500க்கும் மேற்பட்ட சீனா பொருட்களை இறக்குமதி செய்யாமல் புறக்கணிப்போம்- இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு
டெல்லி: சீனாவின் 500க்கும் மேற்பட்ட பொருட்களை இறக்குமதி செய்யாமல் புறக்கணிப்போம் என்று அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.
லடாக்கின் கிழக்கு பகுதியில் இந்திய நிலப்பரப்பை சீனா ஆக்கிரமிக்க முயன்றது. இதனை இந்திய ராணுவ வீரர்கள் தடுத்து சீன வீரர்களை விரட்டி அடித்தனர்.

20 இந்திய வீரர்கள் வீர மரணம்
அப்போது நிகழ்ந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். சீனா தரப்பில் 43 ராணுவத்தினர் பலியாகி உள்ளனர். இதனால் எல்லையில் மிகப் பெரிய அளவுக்கு யுத்த சூழல் உருவாகி உள்ளது. இந்த விவகாரத்தை உலக நாடுகள் உன்னிப்பாக கவனித்தும் வருகின்றன.

நாட்டில் கொந்தளிப்பு
இதனிடையே சீனாவின் கொடூரமான தாக்குதல் நாடு முழுவதும் பெரும் கோபத்தை பொதுமக்களிடத்தில் ஏற்படுத்தியுள்ளது. நாட்டின் பல பகுதிகளில் சீனாவுக்கு எதிராக போராட்டங்கள் நடைபெற்றன. சீனாவின் தேசிய கொடி எரிக்கப்பட்டும் சீன பொருட்கள் உடைக்கப்பட்டும் போராட்டங்கள் நடைபெற்றன.

சீனா பொருட்கள் புறக்கணிப்பு
இந்த நிலையில் சீனாவில் இருந்து 500க்கும் மேற்பட்ட பொருட்களை இறக்குமதி செய்யாமல் புறக்கணிப்போம் என்று அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. எந்தெந்த பொருட்களை இறக்குமதி செய்யக் கூடாது என்கிற பட்டியலையும் அது வெளியிட்டுள்ளது. சீனாவில் இருந்து பொம்மைகள், வீட்டு உபயோகப் பொருட்கள். ஆட்டோ உதிரிபாகங்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்றவதைதான் தற்போது இறக்குமதி செய்யப்படுகின்றன. இவற்றை இறக்குமதி செய்ய வேண்டாம் என்கிறது வர்த்தகர் கூட்டமைப்பு.
Recommended Video

உள்நாட்டிலேயே உற்பத்தி
இப்பொருட்களை இறக்குமதி செய்வதற்கு பதில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய முடியும்; இதனை நாம் ஊக்குவித்தாலே சீனாவை சார்ந்து இருக்க தேவை இல்லை; சீனாவின் ஏற்றுமதி வர்த்தகமும் கடுமையான பாதிப்பை எதிர்கொள்ளும் என்கின்றனர் அகில இந்திய வர்த்தகர் கூட்டமைப்பு நிர்வாகிகள். இதன் மூலம் சீனாவுக்கு ரூ1லட்சம் கோடி இழப்பு ஏற்படுத்த முடியுமாம். இது தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயலுடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
-
ஒரு வழியாக மாற்றப்பட்ட CBSE தலைவர், செயலாளர்! OSM குளறுபடி குறித்து விசாரிக்க தனியாக ஆணையம் அமைப்பு -
ஏர்போர்ட்டில் வைத்தே கரப்பான் பூச்சி ஜனதா கட்சி தலைவர் கைது? டெல்லியில் அலறும் பாஜக அரசு -
இந்தியாவில் விருப்பப்பட்டு ஒருவர் பாலியல் தொழில் செய்வது குற்றமல்ல! உச்ச நீதிமன்றம் முக்கிய தீர்ப்பு -
பாஜகவுக்கு தலைவலியாக மாறும் கரப்பான்பூச்சி கட்சி! ஜூன் 6ம் தேதி டெல்லியை ஸ்தம்பிக்க வைக்க திட்டம் -
கதறும் கராச்சி.. குடிநீர், மின்சாரம், கேஸ் எதுவும் இல்லை.. சிந்து நதியை நிறுத்தியதால் நிலைமை மோசம் -
கனவுகள் தகர்ந்தன! மாணவர்களால் மறக்க முடியாத மே மாதம்! 24 லட்சம் மாணவர்களை பாதித்த தேர்வு குளறுபடிகள் -
இனி சீனாவுக்கு தெரியாமல் அணுவும் அசையாது.. எதிர்காலத்தை கணிக்கும் AI சாப்ட்வேர்.. திக்திக் ஆய்வு -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட்












Click it and Unblock the Notifications