவது இல்லை. கடந்த 10 ஆண்டுகளாக நடந்த நீட் தேர்வு தொடர்பாக ஒருவார்த்தை கூட மத்திய பட்ஜெட்டில் இடம் பெறவும் இல்லை. இவ்வாறு ராகுல் காந்தி பேசினார்.

பாஜக தொடர் அமளி: ராகுல் காந்தி பேசும் போது பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி எம்பிக்கள் முழக்கமிட்டனர். அதானி, அம்பானி பெயரை குறிப்பிடவும் பாஜக எம்பிக்கள் எதிர்ப்புத் தெரிவித்தனர். ராகுல் காந்தி பேசிக் கொண்டிருக்கும் போது பாஜக எம்பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டனர். லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லாவும் ராகுல் காந்தி பேச்சின் போது குறுக்கிட்டார். இதற்கு இந்தியா கூட்டணி எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்க்கட்சித் தலைவர் பேசும் போது குறுக்கிடும் சபாநாயகர் ஓம் பிர்லா, உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசும் போது குறுக்கிடுவதில்லை என காங்கிரஸ் எம்பிக்கள் கண்டனம் தெரிவித்தனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+