பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி.. வரியை உயர்த்திய நிர்மலா சீதாராமன்.. எவ்வளவு உயர்கிறது?
டெல்லி: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று 2026- 27 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். இதில் பல முக்கியமான அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. குறிப்பாக செக்யூரிட்டி பரிவர்த்தனை வரியை உயர்த்துவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இந்த வரி உயர்வு காரணமாகப் பங்குச்சந்தைகளில் டிரேட் செய்வோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 9வது பட்ஜெட் இதுவாகும். இந்த பட்ஜெட் அறிவிப்பில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தது. பல பொருட்களுக்கான வரிகள் குறைக்கப்பட்டும் இருந்தது. இதற்கிடையே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்றைய தினம் தனது பட்ஜெட் உரையில் ப்யூச்சர்ஸ் மற்றும் டிரேடிங் வரியை உயர்த்துவதாக அறிவித்தார்.

டிரேடிங்
இந்தியாவில் தினசரி பல லட்சம் இளைஞர்கள் பங்குச்சந்தைகளில் வர்த்தகம் செய்து வருகிறார்கள். பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வோர் குறைவான நபர்கள் மட்டுமே.. மாறாக அதில் டிரேட் செய்வோர் தான் அதிகம். இதுபோல டிரேட் செய்வதில் ரிஸ்க் அதிகம் இருந்தாலும் பணத்தைச் சீக்கிரம் சம்பாதிக்க முடியும் என்பதால் பலரும் இதில் டிரேட் செய்கிறார்கள்.
குறிப்பாக இப்போது பங்குச்சந்தைகளில் ப்யூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் டிரேட் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதில் இளைஞர்கள் அதிகம் நஷ்டமடைய வாய்ப்புகள் அதிகம் என்பதால் இதில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வர வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தினர். இந்தச் சூழலில் தான் இந்த டிரேடிங்கிற்கான வரி உயர்த்தப்படுவதாக நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்..
வரி உயர்வு
செக்யூரிட்டி பரிவர்த்தனை வரியை (STT) 0.05% ஆகவும், ஆப்ஷன்ஸ் டிரேடிங்கிற்கு 0.15% ஆகவும் உயர்த்துவதாக அவர் அறிவித்தார். இந்த அறிவிப்பு வந்தவுடனேயே மத்திய பட்ஜெட் சரிந்தது. இந்தியப் பங்குச்சந்தை மிக மோசமான சரிவைச் சந்திக்க இதுவே முக்கிய காரணமாகும்.
- ப்யூச்சர்ஸ் விற்பனைக்கான வரி கண்டிராக்ட் வெல்யூவில் 0.02%ஆக இருந்த நிலையில், அது இப்போது 0.05%ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
- ஆப்ஷன்ஸ் பிரீமியம் விற்பனைக்கான வரி 0.1% ஆக இருந்து, இப்போது 0.15% ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
நிர்மலா சீதாராமன்
இது தொடர்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது பட்ஜெட் உரையில், "ப்யூச்சர்ஸ் மீதான எஸ்.டி.டி.யை தற்போதுள்ள 0.02 சதவீதத்தில் இருந்து 0.05 சதவீதமாக உயர்த்தப்படும். ஆப்ஷன்ஸ் பிரீமியம் மற்றும் ஆப்ஷன்ஸ் எக்சர்சைஸ் ஆகியவற்றின் எஸ்.டி.டி.யை தற்போதைய 0.1 சதவீதம் மற்றும் 0.125 சதவீதத்தில் இருந்து 0.15 சதவீதமாக உயர்த்தப்படும்" என்று அவர் அறிவித்தார்.
செக்யூரிட்டி பரிவர்த்தனை வரி
செக்யூரிட்டி பரிவர்த்தனை வரி (STT) என்பது இந்தியாவிற்குள் அங்கீகரிக்கப்பட்ட பங்குச் சந்தைகள் வழியாக, பங்குகளை வாங்குதல் மற்றும் விற்பதன் மீது அரசால் வசூலிக்கப்படும் நேரடி வரியாகும். பரிவர்த்தனைகளில் வெளிப்படைத்தன்மை, வரி வசூலை எளிதாக்குதல் மற்றும் மூலதனச் சந்தை வர்த்தகங்களை முறையான வரி கட்டமைப்புக்குள் கொண்டுவருவதே இதன் நோக்கமாகும். இதற்கான வரியைத் தான் நிர்மலா சீதாராமன் உயர்த்தியுள்ளார்.
வரி உயர்வு காரணமாக டிரேடிங் செய்வோர் எண்ணிக்கை குறைய வாய்ப்பு இருக்கிறது. இன்று பட்ஜெட் காரணமாகப் பங்குச்சந்தைகள் செயல்பட்டன. இதற்கிடையே இந்த வரி தொடர்பான அறிவிப்பு வந்தவுடனேயே பங்குச்சந்தை கடும் சரிவைச் சந்தித்தது. சென்செக்ஸ் 2,300 புள்ளிகளுக்கும் மேல் சரிந்த நிலையில், நிஃப்டி 50 குறியீடு 24,571.75 ஆக குறைந்தது.












Click it and Unblock the Notifications