பாஜகவை அசைக்கவே முடியாதுன்னு சொன்ன பிரசாந்த் கிஷோருக்கு பொளேர் பதிலடி தந்த இடைத்தேர்தல் முடிவுகள்!

Subscribe to Oneindia Tamil

டெல்லி: இந்திய அரசியல் களத்தில் இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பாரதிய ஜனதா கட்சியை (பாஜக) அசைக்கவே முடியாது தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்த கருத்துகளை 14 மாநிலங்களில் நடைபெற்ற இடைதேர்தல் முடிவுகள் தவிடு பொடியாக்கி தெறிக்கவிட்டிருக்கிறது.

14 மாநிலங்களில் 29 சட்டசபை தொகுதிகள் மற்றும் 3 லோக்சபா தொகுதிகளுக்கு கடந்த 30-ந் தேதி வாக்குப் பதிவு நடைபெற்றன. இத்தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.

29 சட்டசபை தொகுதிகளில் 15-ல் பாஜக வென்ற இடங்கள்; 9 இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றிருந்தது. எஞ்சிய இடங்களில் மாநில கட்சிகள் வென்றிருந்தன. எம்.எல்.ஏக்கள் மரணங்கள், கட்சி தாவல்களினால் இந்த இடைத்தேர்தல்கள் நடத்தப்பட்டன.

அஸ்ஸாமில் அமோக வெற்றி

அஸ்ஸாமில் அமோக வெற்றி

தற்போதைய நிலையில் நாட்டின் வடகிழக்கு மாநிலமான அஸ்ஸாமில்தான் பாஜகவும் அதன் கூட்டணி கட்சிகளும் பெருமிதப்படும் படியான வெற்றியைப் பெற்றுள்ளன. அஸ்ஸாமில் 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இந்த 5 தொகுதிகளில் 3-ல் பாஜகவும் 2-ல் அதன் கூட்டணி கட்சியும் அமோகமான வெற்றியைப் பெற்றுள்ளன. பாஜக, அதன் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களைவிட மிக மிக குறைவான வாக்குகளையே காங்கிரஸ் வேட்பாளர்கள் பெற்றிருக்கின்றனர்.

மே.வங்கத்தில் பாஜக படுதோல்வி

மே.வங்கத்தில் பாஜக படுதோல்வி

ஆனால் அஸ்ஸாம் அண்டை மாநிலமான மேற்கு வங்கத்தில் நிலைமை அப்படியே கீழாகிவிட்டது. மேற்கு வங்கத்தில் 4 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இந்த 4 தொகுதிகளில் 3-ல் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர்கள் 1 லட்சத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றனர். பாஜக வேட்பாளர்களோ அதிகபட்சம் 20 ஆயிரம் வாக்குகளைத்தான் தொட முடிந்தது. அதுவும் ஒரே ஒரு தொகுதியில் 20 ஆயிரம் வாக்குகளை எட்ட முடிந்தது. 2 தொகுதிகளில் 15 ஆயிரம் வாக்குகளைத் தாண்ட முடியவில்லை. ஒரே ஒரு தொகுதியில் ஆறுதலாக 40 ஆயிரம் வாக்குகள் கிடைத்தன. அந்த தொகுதியில் திரிணாமுல் வேட்பாளர் 90 ஆயிரம் வாக்குகளைப் பெற்றிருக்கிறார். மேற்கு வங்க மாநிலத்தில் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸை வீழ்த்தி ஆட்சியை கைப்பற்றலாம் என்கிற பாஜகவின் கனவு அனேகமாக கண்ணுக்கெட்டிய தொலைவில் சாத்தியமே இல்லை என்கிற வகையில்தான் இருப்பதாக இந்த இடைத்தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்துகின்றன. இத்தனைக்கும் இடதுசாரிகள், காங்கிரஸின் வாக்கு வங்கியை கபளீகரம் செய்துதான் பாஜக அங்கே காலூன்ற முயற்சித்தது. ஆனாலும் மமதா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் மீதான மக்களின் மகத்தான நம்பிக்கை முன்னால் பாஜகவின் கனவுகள் அத்தனையும் தூள் தூளாக சிதறடிக்கப்பட்டிருக்கிறது.

ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜகவுக்கு மரண அடி

ஹிமாச்சல பிரதேசத்தில் பாஜகவுக்கு மரண அடி

ஹிமாச்சல் பிரதேசத்தில் ஆளும் கட்சியான பாஜக, 3 தொகுதி இடைத்தேர்தல்களில் படுமோசமான தோல்வியைத் தழுவி இருக்கிறது. 3 தொகுதிகளிலும் காங்கிரஸ் பேரெழுச்சியுடன் வெற்றி வாகை சூடியுள்ளது. KOTKHAI தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 29955, சுயேட்சை வேட்பாளர் 23662 வாக்குகளைப் பெற்றிருக்க பாஜகவின் அதிகாரப்பூர்வ வேட்பாளரோ வெறும் 2644 வாக்குகளைதான் பெற்றிருக்கிறார். இம்மாநிலத்தில் பாஜகவுக்கு ஆறுதலாக லோக்சபா தொகுதி இடைத்தேர்தல் வெற்றி கிடைத்திருக்கிறது. அதுவும் கூட மிக கடுமையான போட்டியைத்தான் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. இத்தனைக்கும் ஹிமாச்சல பிரதேசத்தில் அடுத்த ஆண்டின் இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெற உள்ளது. அந்த தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கப் போகிறது என்பதற்காக அலாரமாகவே இடைத்தேர்தல் முடிவுகள் இருக்கின்றன.

ம.பி.யில் பெரும் போராட்டம்

ம.பி.யில் பெரும் போராட்டம்

மத்திய பிரதேசத்தில் பாஜக ஆட்சியில் இருக்கிறது. இந்த மாநிலத்தில் 3 தொகுதிகளில் இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இந்த 3 தொகுதிகளிலும் பாஜக வேட்பாளர்கள் வென்றாலும் காங்கிரஸ் வேட்பாளர்களுடன் ஆகப் பெருமளவுக்கு மல்லுக்கட்டிதான் வெல்ல முடிந்திருக்கிறது. 3 தொகுதி இடைத்தேர்தல்களிலும் சில ஆயிரங்கள் வித்தியாசத்தில்தான் பாஜக வேட்பாளர்கள் வென்றிருக்கின்றனர். இதேபோல் பாஜக ஆளும் கர்நாடகா மாநிலத்தில் 2 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றன. முதல்வராக பசவராஜ் பொம்மை பதவியேற்ற பின்னர் நடைபெற்ற முதல் தேர்தல். இதில் ஒருதொகுதியில்தான் கவுரவமான வெற்றியை பாஜக பெற்றுள்ளது. ஆனால் முதல்வர் பசவராஜ் பொம்மையின் சொந்த ஊர் அடங்கிய அங்கால் தொகுதியில் பாஜக தோல்வியைத் தழுவியிருப்பது அக்கட்சியை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

ராஜஸ்தானில் காங். அமோகம்

ராஜஸ்தானில் காங். அமோகம்

காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் 2 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்கள் நடைபெற்றன. இந்த 2 தொகுதிகளிலுமே காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களே அமோக வெற்றியை பெற்றிருக்கின்றனர். இத்தனைக்கும் ராஜஸ்தான் காங்கிரஸில் ஆயிரத்தெட்டு அக்கப்போர் நிலவுகிற போதும் பாஜகவால் வெற்றியை அறுவடை செய்ய முடியாமல் போயிருக்கிறது. மகாராஷ்டிராவில் 1 தொகுதிக்கான இடைத்தேர்தலிலும் காங்கிரஸ்தான் வென்றுள்ளது. தாத்ரா நகர் ஹைவேலி லோக்சபா தொகுதி இடைத்தேர்தலில் சிவசேனா, பாஜகவை வீழ்த்தியுள்ளது. மத்திய பிரதேச லோக்சபா இடைத்தேர்தலிலும் காங்கிரஸிடம் போராடித்தான் பாஜக வென்றுள்ளது. பொதுவாக 29 சட்டசபை தொகுதி இடைத்தேர்தல்களில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவுதான் என்பதை தேர்தல் முடிவுகள் அப்பட்டமாக வெளிப்படுத்தி இருக்கின்றன.

தவிடு பொடியான பி.கே. கணிப்பு

தவிடு பொடியான பி.கே. கணிப்பு

அண்மையில் தேர்தல் வியூக வல்லுநர் பிரசாந்த் கிஷோர், பாஜக என்கிற கட்சியை தேர்தல் களத்தில் இருந்து அப்படி எல்லாம் எளிதாக அகற்ற முடியாது. இன்னும் பல பத்தாண்டுகளுக்கு பாஜகவை அசைக்கவே முடியாது. இந்த உண்மையை காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் உள்ளிட்டோர் புரிந்து கொள்ள வேண்டும் என கூறியிருந்தார். ஆனால் பிரசாந்த் கிஷோரின் இந்த கணிப்பு தவறானது- மமதா பானர்ஜி ஏற்கனவே சொன்னதைப் போல பாஜக ஒன்றும் வீழ்த்தவே முடியாத ஒரு வல்லமை கொண்ட சக்தி அல்ல என்பதை இடைத்தேர்தல் முடிவுகள் தெள்ளத் தெளிவாகவே நிரூபித்திருக்கின்றன என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+