நாங்கள் தேசபக்தர்கள்.. தலையை சீவினாலும் நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டோம்! அரவிந்த் கெஜ்ரிவால் பொளேர்
டெல்லி: டெல்லி ஆம் ஆத்மி அமைச்சர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்தில் அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மத்திய அரசைக் கடுமையாகச் சாடியுள்ளார்.
டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு இப்போது நடைபெற்று வருகிறது. டெல்லி ஆம் ஆத்மி அரசில் முக்கியமானவர்களில் ஒருவர் சத்யேந்தர் ஜெயின்.
அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சராக உள்ள இவர், கொரோனா காலத்தில் சிறப்பாகச் செயல்பட்டதாக அறியப்பட்டார். மேலும், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உடன் நெருக்கமாக உள்ள தலைவர்களில் முக்கியமானவர்

கைது
இந்தச் சூழலில் சத்யேந்தர் ஜெயின் நேற்றைய தினம் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்டார். கொல்கத்தாவைச் சேர்ந்த நிறுவனத்துடன் இணைந்து கடந்த 2015-16 ஆண்டுகளில் ஹவாலா பணப் பரிவர்த்தனையில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டி, சத்யேந்தர் ஜெயின் கைது செய்யப்பட்டார். வங்கி மூலமாக இல்லாமல் இரண்டு தரப்பினர் உள்ளூர் முகவர்களுடன் பெரும் தொகையைப் பரிமாற்றம் செய்து கொள்வதே ஹவாலா பரிவர்த்தனை ஆகும்.

கண்டனம்
இந்தச் சம்பவம் டெல்லி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், இந்த கைது சம்பவத்திற்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். இது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை என்று குறிப்பிட்ட அவர், பிற ஆம் ஆத்மி எம்எல்ஏக்களைப் போலவே இவரும் எந்த தவறும் செய்யவில்லை என்று நீதிமன்றத்தால் விடுவிக்கப்படுவார் என்றும் அவர் தெரிவித்தார்.

தலையை வெட்டினாலும்
இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அரவிந்த் கெஜ்ரிவால், "சத்யேந்தர் ஜெயின் மீது போடப்பட்டுள்ள வழக்கு முற்றிலும் பொய்யான வழக்கு. நாங்கள் எல்லாம் மிகப் பெரிய தேசபக்தர்கள். எங்களைத் தலையை வெட்டி கூட எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் ஒருபோதும் நாங்கள் நாட்டை காட்டிக் கொடுக்க மாட்டோம். நானே தனிப்பட்ட முறையில் அவர் மீதான வழக்குகள் தொடர்பான ஆவணங்களைப் பார்த்தேன். அவர் மீதான குற்றச்சாட்டுகள் பொய்யானவை. இது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை.

அரசியல் உள்நோக்கம்
இதேபோல் தான் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன், அமைச்சரவையில் இடம் பெற்ற ஒருவரை நான் பதவி நீக்கம் செய்தேன். மத்திய ஏஜென்சிகள் நடவடிக்கை எடுக்கும் வரை நாங்கள் காத்திருக்கவில்லை. இருப்பினும், மத்திய அரசு நிறுவனங்கள் முழுக்க முழுக்க தவறான முறையில் செயல்படுகின்றன. அவர்களின் நடவடிக்கை அரசியல் உள்நோக்கம் கொண்டதாக உள்ளன. சத்யேந்தர் ஜெயின் வழக்கில் தேவையில்லாமல் இழுத்துவிடப்பட்டுள்ளார்.

பொய் வழக்கு நீடிக்காது
இந்த பொய் வழக்கு ரொம்ப காலம் நீடிக்காது. டெல்லி எதிர்க்கட்சிகள் அவர் பதவி விலக வேண்டும் எனக் கூறுவது எனக்குத் தெரியும். எதிர்க்கட்சிகள் இப்படி தான் எதையாவது சொல்லிக் கொண்டு இருப்பார்கள். இந்த வழக்கில் எதாவது உண்மை இருந்து இருந்தால் நானே நடவடிக்கை எடுத்திருப்பேன். ஆனால் அவர் முறைகேடுகளில் எதுவும் ஈடுபடவில்லை. இறுதியில் எப்போதும் உண்மையே வெல்லும். நாட்டின் நீதித்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது" என்று தெரிவித்தார்.

சொத்து பறிமுதல்
சத்யேந்தர் ஜெயின் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான ₹ 4.81 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் அமலாக்கத் துறையால் பறிமுதல் செய்யப்பட்டு இருந்தது. இந்த நடவடிக்கைக்குச் சரியாக இரு மாதங்களுக்குப் பின்னல், கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. நேற்று இரவை அவரை அமலாக்கத் துறையினர் கைது செய்து இருந்தனர்.

ஜனவரி மாதம்
முன்னதாக கடந்த ஜனவரி மாதம் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், பஞ்சாப் தேர்தலுக்கு முன்பு தனக்குக் கிடைத்த தகவலின்படி விரைவில் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் அமலாக்கத் துறையால் கைது செய்யப்படலாம் என்று கூறி இருந்தார். முன்பு சத்யேந்தர் ஜெயின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் எதுவும் கைப்பற்றப்பட வில்லை என்றும் இருப்பினும் அவரை கைது செய்தால் சட்டப்படி அதை எதிர்கொள்வோம் என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது.
-
Sonia Gandhi: சோனியா காந்தி மருத்துவமனையில் திடீர் அனுமதி.. ஹாஸ்பிடலுக்கு விரைந்த ராகுல், பிரியங்கா! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications