திமுகவின் தோழி விடுதிகள்.. கையில் எடுத்த மத்திய அரசு.. நிர்மலா சீதாராமன் வெளியிட்ட மெகா அறிவிப்பு!
டெல்லி: நாடு முழுவதும் மாவட்டத்தோறும் மகளிர் விடுதிகள் தொடங்கப்படும் என்று மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். அதேபோல் அடுத்த 5 ஆண்டுகளில் ரேடியாலஜி, அனஸ்தீசியா உள்ளடக்கிய 1 லட்சம் மருத்துவ பணியாளர்களையும் உருவாக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைக்கப்பட்ட பின் தோழி விடுதிகள் மாவட்டந்தோறும் அமைக்கப்பட்டு வருகின்றன. பணிக்காக வேறு மாவட்டங்களுக்கு பயணிக்கும் மகளிருக்காக தோழி விடுதிகளை தமிழக அரசு அமைத்துள்ளது. ஏற்கனவே சென்னை, கோவை, திருச்சி, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் தோழி விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன.

குறைந்த கட்டணத்தில் மகளிருக்கான பாதுகாப்பு, வசதிகள் அனைத்தும் தோழி விடுதிகளில் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதால், அதனை அனைத்து மாவட்டங்களுக்கும் விரிவாக்கம் செய்ய தமிழக அரசு முடிவு செய்து பணிகளை மேற்கொண்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய பட்ஜெட்டில் மாவட்டந்தோறும் மகளிர் விடுதிகள் அமைக்கப்படும் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசுகையில், நாடு முழுவதும் மாவட்டத்தோறும் மகளிர் விடுதிகள் தொடங்கப்படும். இது மாணவிகளின் கல்வியை ஊக்குவிக்க அமைக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். இதன் மூலமாக திமுகவின் ஸ்டைலை மத்திய அரசு கையில் எடுத்துள்ளதாக பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications