அடித்து ஆடுதே இந்தியா.. மேற்கு உலகை அடுத்தடுத்து ஆட்டிப்படைக்கும் "ராஜதந்திரம்".. கரையுதே கனடா
டெல்லி: இந்தியா அடுத்தடுத்து மேற்கொண்டு வரும் உலக அளவிலான ராஜதந்திர நடவடிக்கைகள் மேற்கு உலக நாடுகளை வியப்பிற்கு உள்ளாக்கி உள்ளது. முக்கியமாக இந்தியா மேற்கொண்ட இரண்டு நடவடிக்கைகள் மேற்கு உலகை கிட்டத்தட்ட கதற வைத்துள்ளது என்றுதான் கூற வேண்டும்.
சமீபத்தில் பிரிக்ஸ் மீட்டிங் தென்னாப்பிரிக்காவில் நடத்தப்பட்டது. ஜோஹென்ஸ்பர்க்கில் நடந்த இந்த கூட்டத்தில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா நாட்டு தலைவர்கள் கலந்து கொண்டனர். இதற்காக பிரதமர் மோடி ஜோஹென்ஸ்பர்க் சென்றார்.

இந்த மாநாட்டில் இந்தியாவின் ஒப்புதலுடன் புதிய நாடுகளை இணைக்கும் முடிவு எடுக்கப்பட்டது. பிரிக்ஸ் நாடுகளின் பலத்தை அதிகரிக்கும் விதமாகவும், கூட்டமைப்பை பெரிதாக்கும் விதமாகவும் இந்த உறுப்பினர் சேர்க்கை நடந்து உள்ளது. பிரிக்ஸ் நாடுகள்தான் ஏற்கனவே உலகின் பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது
உதாரணமாக ரஷ்யா, சீனா, இந்தியா ஆகியவைதான் உலக பொருளாதாரத்தில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த நிலையில்தான் தற்போது எண்ணெய் வளம் நிரம்பிய நாடுகளை பிரிக்ஸ் கூட்டமைப்பு தங்கள் குழுவில் சேர்த்து உள்ளது. பிரிக்ஸ் கூட்டமைப்பில் 6 புதிய நாடுகளை சேர்த்துக்கொள்ள ஒப்புதல் வழங்கப்பட்டு உள்ளது. அர்ஜென்டினா, ஈரான், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சவுதி அரேபியா, எத்தியோப்பியா மற்றும் எகிப்து ஆகிய நாடுகளை இந்த கூட்டமைப்பில் சேர்த்துக்கொள்ள உள்ளது.
இதன் மூலம் உலகின் ஒன்பது பெரிய எண்ணெய் உற்பத்தியாளர்களில் ஆறு நாடுகள் பிரிக்ஸ் குழுவில் அமைப்பில் உறுப்பினர்களாக இருக்கும். இதன் மூலம் உலகின் எண்ணெய் வளத்தை பிரிக்ஸ் நாடுகள் கட்டுப்படுத்த முடியும்.
இதை கண்டிப்பாக மேற்கு உலக நாடுகள் எதிர்ப்பார்க்கவில்லை. ஆசிய - ரஷ்ய - ஆப்ரிக்க நாடுகளின் கூட்டமைப்பில் மத்திய கிழக்கு நாடுகள் இணைந்து இருப்பது மேற்கு உலக நாடுகளை கதறவிட்டு உள்ளது. இதன் மூலம் உலகின் 30 சதவிகித பொருளாதாரத்தை பிரிக்ஸ் நாடுகள் பூர்த்தி செய்ய உள்ளன.
மொத்தம்: $30.5 டிரில்லியன் (உலகப் பொருளாதாரத்தில் 30%) கிட்டத்தட்ட இந்த பிரிக்ஸ் நாடுகள் கீழ் வந்துள்ளன. இவர்கள் விரைவில் பிரிக்ஸ் மணி என்ற பணத்தை வெளியிட்டு அமெரிக்க டாலருக்கு பதில் அந்த பணத்தை பயன்படுத்த உள்ளன.
மேற்கு உலகம் கதறல்: மேற்கு உலகம் இதனால் கதறிக்கொண்டு இருக்கும் நிலையில்தான் தற்போது கனடா விவகாரம் உச்சம் எடுத்துள்ளது. இதில் மேற்கு உலக நாடுகளுக்கு.,. முக்கியமாக கனடா, பிரான்ஸ், அமெரிக்கா, ஆஸ்திரேலியாவிற்கு அஞ்சாமல் இந்தியா அடித்து ஆடிக்கொண்டு இருக்கிறது. சீக்கியத் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூனில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இந்திய அரசாங்கம் இருக்கலாம் என பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அதிர்ச்சி அளிக்கும் புகார்களை அவர் அடுக்கி உள்ளார்.
இதனால் இந்தியா கனடா இடையிலான மோதல் அடுத்த கட்டத்தை அடைந்து உள்ளது. இதில் கனடாவின் விசாரணைக்கு பிரான்ஸ், அமெரிக்கா, யுகே, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் நேரடியாக உதவி செய்ய தொடங்கி உள்ளன. இது இந்தியாவிற்கு பிரஷரை ஏற்படுத்தி உள்ளது.
ஆனாலும் இந்தியா இதில் இறங்கி போகாமல்.. நீங்கள் ஆதாரத்தை கொடுங்கள். நடவடிக்கை எடுக்கிறோம். ஆதாரம் இல்லாமல் பொய்யாக எங்கள் மீது குற்றச்சாட்டுகளை வைக்க வேண்டாம் என்று அதிரடியாக அறிவித்து உள்ளது. இந்த விவகாரத்தில் கன்னடர்களுக்கு விசா தடை, தூதரக அதிகாரி வெளியேற்றம், இந்தியாவில் காலிஸ்தானி அமைப்பாளர்கள் கைது என்று இந்தியா தொடர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. கனடா, அமெரிக்காவின் பிரஷர் காரணமாக இந்தியா இறங்கி வரும் என்று மேற்கு உலக நாடுகள் எதிர்பார்த்த நிலையில்.. இந்தியா அடித்து ஆடுவது மேற்கு உலக நாடுகளை ஒருகணம் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications