கோவாக்சின் தடுப்பூசி 2 டோஸும் போட்டுவிட்டீர்களா? உங்களுக்காகவே வந்துள்ள அட்டகாசமான அறிவிப்பு
டெல்லி: இந்திய பயணிகளுக்கு பெரும் நிம்மதி தரும் வகையில் 2 டோஸ் கோவாக்சின் எடுத்துக் கொண்டுள்ள பயணிகளை வரும் நவ. 30 முதல் தங்கள் நாட்டில் அனுமதிப்பதாகக் கனடா அரசு அறிவித்துள்ளது.
கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து உலகம் இப்போது தான் மெல்ல இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறது. எந்த நாட்டிலும் வைரஸ் பாதிப்பு முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை.
வேக்சின் பணிகள் காரணமாகவே உலகின் பல்வேறு நாடுகளிலும் வைரஸ் பாதிப்பு கட்டுக்குள் இருந்து வருகிறது.

உலக நாடுகள்
இருப்பினும், வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகள் மூலம் தங்கள் நாட்டில் வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் உலக நாடுகள் தெளிவாக உள்ளதால் வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. 2 டோஸ் வேக்சின் போட்டவர்களுக்கு மட்டும் அனுமதி என பல்வேறு நாடுகளும் அறிவித்து வருகின்றன. இருந்தாலும் கூட ஒவ்வொரு நாடும் சில குறிப்பிட்ட வேக்சின்களை மட்டும் அங்கீகரித்துள்ளதால் இதிலும் சற்று குழப்பம் நிலவுகிறது.

கோவாக்சின் தடுப்பூசி
குறிப்பாக ஹைரதாபாத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கிய கோவாக்சின் தடுப்பூசியை உலகின் பல நாடுகளும் முதலில் அங்கீகரிக்கவில்லை. நீண்ட இழுபறிக்குப் பிறகு கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியது. அதைத் தொடர்ந்து பல நாடுகளும் கோவாக்சின் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கி வருகிறது.

கனடா அனுமதி
இந்தச் சூழலில் கோவாக்சின் 2 டோஸ் எடுத்துக் கொண்டவர்களை தங்கள் நாட்டில் அனுமதிப்பதாகக் கனடா அறிவித்துள்ளது. இது இந்தியாவில் இருந்து செல்லும் பயணிகளுக்கு பெரும் நிம்மதியை அளிப்பதாக உள்ளது. சீனாவின் சினோபார்ம் மற்றும் சினோவாக் வேக்சின்களை எடுத்துக் கொண்டவர்களுக்கும் அனுமதி அளிக்கப்படும் என்று கனடா அரசு அறிவித்துள்ளது. வரும் நவ. 30ஆம் தேதி முதல் இந்த தடுப்பூசி எடுத்துக் கொண்டவர்களுக்கு அனுமதி அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தடுப்பூசி கட்டாயம்
இது குறித்து அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "நவம்பர் 30 முதல், கனடாவுக்கு வருபவர்கள் கட்டாயம் வேக்சின் போட்டிருக்க வேண்டும். மருத்துவ காரணங்களைத் தவிர மற்றவர்கள் தடுப்பூசி போடாமல் கொரோனா நெகடிவ் சான்றிதழ் உடன் கனடா வருபவர்களுக்கு அனுமதி இல்லை. இது குறித்து தேவையான படிவங்களை நிரப்பி முன்கூட்டியே பயணிகள் சமர்ப்பிக்க வேண்டும், இதற்கான வழிகாட்டுதல்களை விமான நிறுவனங்களுக்கு அளித்துள்ளோம். பயணிகள் அவர்களைத் தொடர்புகொண்டு சந்தேகங்களைத் தெளிவுபடுத்திக் கொள்ளலாம்" எனக் கூறப்பட்டுள்ளது.

கனடா இந்தியா உறவு
கனடா நாட்டில் இந்தியர்களின் மக்கள்தொகையில் குறிப்பிடத் தகுந்த அளவுக்கு உள்ளது. ஆண்டுதோறும் பலரும் இந்தியாவில் இருந்து கனடாவுக்குச் சென்று வருகின்றனர், இதனால் கோவாக்சின் தடுப்பூசிக்கு ஒப்புதல் இல்லாமல் இருந்தது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியிருந்தது. இந்தச் சூழலில் கனடா அரசின் இந்த அறிவிப்பு கனடா செல்லும் இந்தியப் பயணிகளுக்கு பெரும் நிம்மதியைத் தருவதாக அமைந்துள்ளது.
Recommended Video

கோவாக்சின் தடுப்பூசி
ஹைரதாராபத்தை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் உருவாக்கியுள்ள கோவாக்சின் தடுப்பூசி செயலிழக்கப்பட்ட வைரஸ் தொழில்நுட்பத்தைக் கொண்டு உருவாக்கப்பட்டது. 4 முதல் 5 வாரக்கால இடைவெளியில் இந்தத் தடுப்பூசியை மக்களுக்கு அளிக்க வேண்டும். கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் கோவாக்சின் தடுப்பூசிக்கு உலக சுகாதார அமைப்பு அங்கீகாரம் வழங்கியது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications