"எல்லோருக்கும் ஐபோன் பரிசு".. ஊழியர்களுக்கு தீபாவளி போனஸாக தனியார் நிறுவனம் கொடுத்த ‘சர்ப்ரைஸ்'
டெல்லி: டெல்லியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் தீபாவளி போனஸாக தனது நிறுவனத்தில் பணியாற்றும் அனைத்தும் ஊழியர்களுக்கு ஐபோன் பரிசு வழங்கி வியக்க வைத்துள்ளது.

தீபாவளி பண்டிகை நெருங்கிவிட்டது. இதனால் ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களின் ஊழியர்களுக்கு போனஸ் வழங்கி வருகின்றனர். சில நிறுவனங்கள் தங்களின் ஊழியர்களுக்கு சர்ப்ரைஸ் கிப்ட்டுகளை வழங்கி வருகிறது.
அந்த வகையில் டெல்லியில் செயல்பட்டு வரும் தனியார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு ஐபோன்களை பரிசாக வழங்கி உள்ளது.
இந்த நிறுவனத்தின் பெயர் பைனான்சர்சாப். இந்த நிறுவனம் டெல்லியின் ரோகினி சாப் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசாக ஐபோன் பரிசாக வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஊழியர்கள் பணிக்கு வருவதற்கு முன்பாகேவ ஐபோன்கள் அலங்கரிக்கப்பட்டு ஒவ்வொருவரின் இருக்கையின் முன்பும் வைக்கப்பட்டது.
பணிக்கு வந்த ஊழியர்கள் ஐபோன்கள் இருப்பதை பார்த்து வியந்து போயினர். அதுமட்டுமின்றி இந்த ஐபோன் தான் தீபாவளி பரிசு என்று நிறுவனம் அறிவித்ததும் அவர்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதித்தனர். இதுதொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வெளியாகி வேகமாக பரவி வருகிறது. இந்த வீடியோவில், ''தீபாவளி கிப்ட் என்றால் அதில் ஓஜி யார் என்றால் பைனான்சர்சாப் தான்'' என கூறப்பட்டுள்ளது. இந்த வீடியோவை பார்க்கும் பலரும் அந்த நிறுவனத்தை பாராட்டி வருகின்றனர்.
அதேபோல் இன்னொரு வீடியோவில் ஊழியர்கள் அனைவரும் கையில் ஐபோன்கள் வைத்திருந்து 'போஸ்' கொடுக்கின்றனர். அந்த வீடியோவில், ''உங்கள் கம்பெனி இன்னும் 'சோன் பப்டி' தருகிறதா அப்படியென்றால் அந்த பணியை ராஜினாமா செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது'' என்று கூறி பிற நிறுவனங்களை கிண்டல் செய்துள்ளனர்.
பொதுவாக பெரிய பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களில் போனஸ் என்பது கிடையாது. தீபாவளி பரிசு என்ற பெயரில் ஸ்வீட்ஸ், சோன் பப்டி மட்டுமே இன்னும் வழங்கி வரும் நிலையில் தான் அந்த நிறுவனத்தை பைனான்சியர்சாப் நிறுவனம் கிண்டல் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications
