"உச்சாணிக்கு" ஏறிய கேஸ் சிலிண்டர் விலை.. சமையல் கேஸ் மானியம் குறித்து மத்திய அரசு அதிரடி.. என்னாச்சு
டெல்லி: மத்திய அரசின் உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு இலவச கேஸ் சிலிண்டர் இணைப்பு வழங்கப்பட்டு வரும்நிலையில், மத்திய அரசு முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
"பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா" என்ற பெயரில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பிரதமர் மோடியால் உத்தரபிரதேசத்தின் பல்லியாவில் மே 1, 2016 அன்று இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.

யோஜனா: நாடு முழுவதும் ஏழை மக்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கும் "பிரதமரின் உஜ்வாலா யோஜனா" திட்டத்தை பிரதமர் மோடி கடந்த 2016 மே 1-ம் தேதி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் பயனாளிகளுக்கு காஸ் அடுப்பும், முதலாவது சிலிண்டரும் இலவசமாக வழங்கப்படும்.
பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டவர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதற்கும், இந்த உஜ்வாலா யோஜனா திட்டம் அறிவிக்கப்பட்டது.. இது மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தால் செயல்படுத்தப்படும் முதல் சமூக நலத் திட்டமாகும். வாடிக்கையாளர்கள் எல்பிஜி சிலிண்டரை இண்டேன் கேஸ் டிஸ்ட்ரிபியூட்டர் அல்லது தங்கள் பகுதிக்கு அருகில் சென்று வாங்கலாம்.
ஆவணங்கள்: இதற்கு எந்த ஆவணங்களும் தேவையில்லை, சிலிண்டருக்கான பணத்தை செலுத்தினால் மட்டும் போதுமானது. ஒருவேளை நீங்கள் வேறு ஒரு இடத்திற்கு மாற்றலாகி சென்றால், அல்லது சிலிண்டர் தேவையில்லை என்ற நினைத்தால், சிலிண்டரை விற்பனை நிலையத்திலேயே திருப்பி தரலாம். 5 வருடங்களில் திருப்பித் தந்தால், சிலிண்டரின் விலையில் 50% திருப்பி தரப்படும்.. இதுவே, 5 ஆண்டுகளுக்குப் பிறகு திருப்பி தந்தால் 100 ரூபாய் திருப்பி தரப்படும்..
அறிவிப்பு: இந்நிலையில், மத்திய அரசு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, உள்நாட்டு எல்பிஜி எரிவாயு சிலிண்டர் விலையை கட்டுக்குள் வைத்திருப்பதாகவும், எல்பிஜிக்கான நேரடி பயன் பரிமாற்றம் (டிபிடிஎல்) திட்டத்தின் கீழ், தகுதியுடைய பயனாளிகளின் வங்கிக் கணக்கில் மானியம் வரவு வைக்கப்படும் என்றும் மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
வழக்கமாக, பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின்கீழ், கடந்த 21 மே 2022 முதல், ஒவ்வொரு சிலிண்டருக்கும் ரூ.200 மானியம் அறிவித்திருந்தது. இந்த மானியம், வருடத்துக்கு 12 சிலிண்டர்களுக்கும் பொருந்தும்.
மானியம் : ஆனால், கடந்த 2022-23 மற்றும் 2023-24 நிதியாண்டுகளில் ரூ.200 மானியத்துடன் எரிவாயு சிலிண்டர்களை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்திய அரசின் புள்ளிவிவரங்களின்படி, இந்த திட்டத்தில் 9 கோடிக்கும் அதிகமான பயனாளிகள் இருக்கிறார்கள்.. 2020-21 முதல் 2022-23 வரை, எல்பிஜி விலைகளுக்கான சர்வதேச அளவுகோலான சவுதி CP, ஒரு MTக்கு 415-ல் இருந்து 712 ஆக அதிகரித்துள்ளது.
விளக்கம்: இதுகுறித்து, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை வள அமைச்சகம், மக்களவையில் இதை பற்றி சொன்னதாவது: "சர்வதேச விலைகள் உயர்ந்தாலும், அவற்றை இந்திய குடிமக்கள் முழுமையாக ஏற்கவில்லை. இதனால், பொதுத்துறை எண்ணெய் விற்பனை நிறுவனங்கள் எல்பிஜி விற்பனையில் நஷ்டத்தை சந்தித்துள்ளன" என்று தெரிவித்துள்ளது. ஆக, வறுமை கோட்டிற்கு கீழ் வாழும் குடும்ப அட்டைகளுக்கு கேஸ் சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்து வருகிறது.
எப்படி விண்ணப்பிப்பது:
* https://www.pmuy.gov.in/index.aspx இணையதளத்துக்கு செல்லவும்.
* அதில் Indane, Bharatgas, Hindustan Petroleum ஆகியவற்றில் ஏதேனும் ஒரு சிலிண்டர் சேவையை தேர்வு செய்யவும்.
* எல்லா விவரங்களையும் பூர்த்தி செய்யவும்.
* விண்ணப்பம் சரிபார்க்கப்பட்ட பின் உங்களுக்கு சிலிண்டர் இணைப்பு வழங்குவதற்கான பணி தொடங்கும்
தகுதிகள்: பெண்களே இந்த திட்டத்தின் பயனாளிகள் என்பதால் இதற்கு விண்ணப்பிக்கும் பெண்கள் 18 வயதிற்கு மேல் இருக்க வேண்டும். அவரும் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும். குடும்ப உறுப்பினர்கள் பெயரில் இதற்கு முன்பு எல்பிஜி கணக்கு ஏதும் இருக்க கூடாது. விண்ணப்பங்களை பரிசீலனை செய்த பிறகு பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் தகுதியான நபர்களுக்கு சிலிண்டர் இணைப்புகளை வழங்கும்.
விண்ணப்பதாரரின் பெயர் SECC-2011 பட்டியலில் இருக்க வேண்டும் மற்றும் எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களின் BPL தரவுத்தளத்தில் வழங்கப்பட்ட தகவலுடன் பொருந்த வேண்டும். விண்ணப்பதாரர் அரசாங்கத்தால் வழங்கப்படும் வேறு எந்த திட்டத்திலும் பதிவு செய்யக்கூடாது.












Click it and Unblock the Notifications