‛‛தேர்தலில் தோற்கும் வேட்பாளர்கள் இவிஎம்மை சரிபார்க்க கோரலாம்’’.. உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
டெல்லி: தேர்தலில் 2வது இடம் மற்றும் 3வது இடம் பிடிக்கும் வேட்பாளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கன்ட்ரோலரில் உள்ள மெமரியை சரிபார்க்க கோரிக்கை வைக்கலாம் என உச்சநீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. விவிபேட் இயந்திரத்தின் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ணக் கோரிய மனுக்களை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
தேர்தல்களில் பயன்படுத்தப்படும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் மீது சந்தேகம் தெரிவித்தும், ஓட்டுப்பதிவு இயந்திரத்துக்கு பதில் மீண்டும் வாக்குச்சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் விவிபேட் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ண வேண்டும். விவிபேட் ஒப்புகை சீட்டை வாக்காளர்கள் கையில் வழங்க வேண்டும் எனவும் உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்கள் மீது தொடர்ந்து விசாரணை நடத்தி வந்த உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியது. நீதிபதிகள் சஞ்சீவ் கன்னா, திபன்கர் தத்தா ஆகியோர் அமர்வு இன்று அந்த மனுக்களை அதிரடியாக தள்ளுபடி செய்தது.
அதாவது மீண்டும் ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடத்த வேண்டும் எனக்கூறிய மனு, விவிபேட் ஒப்புகை சீட்டை 100 சதவீதம் எண்ணக்கோரிய மனுக்கள், ஓட்டளித்த பிறகு விவிபேட் ஒப்புகை சீட்டை வாக்காளர்கள் கையில் வழங்ககோரிய மனுக்களை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
இதன்மூலம் மீண்டும் ஓட்டுச்சீட்டு முறைக்கு மாற முடியாது என்பதை உச்சநீதிமன்றம் உறுதியாக தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி தற்போதுள்ள தேர்தல் நடைமுறையை நம்ப மறுப்பது என்பது தேவையற்ற சந்தேகங்களை உருவாக்கும். இதுதவிர தேர்தல் ஆணையத்துக்கு சில முக்கிய உத்தரவுகளை உச்சநீதிமன்றம் பிறப்பித்தது.
அதன்படி விவிபேட் இயந்திரத்தில் சின்னங்களை பொருத்திய பிறகு அதனை சீல் வைத்து பாதுகாக்க வேண்டும். இந்த நடைமுறையை மே மாதம் 1 மற்றும் அதற்கு பிறகு வரும் நாட்களில் கட்டாயம் பின்பற்ற வேண்டும். மேலும் விவிபேட் எஸ்எல்யூக்களை சீல் வைத்து வேட்பாளர்கள் அல்லது அவர்களின் பிரதிநிதிகளின் கையெழுத்து பெற்று பாதுகாக்க வேண்டும். தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்ட பிறகும் கூட எஸ்எல்யூக்களை ஓட்டுப்பதிவு இயந்திரத்துடன் 45 நாட்கள் பாதுகாக்க வேண்டும். மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை போல் விவிபேட் இயந்திரங்களும் கையாளப்பட வேண்டும்.
மேலும் தேர்தலில் 2வது, 3வது இடம்பிடித்த வேட்பாளர்கள் கோரிக்கை வைத்தால் மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தின் மைக்ரோ கன்ட்ரோலரில் உள்ள மெமரியை சரிபார்க்க கோரலாம். நாடாளுமன்ற தொகுதியில் உள்ள சட்டசபை தொகுதிகளில் 5 சதவீத மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களை சரிபார்க்கலாம். இதற்கான கோரிக்கையை வேட்பாளர்கள் எழுத்துப்பூர்வமாக தேர்தல் முடிந்த 7 நாட்களுக்குள் வழங்க வேண்டும். அந்த கோரிக்கையை ஏற்று மின்னணு ஒட்டுப்பதிவு இயந்திரங்கள் தயாரித்த என்ஜினீயர் குழு சரிபார்க்க வேண்டும். இந்த ஆய்வின்போது வேட்பாளர்கள் பூத் எண்களை கொண்டு ஆய்வுக்கான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை அடையாளம் காட்ட வேண்டும்.
என்ஜினீயர் குழு மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தை சரிபார்க்கும் வேட்பாளர்கள் மற்றும் அவரது பிரதிநிதிகள் உடன் இருக்கலாம். இந்த ஆய்வுக்கு பிறகு தேர்தல் அதிகாரி அதுபற்றிய விபரத்தை அறிவிப்பு செய்ய வேண்டும். இந்த ஆய்வுக்கான மொத்த செலவை ஆய்வு கோரி விண்ணப்பித்த வேட்பாளர் கணக்கிலும், அவரது தேர்தல் செலவிலும் சேர்க்க வேண்டும். ஒருவேளை ஆய்வின்போது மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டால் வேட்பாளரின் செலவுத்தொகை திருப்பி வழங்கப்பட வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
-
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட்












Click it and Unblock the Notifications