தாயுடன் கசாப்புக் கடைக்காரர் உல்லாசம்.. பார்த்துவிட்டதால்.. சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற கொடூரன்
டெல்லி: கள்ளக்காதலியுடன் உல்லாசமாக இருந்ததை அவரது 8 வயது மகள் பாரத்துவிட்டதால், அந்த சிறுமியை கடத்திச் சென்று பலாத்காரத்துக்கு உட்படுத்தி கொடூரமாக கொலை செய்த கசாப்பு கடைக்காரரை டெல்லி போலீஸார் கைது செய்தனர்.
டெல்லியில் உள்ள தரியாகஞ்ச் பகுதியைச் சேர்ந்தவர் அமர். இவருக்கு உஷா என்ற மனைவியும், 4 குழந்தைகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 4-ம் தேதி இரவு அமர் குடும்பத்தினர் வழக்கம் போல வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அதிகாலை 4 மணியளவில் சிறு சத்தம் கேட்டுள்ளது. இதனால் உறக்கத்தில் இருந்து அமர் விழித்து பார்த்த போது தனது 4 பிள்ளைகளில் 8 வயது சிறுமி மட்டும் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சுற்றுப்பகுதி முழுவதும் தேடி பார்த்தும் மகள் கிடைக்காததால் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதன்பேரில் சிறுமியை போலீஸார் தேடி வந்த வந்த நிலையில், அவரது உடல் அங்குள்ள யமுனா காதர் எனும் இடத்துக்கு அருகே உள்ள வனப்பகுதியில் கடந்த 18-ம் தேதி அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. அவரது உடல் முழுவதும் வெட்டுக் காயங்கள் இருந்ததுடன் சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து, இந்தக் கொடூர கொலையை செய்த நபரை பிடிக்க 50 போலீஸார் அடங்கிய தனிப்படையை போலீஸார் அமைத்தனர். இதனைத் தொடர்ந்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்த போதிலும் குற்றவாளி குறித்த தடயம் கிடைக்கவில்லை. இதனால் யமுனா காதர் பகுதி மக்களிடம் போலீஸார் ரகசிய விசாரணை நடத்தினர்.
அப்போது, உயிரிழந்த சிறுமியின் தாயாருக்கும், துர்க்மான் கேட் பகுதியைச் சேர்ந்த கசாப்புக் கடைக்காரர் பாட்ஷா (36)என்பவருக்கும் திருமணத்தை மீறிய உறவு இருந்ததை போலீஸாரிடம் சிலர் தெரிவித்தனர். இதன் அடிப்படையில், துர்க்மான் கேட்டுக்கு சென்ற போலீஸார் கசாப்புக் கடைக்காரர் பாட்ஷாவை பிடித்து விசாரித்தனர். முதலில் சிறுமி குறித்து எதுவும் தெரியாது எனக் கூறிய பாட்ஷா, போலீஸாரின் அடுத்தடுத்த கட்ட விசாரணையில் சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.
இதுகுறித்து போலீஸாரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், "சிறுமியின் தாய் உஷாவுடன் 3 ஆண்டுகளாக முறையற்ற உறவு வைத்திருந்தேன். ஒருமுறை அவருடன் உல்லாசமாக இருந்தபோது அவரது 8 வயது மகள் பார்த்துவிட்டாள். இந்த விஷயத்தை அவள் வெளியே கூறிவிடுவார் என்பதால் அவரை கொலை செய்ய திட்டமிட்டேன். அதன்படி, கடந்த 4-ம் தேதி நள்ளிரவு உஷாவின் வீட்டுக்கு அருகே யாருக்கும் தெரியாமல் சென்று அனைவரும் உறங்கும் வரை காத்திருந்தேன். பின்னர் 4 மணியளவில் ஜன்னல் வழியாக வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்று சிறுமியை தூக்கி காட்டுப் பகுதிக்கு கொண்டு சென்றேன். பின்னர் அங்கேயே வைத்து அவளை பலாத்காரம் செய்து கழுத்தை அறுத்து கொலை செய்தேன்" என பாட்ஷா கூறியுள்ளார்.
இதன்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் பாட்ஷாவை போலீஸார் கைது செய்தனர்.
-
இனி 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஆதார் கார்டு கிடையாது.. அறிவித்த ஒடிசா அரசு.. காரணம் இதுதான் -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
அரசியல் என்ட்ரி.. அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட்ட திரிஷா.. சக நடிகை கமெண்ட் ஹைலைட் -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மனைவி சங்கீதாவுடன் மீண்டும் சேர்ந்து வாழும் விஜய்? விவாகரத்தை கைவிட இருவரும் முடிவா? வெளியான மேட்டர் -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
அனுபவத்தை விட அதிகாரமே மேலானது.. இதில் தான் திமுக தோற்றது.. குமுறும் திமுக நிர்வாகி -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து












Click it and Unblock the Notifications