கேரளா, குஜராத் உட்பட 4 மாநிலங்களில் 5 தொகுதிகளில் இடைத்தேர்தல்.. தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
டெல்லி: கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 தொகுதிகளிலும் வரும் ஜூன் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தொடர்ந்து ஜூன் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
நமது நாட்டில் சட்டசபை அல்லது நாடாளுமன்றம் என எந்தவொரு தொகுதியாக இருந்தாலும் அந்த தொகுதியின் பிரதிநிதி உயிரிழந்தால் அல்லது ராஜினாமா செய்தால்.. அடுத்த 6 மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். குறிப்பிட்ட தொகுதியின் மக்களுக்குப் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகக்கூடாது என்பதற்காகவே இந்த விதி இருக்கிறது.

இதற்கிடையே இப்போது கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள 5 சட்டசபை தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 5 தொகுதிகளிலும் வரும் ஜூன் 19ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் என்றும் தொடர்ந்து ஜூன் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
குஜராத்தில் உள்ள காடி மற்றும் விசாவதர் தொகுதிகள், கேரளாவில் உள்ள நிலம்பூர், பஞ்சாபில் உள்ள லூதியானா மேற்கு, மேற்கு வங்கத்தில் உள்ள காளிகஞ்ச் ஆகிய சட்டசபை தொகுதிகளில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் விசாவதர் மற்றும் கேரள நிலம்பூர் தொகுதிகளில் அந்த எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல் நடக்கிறது. மற்ற 3 தொகுதிகளான காடி, லூதியானா மேற்கு மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள காளிகஞ்ச் தொகுதிகளின் பிரதிநிதிகள் இறந்ததால் அங்கும் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதால் 5 தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தேர்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இடைத்தேர்தல்கள் அனைத்திலும் வழக்கம் போல வாக்குப்பதிவு இயந்திரங்களே பயன்படுத்தப்படும். மேலும், விவிபேட்களும் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் பயன்படுத்தப்பட உள்ளது.
-
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்'












Click it and Unblock the Notifications