"அம்மாவின் மரியாதையை காப்பாற்ற 1000 வேலைகளை இழக்க தயார்.." கங்கனாவை அறைந்த குல்விந்தர் கவுர் பரபர

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தாயின் மரியாதையைக் காப்பாற்ற 1000 வேலைகளைக் கூட இழக்கத் தயாராக இருப்பதாக கங்கனா ரனாவத்தை அறைந்த சிஐஎஸ்எப் காவலர் குல்விந்தர் கவுர் பரபர குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

நடிகை கங்கனா ரனாவத் நேற்று சண்டிகர் விமான நிலையத்தில் இருந்து டெல்லி கிளம்ப இருந்தார். அப்போது செக்யூரிட்டி செக் இன் பகுதிக்கு அவர் சென்ற போது சிஎஸ்ஐஎப் காவலர் ஒருவர் அவரை தாக்கினார்.

kangana ranaut farmers protest farmer Lok Sabha election 2024 2024

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பைக் கிளப்பிய நிலையில், விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரி குல்விந்தர் கவுர் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும், அவர் மீது நான்கு பிரிவுகளில் வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

100 வேலைகளை இழக்கத் தயார்: அவர் மீது விசாரிக்கக் குழு அமைக்கப்பட்டுள்ள நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விமான நிலையப் பாதுகாப்பு அதிகாரி குல்விந்தர் கவுர் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் எக்ஸ் பக்கத்தில், "இந்த வேலையை இழப்பது குறித்து நான் பயப்படவில்லை. என் அம்மாவின் மரியாதைக்காக இதுபோன்ற 1000 வேலைகளை இழக்கத் தயாராக இருக்கிறேன்" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி தொகுதியில் வெற்றி பெற்ற கங்கனா ரனாவத்தை விமான நிலையத்தில் வைத்து நேற்று குல்விந்தர் கவுர் அறைந்தார். டெல்லி விமான நிலையத்தில் ஏற வந்த அவரை குல்விந்தர் கவுர் தாக்கியுள்ளார். இதையடுத்து குல்விந்தர் கவுர் சஸ்பெண்ட் செய்யப்பட்ட நிலையில், இந்தச் சம்பவம் குறித்து விசாரிக்கச் சிறப்புக் குழுவும் அமைக்கப்பட்டது.

எதற்காகத் தாக்குதல்: கங்கனா ரனாவத் மீதான தாக்குதல் குறித்த தகவல் நேற்று வெளியான உடன் அது நாடு முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து குல்விந்தர் கவுர் இது குறித்து வெளியிட்ட வீடியோவில், "டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்திக் கொண்டு இருந்த போது 100 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு கங்கனா போராட்டம் நடத்தியதாகப் பேசியிருந்தார். எனது அம்மாவும் அந்த போராட்டத்தில் இருந்தார்" என்று கூறியிருந்தார்.

விமான நிலையத்தில் செக்-இன் கவுண்டரில் இந்தச் சம்பவம் நடந்தது போலத் தெரிகிறது. தொடக்கத்தில் இந்தச் சம்பவம் குறித்து அமைதியாக இருந்த கங்கனா ரனாவத், பின்னர் பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரித்து வருவதாக மற்றொரு பகீர் கருத்தைக் கூறினார்.

கங்கனா: இது தொடர்பாக அவர் வெளியிட்ட வீடியோவில், "செக்யூரிட்டி செக்-இன் நேரத்தில் இந்த சம்பவம் நடந்தது. நான் அருகே வரும் வரை அந்த காவலர் காத்திருந்தார். நான் அங்குச் சென்றதும் என்னைத் தாக்கினார்.. என்னைக் கடுமையாகத் திட்டினார். என்னை ஏன் அடித்தீர்கள் என்று நான் கேட்டதற்கு விவசாயிகளை ஆதரிப்பதாக மட்டும் சொன்னார்.. இப்போது நான் பாதுகாப்பாக இருக்கிறேன்... ஆனால், பஞ்சாபில் தீவிரவாதம் அதிகரித்து வருகிறது என்பது எனக்குக் கவலை அளிக்கிறது" என்று கூறியிருக்கிறார்.

கங்கனா ரனாவத் இந்த முறை பாஜக சார்பில் இமாச்சல பிரதேசத்தில் உள்ள மாண்டி லோக்சபா தொகுதியில் போட்டியிட்டார். அதில் 5.37 லட்சம் வாக்குகளைப் பெற்ற கங்கனா ரனாவத், சுமார் 74,755 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது..

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+