ஆண்டவன் பெயரால் கொள்ளை- அயோத்தி மேம்பாட்டு திட்டம்- ஆட்டைய போட்ட ஒப்பந்ததாரர்கள்- அம்பலமாக்கிய சிஏஜி
டெல்லி: மத்திய அரசின் சுதேஷ் தர்ஷன் எனும் திட்டத்தின் கீழ் பாஜக ஆளும் உத்தரப்பிரதேச மாநிலத்தின் மேற்கொள்ளப்படும் அயோத்தி மேம்பாட்டுத் திட்டத்தில் ஒப்பந்தகாரர்கள் கொள்ளையடித்து வரும் முறைகேடுகளை இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை அம்பலபடுத்தி இருக்கிறது.
உத்தரப்பிரதேச மாநிலத்தில் ராமாயண நிகழ்வுகள் தொடர்புடைய இடங்களை ஒருங்கிணைத்து சுற்றுலா வளர்ச்சிக்காக உருவாக்கப்பட்டது அயோத்தி மேம்பாட்டுத் திட்டம். ராமாயண கதை காட்சிகள், பூங்கா, சரயு நதிக்கரையில் ராமாயணம் தொடர்பான படித்துறைகள், லட்சுமணன் பாதை மேம்பாடு, அயோத்யா சாலை விரிவாக்கம், துளசிதாஸ் தோட்டம் விரிவாக்கம் என பல பணிகள் இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் செயல்பாடுகள் தொடர்பாக 2015-ம் ஆண்டு முதல் 2022-ம் ஆண்டு வரை இந்திய தலைமை கணக்கு தணிக்கையாளர் அறிக்கை (சிஏஜி) புதன்கிழமையன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சிஏஜி அறிக்கையில் இடம்பெற்ற அயோத்தி மேம்பாட்டு திட்ட முறைகேடு தொடர்பான விவரங்கள்: 6 மாநிலங்களில் 6 பல்வேறு திட்டங்களின் கீழ் ஒப்பந்தாரர்கள் ரூ19.73 கோடி அளவில் முறைகேடாக ஆதாயம் அடைந்துள்ளனர். கோவா சின்குவேரிம்-அகுவாடா சிறை மேம்பாடு, இமாச்சல பிரதேசம் இமாலயன் சர்க்யூட், தெலுங்கானா ஹெரிட்டேஜ் சர்க்யூட், சிக்கிம் மாநிலத்தின் ரங்போ-சிங்டம், மத்திய பிரதேசத்தின் புத்த சர்க்யூட் ஆகியவை இதில் உள்ளடங்கும்.
மேலும் ஒவ்வொரு ஒப்பந்தாரர்களுக்கு கொடுக்கப்பட்ட பணியின் தொகையில் குறிப்பிட்ட அளவு உத்தரவாதம் அளிக்க வேண்டும். ஆனால் அப்படி சட்டப்பூர்வமான உத்த்ரவாதத்தை விட குறைந்த அளவுதான் கொடுத்திருக்கின்றனர். உதாரணமாக ரூ62.17 கோடிக்கு ஒப்பந்தம் எடுத்த ஒப்பந்ததாரர் உத்தரவாத தொகை ரூ3.11 கோடி அளிக்க வேண்டும். ஆனால் வெறும் ரூ1.86 கோடி மட்டுமே கொடுத்த ஒப்பந்ததாரருக்கு பணிகள் வழங்கப்பட்டுள்ளன. அதேபோல் ஒப்பந்ததார்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்ட பணிகள் ஒரே செலவினத்தை கொண்டவை. ஆனால் ரூ19.13 லட்சம் கூடுதலான செலவு காண்பிக்கப்பட்டுள்ளது.
அயோத்தி மேம்பாட்டு திட்ட பணிகளைப் பெற்ற பின்னரே 3 ஒப்பந்ததார்கள் ஜிஎஸ்டி பதிவு ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனாலும் ஒரு ஒப்பந்ததாரருக்கு முறைகேடாக ரூ19.57 லட்சம் வழங்கப்பட்டுள்ளது. குப்தர் காட் மேம்பாட்டு பணியில் கிளாம்ப் சரி செய்தல் உட்பட அடிப்படை பணிகூட செய்யாமல் பணம் பெறப்பட்டிருக்கிறது.
அயோத்தி மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தியதில் ரூ8.22 கோடி வீணாக்கப்பட்டிருக்கிறது. பல செயல்பாடுகளுக்கு கூடுதல் தொகை வழங்கப்பட்டிருக்கிறது. இவ்வாறு சிஏஜி அறிக்கை விவரித்துள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications