பீகாருக்கு சுக்கிர திசை.. பட்ஜெட்டில் அள்ளி கொடுத்த பாஜக.. கொந்தளித்த எதிர்க்கட்சிகள்
டெல்லி: நாடாளுமன்றத்தில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து எட்டாவது முறையாக மத்திய பட்ஜெட் தாக்கல் செய்தார். பீகார் மாநிலத்துக்கு இந்தாண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அந்த மாநிலத்துக்கு பட்ஜெட்டில் அதிகளவு திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பது விமர்சனத்துக்குள்ளாகியுள்ளது.
நாடாளுமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. பட்ஜெட் கூட்டத் தொடரின் முதல் பகுதி 9 அமர்வுகளாக பிப்ரவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதைத்தொடர்ந்து, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 2025-26 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்யதார். மத்திய பட்ஜெட்டை எட்டாவது முறையாக நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். நடுத்தர வர்க்கத்தினர் முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை பலரும் இந்த பட்ஜெட்டை எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிரமலா சீதாராமன் தாக்கல் செய்த நிலையில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடும் அமளியில் ஈடுபட்டனர். மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் முழக்கம் எழுப்பினர். கடும் அமளிக்கு நடுவே பட்ஜெட் உரையை நிர்மலா வாசிக்கத் தொடங்கினார்.
நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை வாசித்தார். கடந்த பட்ஜெட் கூட்டத் தொடரிலும் பீகார் மாநிலத்துக்கு அதிகளவு அறிவிப்புகள் வெளியாகின. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியமைப்பதற்கான பெரும்பான்மையை பெறவில்லை.
பீகார் முதல்வர் நிதிஷ் குமார் மற்றும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடுவின் கூட்டணி உதவியில் தான் பாஜக மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சியமைக்க முடிந்தது. அதற்கு பிரதிபலனாக பட்ஜெட்டில் பீகார் மற்றும் ஆந்திராவுக்கு அள்ளி கொடுத்துவிட்டு, பாஜக தோல்வியடைந்த மாநிலங்களை புறக்கணித்ததாக எதிர்க்கட்சிகள் விமர்சனம் வைத்தன.
இந்நிலையில் தற்போது தாக்கல் செய்யப்படும் பட்ஜெட்டிலும் பீகார் மாநிலத்துக்கு தான் அதிகம் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. நிர்மலா சீதாராமன் பட்ஜெட் வாசிக்க தொடங்கியதில் இருந்து பீகார் மாநிலத்துக்கு அடுத்தடுத்து அறிவிப்புகள் வெளியாகின.

மக்கானா உற்பத்தியை அதிகரிப்பதற்காக பீகாரில் மக்கானா வாரியம் அமைக்கப்படும் என்று அறிவித்தனர். மேலும் பீகார் மாநிலத்தில் உணவு பதனிடும் பூர்வோதயா திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல பீகார் மாநிலத்தில் உள்ள ஐஐடி பாட்னா விரிபடுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பாட்னா விமான நிலையம் தரம் உயர்த்தப்படும். பீகாரில் புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும். தேசிய உணவு தொழில்நுட்ப கல்வி மையம் என்று பட்ஜெட் அறிவிக்க தொடங்கிய சில நிமிடங்களிலேயே பீகாருக்கு பல அறிவிப்புகளும், சலுகைகளும் குவிந்தன.
பீகாருக்கு பட்ஜெட் வாசிக்க தொடங்கிய ஒரு மணி நேரத்தில் ஏழு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன என்று எதிர்க்கட்சியினர் விமர்சனம் வைத்து வருகிறார்கள். பீகாரில் இந்தாண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அங்கு வெற்றி பெறுவதற்காகவே அதிகளவு திட்டங்கள் அறிவிக்கப்படுகின்றன என்று புகார் வைத்துள்ளனர்.
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications