பிரதமர் மோடி அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரிப்பு- 7 பேர் புதுமுகங்கள்
டெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சர்கள் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது. இவர்களில் 7 பேர் புதுமுகங்கள்.
மத்திய அமைச்சரவையில் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா செருதா ஆகியோர் மத்திய அமைச்சர்களாக உள்ளனர். நிர்மலா சீதாராமனும் ஸ்மிருதி இரானியும் கேபினட் அமைச்சர்கள். சாத்வி நிரஞ்சன் ஜோதி, ரேணுகா செருதா இருவரும் இணை அமைச்சர்கள்.
இந்த நிலையில் நேற்று மத்திய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டது. 7 இணை அமைச்சர்கள், கேபினட் அமைச்சர்களாக பதவியேற்றனர். 36 பேர் புதுமுகங்களும் அமைச்சரவையில் இடம்பெற்றனர். புதுமுகங்கள் 36 பேரில் 7 பேர் பெண்கள். இதனையடுத்து மத்திய அமைச்சரவையில் பெண் அமைச்சர்களின் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்தது. புதியதாக பதவியேற்ற 7 பெண்கள் அமைச்சர்கள் விவரம்:

அப்னா தள் அனுபிரியா படேல்
உத்தரப்பிரதேசத்தின் மிர்சாபூர் லோக்சபா தொகுதி எம்.பி.யாக 2 முறை வெற்றி பெற்றவர். பாஜகவின் கூட்டணி கட்சியான அப்னா தள் கட்சித் தலைவராக உள்ளார். தொழில் மற்றும் வர்த்தகத் துறை இணை அமைச்சராக உள்ளார். பிரதமர் மோடியின் முந்தைய அமைச்சரவையில் சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும் பணியாற்றியவர்.

கர்நாடகாவின் சோபா கரந்த்லஜே
கர்நாடகாவின் உடுப்பி-சிக்மகளூர் தொகுதி எம்.பி. 2 முறை லோக்சபா எம்.பி.யாக வென்றவர். கர்நாடகா எம்.எல்.ஏ., எம்.எல்.சி.யாகவும் இருந்துள்ளார். கர்நாடகாவின் மின்சாரத்துறை, ஊரக மேம்பாடு மற்றும் உணவு, பொதுவிநியோகத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் சோபா கரந்த்லஜே. தற்போது மத்திய வேளாண் துறை, குடும்ப நலன் இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

குஜராத்தின் தர்ஷனா ஜர்தோஸ்
குஜராத்தின் சூரத் லோக்சபா தொகுதியில் இருந்து 3 முறை வென்றவர் தர்ஷனா ஜர்தோஸ். சூரத் மாநகராட்சி கவுன்சிலராகவும் குஜராத் சமூக நலத்துறை உறுப்பினராகவும் இருந்தவர். தற்போது ஜவுளி மற்றும் ரயில்வே துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

டெல்லி மீனாக்ஷி லேகி
டெல்லியில் இருந்து 2வது முறை லோக்சபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் மீனாக்ஷி லேகி. உச்சநீதிமன்றத்தின் வழக்கறிஞர். வெளியுறவுத் துறை மற்றும் கலாசாரத்துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

ஜார்க்கண்ட் அன்னபூர்னா தேவி
ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த அன்னபூர்னா தேவி, 4 முறை எம்.எல்.ஏவாக இருந்தவர். ஜார்க்கண்ட் மாநிலத்தின் கோடர்மா லோக்சபா தொகுதி எம்.பி.யாக உள்ளார். ஜார்க்கண்ட் மாநில அமைச்சராகவும் இருந்தவர். தற்போது மத்திய கல்வித்துறை இணை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

திரிபுராவின் பிரதிமா பௌமிக்
திரிபுரா எம்.பி.யான பிரதிமா பௌமிக், சமூக நீதித்துறை இணை அமைச்சராகி உள்ளார். திரிபுராவைச் சேர்ந்த ஒருவர் மத்திய அமைச்சரவையில் இடம்பெறுவது இதுவே முதல் முறை.

மகாராஷ்டிராவின் பாரதி பவார்
மகாராஷ்டிராவை சேர்ந்தவர் டாக்டர் பாரதி பவார். முதல் முறையாக லோக்சபா எம்.பி.யாகி உள்ளார். நாசிக் ஜில்லா பரிஷத் உறுப்பினராகவும் இருந்தவர். சுகாதாரம், குடும்ப நலன் துறை இணை அமைச்சர் பதவி கொடுக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications