பெங்களூரின் தண்ணீர் பாதுகாப்பில் ஏஐ பயன்பாடு! AI மாநாட்டில் ராம் பிரசாத் மனோகர் IAS பெருமிதம்
பெங்களூர்: பெங்களூரில் தண்ணீர் பாதுகாப்பில் ஏஐ தொழில்நுட்பம் சிறப்பாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. சட்டவிரோத குழாய் இணைப்புகள் முதல் தண்ணீர் கசிவை கண்டுபிடிப்பது வரை ஏஐ தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதனால் தண்ணீர் பாதுகாப்பில் உலகத்துக்கே முன்மாதிரியாக பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் மாறி உள்ளதாக டெல்லியில் இன்று நடந்த ஏஐ உச்சி மாநாட்டில் பிடபிள்யூஎஸ்எஸ்பி தலைவர் ராம் பிரசாத் மனோகர் கூறியுள்ளார்.
பெங்களூர் நகருக்கு குடிநீர் மற்றும் வடிகால் சார்ந்த பணிகளை BWSSB (Bengaluru Water Supply and Sewage Board) எனும் பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் மேற்கொண்டு
வருகிறது. இதன் தலைவராக ஐஏஎஸ் அதிகாரி ராம் பிரசாத் மனோகர் செயல்பட்டு வருகிறார். இவர் தமிழகத்தை சேர்ந்தவர்.

இந்நிலையில் தான் டெல்லியில் பாரத் மண்டபத்தில் இன்று ஏஐ உச்சி மாநாடு தொடங்கியது. இந்த மாநாட்டில் ராம் பிரசாத் மனோகர் பங்கேற்று பேசினார். அப்போது அவர் பெங்களூர் நகரில் தண்ணீர் மேலாண்மையில் ஏஐ எனும் செயற்கை நுண்ணறிவின் பயன்பாடு பற்றி எடுத்துரைத்தார்.
‛காலநிலை மாற்றத்தால் ஏற்படும் சவால்களை எதிர்கொள்ள செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துதல்' என்ற தலைப்பில் ராம் பிரசாத் மனோகர் கூறியதாவது:
‛‛பம்ப் நிலையங்கள் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் (STP) AI தொழில்நுட்பத்தை நாங்கள் பயன்படுத்தி வருகிறோம். இதன்மூலம் நாங்கள் ஆண்டுக்கு ரூ.40 கோடிக்கும் அதிகமான மின்சாரத்தை சேமித்துள்ளோம். இது வெறும் காசை மிச்சப்படுத்தியது மட்டுமல்லாது சுற்றுச்சூழலையும் பாதுகாத்துள்ளது.
ஏனென்றால் கார்பன் வெளியேற்றத்தை குறைத்துள்ளோம். இது பெங்களூர் குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் சுற்றுச்சூழலை பாதுகாப்பதில் உள்ள அக்கறையுடன் செயல்படுவதை காட்டுகிறது.
தண்ணீர் கசிவுகள் மற்றும் சட்டவிரோத இணைப்புகளை கண்டறிய நவீன ரோபோடிக்ஸ் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகிறோம்,. அதாவது Non-Revenue Water or NRW பிரச்சனையை சரிசெய்வதில் அதிநவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறோம்.
ஏஐ தொழில்நுட்பத்துடன் இயங்கும் ரோபோக்களைப் பயன்படுத்துகிறோம். இது தண்ணீர் இழப்பை குறைப்பதில் பெரும் பங்காற்றி வருகிறது. இதனால் தண்ணீர் வீணாவது தடுக்கப்படுகிறது.
பெங்களூரில் நீர் ஆதாரங்களை மீண்டும் அதிகரிக்கும் வகையில் அறிவியல் ரீதியான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகிறது. இதற்காக இந்திய அறிவியல் கழகத்துடன் (IISc) ஒப்பந்தம் செய்துள்ளோம். நிலத்தடி நீர் அளவுகளை உடனுக்குடன் கண்காணிக்க ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய IoT சென்சார்கள் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மேலும் சுத்திகரிக்கப்பட்ட நீரால் 40 ஏரிகளை நிரப்புவது எங்களின் இலக்காக உள்ளது. ஏரிகளில் நீர் நிரப்புதல், சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றம், நிலத்தடி நீரில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்டவற்றை ஏஐ உதவியுடன் அளவீடு செய்கிறோம்.
செயற்கை நுண்ணறிவு மூலமாக தண்ணீர் பாதுகாப்பில் பெங்களூரு குடிநீர் விநியோகம் மற்றும் வடிகால் வாரியம் உலகிற்கே முன்மாதிரியாகவும், வழிக்காட்டியாகவும் உள்ளது. நகரில் அதிகளவில் தண்ணீரை பயன்படுத்துவோருக்கு ஏஐ தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் நீர் மீட்டர்கள், ஏஐ உடன் இணைந்த SCADA சிஸ்டம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வர உள்ளோம்.
இந்த திட்டங்களுக்கு முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் டிகே சிவக்குமார் ஆகியோரின் தலைமை முக்கிய காரணமாகும். பொதுமக்களுக்காக புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்த வேண்டும் என்ற அவர்களின் விருப்பம் தான் தண்ணீர் பாதுகாப்பில் பெங்களூரை சிறப்பானதாக மாற்றி வருகிறது'' என்றார்.
இந்தக் கூட்டத்தில் கூகிள் டீப்மைண்ட் (Google DeepMind), ஐஐடி டெல்லி (IIT Delhi), மற்றும் எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (CEEW) ஆகியவற்றின் பிரதிநிதிகள் உட்படப் பல உலகளாவிய நிபுணர்கள் கலந்து கொண்டனர்.
-
6வது இடத்துக்கு தள்ளப்பட்ட சென்னை விமான நிலையம்.. முந்திய பெங்களூர்! பிசியான ஏர்போர்ட் லிஸ்ட் -
பெங்களூர்: என்னடா அநியாயம் பண்றீங்க.. வீட்டு வாடகை ரூ.1.1 லட்சமா.. அதிர்ச்சியில் ஐடி ஊழியர்கள்! -
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்!












Click it and Unblock the Notifications