13க்கு 11.. பாஜக ஆளும் மாநிலங்களிலும் மாஸ் காட்டிய ‘இந்தியா’ கூட்டணி! இடைத்தேர்தலில் அமோக வெற்றி!
டெல்லி: 13 தொகுதி இடைத்தேர்தலில் பாஜக பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் - 5, திரிணாமுல் காங்கிரஸ் - 4 , ஆம் ஆத்மி - 1, திமுக - 1, பாஜக - 1 இடத்தில் வெற்றி பெற்றுள்ளன. ஒரு இடத்தியில் சுயேட்சை வேட்பாளர் வென்றுள்ளார்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் மட்டுமன்றி, பீகார் (1), இமாச்சல் பிரதேசம் (3), பஞ்சாப் (1), உத்தரகாண்ட் (2), மேற்கு வங்கம் (4) என மொத்தம் 13 தொகுதிகளுக்கு கடந்த புதன்கிழமை இடைத்தேர்தல் நடைபெற்ற நிலையில் இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

தமிழ்நாடு, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், இமாச்சலப் பிரதேசம் ஆகிய ஏழு மாநிலங்களில் உள்ள 13 சட்டமன்றத் தொகுதிகளுக்கான சட்டப்பேரவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஜூலை 10 ஆம் தேதி நடைபெற்றது. அன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு நிறைவடைந்தது.
மேற்கு வங்கத்தில் ராய்கஞ்ச், ரணகாட் தக்சின் (எஸ்சி), பாக்தா (எஸ்சி), மணிக்தலா ஆகிய நான்கு சட்டப்பேரவை தொகுதிகளில் இடைத்தேர்தல் நடைபெற்றது. அதேபோன்று, பீகாரில் ரூபாலி, பஞ்சாபில் ஜலந்தர் மேற்கு, இமாச்சல பிரதேசத்தில் டேஹ்ரா, ஹமிர்பூர், நலகார்க், உத்தராகண்டில் பத்ரிநாத், மங்களூரு, மத்திய பிரதேசத்தில் அமர்வாரா, தமிழகத்தில் விக்கிரவாண்டி தொகுதிக்கும் இடைத்தேர்தல் நடைபெற்றது.
7 மாநிலங்களில் 13 சட்டமன்ற தொகுதிகளில் எம்எல்ஏக்கள் மரணம், ராஜினாமா மற்றும் பிற கட்சிகளில் இணைந்தது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் காலியானதாக அறிவிக்கப்பட்டு கடந்த புதன்கிழமை அன்று இடைத்தேர்தல் நடத்தப்பட்டது.
மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற நான்கு தொகுதிகளில் 3 தொகுதிகளை கடந்த 2021 தேர்தலில் பாஜக கைப்பற்றியிருந்தது. இதனால் இங்கு திரிணாமுல் காங்கிரஸ் - பாஜக இடையேயான மோதலாக இடைத்தேர்தல் களம் உள்ளது.
பீகாரில் ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது. பெரும்பான்மையான கங்கோடா சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களை இந்த இரு கட்சிகளும் நிறுத்தியுள்ளதால் அங்கு யார் வெல்வது என்ற பெரிய எதிர்பார்ப்பு நிலவியது.
முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள மங்களூரில், காங்கிரஸ் கட்சி காசி நிஜாமுதீனை நிறுத்தியது. அவர் மூன்று முறை இந்த தொகுதியில் வெற்றி பெற்றுள்ளார். உத்தராகண்ட் உருவாக்கப்பட்டதில் இருந்து மங்களூர் தொகுதியில் பாஜக இதுவரை வெற்றி பெற்றதில்லை. அக்கட்சி கர்தார் சிங் பதானாவை களமிறக்கியது.
பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் மேற்கு சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி தனது வேட்பாளராக மொஹிந்தர் பகத்தை அறிவித்துள்ளது. காங்கிரஸ் அந்தத் தொகுதியில் தங்கள் கட்சியின் வேட்பாளராக சுரிந்தர் கவுரை இறக்கியது.
ஆம் ஆத்மி எம்எல்ஏ ஷீத்தல் அங்கூரல் ராஜினாமா செய்ததை அடுத்து ஜலந்தர் மேற்கு சட்டமன்றத் தொகுதி காலியானது. அங்கூரல் மார்ச் 28 அன்று ராஜினாமா செய்தார். பின்னர் பாஜகவில் இணைந்து தற்போது அதே தொகுதியில் பாஜக வேட்பாளராக நிறுத்தப்பட்டார் அங்கூரல்.
தமிழகத்தின் விக்கிரவாண்டி தொகுதியில் திமுக எம்எல்ஏ புகழேந்தி மாரடைப்பால் உயிரிழந்ததை அடுத்து இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. தற்போது திமுக சார்பில் அன்னியூர் சிவா, தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் பாமக சார்பில் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா உள்ளிட்ட 11 கட்சிகளின் வேட்பாளர்கள், 18 சுயேச்சை வேட்பாளர்கள் என 29 பேர் தேர்தல் களத்தில் உள்ளனர். அதிமுக இந்த இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்தது.
13 சட்டசபை தொகுதிகளிலும் வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. அதைத்தொடர்ந்து 8.30 மணி முதல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
வாக்கு எண்ணிக்கை முடிவு: பீகார் மாநிலம் ருபாலி தொகுதியில் சுயேட்சை வேட்பாளர் சங்கர் சிங் வெற்றி பெற்றுள்ளார்.
இமாச்சல பிரதேசத்தின் டெஹ்ரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் கமலேஷ் தாக்கூர் வெற்றி பெற்றுள்ளார். பாஜக வேட்பாளர் ஹோஷ்யார் சிங் தோல்வியைச் சந்தித்துள்ளார். அங்கு ஹமிர்பூர் ஹாமிர்பூரில் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார். நலகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஹர்தீப் சிங் பவா வெற்றி பெற்றுள்ளார்.
மத்திய பிரதேசத்தின் அமர்வாரா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் தீரன் சா சுக்காராம் தாஸ் வெற்றியை பதிவு செய்துள்ளார். பஞ்சாப்பின் ஜலந்தர் மேற்கு தொகுதியில் ஆம் ஆத்மி வேட்பாளர் மொகிந்தர் பகத் வென்றுள்ளார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா 67 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றார்.
இந்தியா கூட்டணி 11 இடங்களில் வெற்றி: உத்தரகாண்டின் பத்ரிநாத் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் லகாபாத் சிங் பட்டோலா வெற்றி பெற்றார். மங்களூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் குவாசி முகமது நிஜாமுதீன் வென்றார்.
மேற்கு வங்கத்தில் இடைத்தேர்தல் நடைபெற்ற 4 சட்டமன்றத் தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளனர். ஒட்டுமொத்தமாக 13 தொகுதி இடைத்தேர்தலில் 11 தொகுதிகளில் இந்தியா கூட்டணி வென்றுள்ளது. 1 இடத்தில் மட்டுமே பாஜக வெற்றி பெற்றுள்ளது.
பாஜக ஆளும் மாநிலங்களிலும்: குறிப்பாக பாஜக ஆட்சி நடைபெற்று வரும் மத்திய பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களிலும் காங்கிரஸ் கட்சி வென்றுள்ளது. இது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications