MacBook இலவசம்.. ஆனால் வேலை கிடையாது.. 1,200க்கும் அதிக ஊழியர்களை பணி நீக்கிய பிரபல ஐடி நிறுவனம்

Subscribe to Oneindia Tamil

டெல்லி: பிரபலமான ஐடி நிறுவனங்கள் தற்போது தங்களின் ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகிறது. அந்த வகையில் கேன்வா ஐடிநிறுவனம் தற்போது 1,200 பேரை பணி நீக்கம் செய்துள்ளது. இவர்களுக்கு 6 மாத சம்பளம், 'மேக்புக்' லேப்டாப், லிங்ட்இன் பிரிமீயம் உள்பட பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:

Canva layoffs

முன்னணி ஐடி நிறுவனங்களில் ஒன்றாக கேன்வா (Canva) செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் நேற்று 1,271 ஊழியர்களை உலகம் முழுவதும் பணி நீக்கம் செய்தது. இந்த கேன்வா நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களின் எண்ணிக்கையில் 22 சதவீதமாகும்.

பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு இழப்பீட்டு தொகையாக ஒவ்வொரு நிறுவனங்களும் வழங்கி வருகிறது. அந்த வகையில் கேன்வா நிறுவனம் மாற்று முயற்சியை கையில் எடுத்துள்ளது. இது பிராந்தியத்துக்கு பிராந்தியம் மாறுபடுகிறது. அதன்படி பணி நீக்கப்பட்ட ஊழியர்களுக்கு 'MacBook' இலவசமாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட மெமோவில் கேன்வா நிறுவனத்தின் சிஇஓ மெலனி பெர்கின்ஸ் கூறுகையில், ''வரலாற்றில் மிகவும் கடினமாக வருடத்தை கேன்வா நிறுவனம் எதிர்கொண்டது. இதனால் தவிர்க்க முடியாத சூழலில் பணி நீக்க முடிவை எடுத்துள்ளோம். இந்த சூழலில் பாதிக்கப்படும் அவைருக்கும் ஏற்படும் துயரத்திற்கும், இடையூறுக்கும் நான் ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்து கொள்கிறேன்.

ஒவ்வொரு ஊழியர்களுக்கும் சொந்தமாக மடிக்கணினி இருக்குமா என்பது தெரியவில்லை. இதனால் உங்களுக்கு வழங்கப்பட்ட 'மேக்புக்கை' லேப்டாப்பை நீங்களே வைத்து கொள்ளலாம். அதேபோல் வேலைவாய்ப்புகளை தேடிக்கொள்ளும் வகையில் லிங்க்ட்இன் பக்கத்தில் ஓராண்டுக்கு பிரிமீயம் வழங்கப்பட உள்ளது. குறைந்தபட்சமாக 6 மாத ஊதியம் வழங்கப்பட உள்ளது. ஊழியர்கள் எங்கு பணியாற்றிலும் இந்த நடைமுறை பொருந்தும். 12 மாத இன்சூரன்ஸ் ஹெல்த்கேர் பொருந்தும். '' என்று கூறியுள்ளார்.

இந்த நிறுவனம் 37 நாடுகளில் செயல்பட்டு வருகிறது. மொத்தம் 5,700க்கும் அதிகமானவர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்தியாவிலும் இந்த நிறுவமன் இயங்கி வருகிறது. ஆனால் தற்போதைய பணி நீக்கத்தில் எந்தெந்த நாடுகளில் எவ்வளவு பேர் என்பது பற்றிய விவரம் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+