விவசாய சட்டங்களை திரும்பப் பெற முடியாது:மத்திய அமைச்சர்கள் உறுதி.. -8-ம் கட்ட பேச்சுவார்த்தை தோல்வி
டெல்லி: புதிய விவசாய சட்டங்களை ஒருபோதும் திரும்பப் பெறவே முடியாது என டெல்லியில் விவசாய சங்கப் பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல் இருவரும் திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனால் 8-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிவடைந்துள்ளது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தை வரும் 15-ந் தேதி நடைபெற உள்ளது.
மத்திய அரசு கொண்டு வந்த 3 விவசாய சட்டங்களை திரும்பப் பெற வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களின் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் டெல்லியில் முகாமிட்டு 44 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் விவசாயிகள் போராட்டம் தொடர்ந்து வருகிறது.

70 பேர் பலி- பேச்சுவார்த்தை
இந்த போராட்டத்தில் பங்கேற்ற 70க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாண்டு போயுள்ளனர். இந்த போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர மத்திய அரசு இதுவரை 7 முறை விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியது. இந்த பேச்சுவார்த்தைகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.

8-ம் கட்ட பேச்சுவார்த்தை
இந்த நிலையில் இன்று பிற்பகல் டெல்லி விஞ்ஞான பவனில் 8-ம் கட்ட பேச்சுவார்த்தை நடைபெற்றது, மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையில், விவசாய சட்டங்களை திரும்பப் பெறவே முடியாது; போராட்டத்தைக் கைவிட வேண்டும் என்றனர் மத்திய அமைச்சர்கள்.

ஒட்டுமொத்த நாட்டுக்குமானது..
மேலும் ஒருசில மாநிலங்களுக்காக மட்டும் விவசாய சட்டங்கள் கொண்டுவரப்படவில்லை; ஒட்டுமொத்தமான நாட்டுக்கும்தான் இந்த சட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன எனவும் கூறினர். ஆனால் விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளோ இதனை நிராகரித்தனர். மத்திய அரசு புதிய விவசாய சட்டங்களைக் கைவிட வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறோம் என திட்டவட்டமாக கூறினர்.

விவசாய சங்க தலைவர்கள் உறுதி
அத்துடன் வெற்றி பெறுவோம்; அல்லது உயிரை விடுவோம் என பேச்சுவார்த்தை மேஜையில் பதாகைகளையும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் வைத்திருந்தனர். அரசு தரப்புக்கும் விவசாயிகளுக்கும் இடையேயான இன்றைய 8-வது கட்ட பேச்சுவார்த்தையும் தோல்வி அடைந்தது. இதனைத் தொடர்ந்து வரும் 15-ந் தேதி 9- கட்ட பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications