மின்சார கொள்முதலில் முறைகேடு..கரண்ட் கட் ஆபத்தில் தமிழ்நாடு! சிஎம் விஜய்க்கு திருமா கொடுத்த வார்னிங்

Subscribe to Oneindia Tamil

சென்னை: மின்சார கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக விவாதங்கள் உள்ளது. மின்வெட்டுமேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதலமைச்சர் விரைந்து தலையிட வேண்டும் , இது பொதுமக்கள் பிரச்சனை என நினைத்து களைய வேண்டும் என விசிக தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.

மதுரை தல்லாகுளம் பகுதியில் விசிக சார்பில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில்விசிக தலைவர் திருமாவளவன் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், "தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலக வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய கூட்டணி சார்பில் நவ1ல் 10 லட்சம் பேர் கலந்துகொண்ட பேரணி நடைபெற்றது.

இதில் விசிக கலந்துகொண்டது. இந்திய நாடாளுமன்ற ஜனநாயகம் பெரும் ஆபத்தில் சிக்கியிருக்கிறது. EVM இயந்திரத்தை பயன்படுத்தி சங்க் பரிவார் சதித்திட்டத்திற்கு இணங்கி வாக்கு திருட்டு எனும் மோசடியை நிறைவேற்றியுள்ளார்கள்.

Thirumavalavan

திருமாவளவன்

தலைமை தேர்தல் ஆணையரோடு இருந்த இரண்டு தேர்தல் ஆணையர்கள் சாட்சியமாக இருந்து அம்பலபடுத்தினர். நாடே கொந்தளிப் போயுள்ளது. குடிமக்கள் தனது வாக்குகளை காக்க இந்திய கூட்டணி முன்னெடுக்கும். தமிழ்நாட்டை பொறுத்தவரையில் இந்திய கூட்டணியில் தவெக இணைந்திருப்பது புதிய பரிமணாத்தை உருவாக்கியிருக்கிறது. டெல்லி பேரணியில் தவெக கொடியும் பறந்தது.

வெற்றி பயணம்

தமிழ்நாட்டில் கடந்த திமுக அரசு நடைமுறைப்படுத்திய விடியல் பயணம் இப்போது தவெக அரசு வெற்றி பயணமாக பரிணாமம் பெற்று விரிவாக்கம் அடைந்துள்ளது. ஒரு வகையில் பாராட்டினாலும் ஆட்டோ ஓட்டுனர், தனியார் வாகனங்களை பயன்படுத்தும் பலரும் வெகுவாக பாதிக்கப்படுவதாக செய்தி கோரிக்கை மனு அளிக்கின்றனர். தவெக அரசு இதனை கவனித்தில் கொள்ள வேண்டும் தொழிலாளர்கள், ஆட்டோ ஓட்டுனர்கள், மினிபேருந்து உரிமையாளர்கள் கோரிக்கையை அரசு பரிசீலிக்க வேண்டும்.

சுங்க கட்டணம்

காலக்கெடு முடிந்த டோல்கேட்டில் சுங்க கட்டணம் வசூலிக்கப்படுகிறது. பண்டிகை காலங்களில் கட்டண வசூலால் பொதுமக்கள் காத்துகிடக்கின்றனர். தீபாவளிக்கு முன்பு அல்லது பின்பு 5 நாட்களுக்கு சுங்க கட்டண வசூலை கைவிட வேண்டும் கள்ளக்குறிச்சி அருகே பாண்டியன் குப்பம் கிராமத்தில் 4 தலித் இளைஞர்களை தாக்கி காலில் விழச்செய்துள்ளனர். சம்பந்தபட்டவர்கள் யாராக இருந்தாலும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கொள்முதலில் முறைகேடு

SIRக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில் அதிகாரபூர்வமாக இந்திய கூட்டணியில் இணைந்து விட்டார்கள். டெல்லிக்கு அழைப்பு விடுத்தார்களா என தெரியவில்லை. மின்சார கொள்முதலில் முறைகேடு நடந்திருப்பதாக விவாதங்கள் உள்ளது. மின்வெட்டு்மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதில் முதலமைச்சர் விரைந்து தலையிட வேண்டும், இது பொதுமக்கள் பிரச்சனை என நினைத்து களைய வேண்டும்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+