கேரளா, குஜராத் உட்பட 4 மாநிலங்களில் 5 தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல்! இறுதிக்கட்ட பணிகள் தீவிரம்
டெல்லி: கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்கம் ஆகிய 4 மாநிலங்களில் காலியாக இருக்கும் 5 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ளது. நாளை காலை இந்த 5 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்தத் தேர்தலில் பதிவாகும் வாக்குகள் எண்ணப்படு வரும் ஜூன் 23ம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.
இந்தியாவில் உள்ள சட்டத்தின்படி சட்டசபை அல்லது நாடாளுமன்றத் தொகுதிகள் காலியானால் ஆறு மாதங்களில் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். ஒரு தொகுதியின் பிரதிநிதி உயிரிழந்தால் அல்லது ராஜினாமா செய்தால் அடுத்த 6 மாதங்களில் அங்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டும். அந்த தொகுதிக்கான மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாமல் போகக்கூடாது என்பதற்காகவே ஆறு மாதங்களில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்ற இந்த விதி இருக்கிறது.

அதன்படி கேரளா, குஜராத், பஞ்சாப், மேற்கு வங்க மாநிலங்களில் காலியாக உள்ள 5 தொகுதிகளுக்கு நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது. இதற்குத் தேவையான அனைத்து பணிகளையும் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. நாளை காலை முதல் வாக்குப்பதிவு தொடங்கும் நிலையில், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளைத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது.
குஜராத்தில் உள்ள காடி மற்றும் விசாவதர் ஆகிய இரு தொகுதிகள், கேரளாவில் உள்ள நிலம்பூர், பஞ்சாபில் உள்ள லூதியானா மேற்கு, மேற்கு வங்கத்தின் காளிகஞ்ச் ஆகிய சட்டசபை தொகுதிகளில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
இதில் குஜராத்தின் விசாவதர் மற்றும் கேரளாவின் நிலம்பூர் தொகுதிகளில் எம்எல்ஏவாக இருந்தவர்கள் ராஜினாமா செய்தனர். குஜராத்தின் காடி, பஞ்சாபின் லூதியானா மேற்கு மற்றும் மேற்கு வங்கத்தில் உள்ள காளிகஞ்ச் தொகுதிகளின் பிரதிநிதிகள் உயிரிழந்ததால் அங்கும் இடைத்தேர்தல் நடைபெறுகிறது.
நாளை காலை முதல் வாக்குப்பதிவு இயந்திரங்களில் மக்கள் வாக்களிக்கலாம். விவிபேட்களும் அனைத்து வாக்குப்பதிவு மையங்களிலும் பயன்படுத்தப்பட உள்ளது. நாளை காலை 7 மணி முதல் மாலை வரை இந்த தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறும். இதற்குத் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாளை இடைத்தேர்தல் நடைபெறும் நிலையில், தொடர்ந்து ஜூன் 23ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
சபாஷ் வன்னியரசு.. சாதி பாகுபாட்டை உடைத்த தவெக.. கோவை கிராமத்திற்கு 21 ஆண்டுக்கு பிறகு சென்ற பேருந்து -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
3 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்.. தவெக எம்எல்ஏ பல்லவிக்கு திமுக அவதூறு நோட்டீஸ்.. என்ன மேட்டர்? -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
விழுப்புரத்தில் திருமாவளவன் திறக்க இருந்த அம்பேத்கர் சிலை.. இரவோடு இரவாக அகற்றப்பட்டது ஏன்? -
தமிழ்நாட்டுக்கு பெரிய அடி.. ஆந்திராவுக்கு கைமாறிய மசாகான் டாக் திட்டம்! தொழில் அமைச்சருக்கு சிக்கல்! -
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
கும்கி படம் எடுத்த தேனி கொட்டக்குடி கிராமத்தின் 56 வருட கனவு.. நிறைவேற்றிய தமிழக அரசு -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
வாண்டடா வண்டில ஏறிய செ.பா! ஹார்ட் டிஸ்க் திருட்டு என்றதும் பதற்றம் ஏன்? சிடிஆர் நிர்மல்குமார் கேள்வி












Click it and Unblock the Notifications