என் அம்மாவே என்னை தப்பா பேசுறாங்க .. இந்திய கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா பேட்டி

Subscribe to Oneindia Tamil

சென்னை: கபடி விளையாட்டு வீரர்கள் பயனடைய வேண்டும் என்று நான் பணம் கொடுத்தேன். ஆனால் அது குறித்து தவறான கருத்தை எனது அம்மா பரப்பி வருகிறார். என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் எனது அம்மா சிலரின் தூண்டுதலால் எனக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். இதன் காரணமாக என்னால் விளையாட்டில் முழு கவனம் செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. பொய்யான குற்றச்சாட்டுகளை எனது தாய் பரப்பி வருகிறார், அதை யார் நம்ப வேண்டாம். இந்த விவகாரத்தில் அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்று இந்திய கபடி வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா பேட்டி அளித்துள்ளார்.

Indian Kabaddi player Kannagi Nagar Karthika

சென்னை துரைப்பாக்கம் அடுத்த செம்மஞ்சேரி கண்ணகி நகர் பகுதியில் உள்ள கபடி விளையாட்டு அரங்கில் கபடி விளையாட்டு வீராங்கனை கண்ணகி நகர் கார்த்திகா இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "நான் எனது தந்தை பாட்டி மற்றும் தங்கையுடன் வசித்து வருகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறேன். எனது தாயுடன் நான் இல்லை. எனது தாய் எங்களிடம் இருந்து பிரிந்து சென்று 6 ஆண்டுகள் ஆகிறது.

என் அம்மாவே, என்னை பற்றி தவறாக பேசி வருகிறார். என்னுடைய விளையாட்டை தவறாக சொல்லி வருகின்றார். எனது குடும்பத்தில் தனிப்பட்ட பல விவகாரங்கள் உள்ளதால் அதனை தற்போது பொது வெளியில் சொல்ல முடியவில்லை. அரசு எனக்கு கொடுத்த பணத்தை, ஏற்கனவே எனக்கு உதவி செய்தவர்களுக்கு ஒரு நன்றி கடனாக கொடுத்தேன். அது ஆவணமாக உள்ளது. கபடி விளையாட்டு வீரர்கள் பயனடைய வேண்டும் என்று நான் பணம் கொடுத்தேன். ஆனால் அது குறித்து தவறான கருத்தை எனது அம்மா பரப்பி வருகிறார்.

என்னுடைய வளர்ச்சி பிடிக்காமல் எனது அம்மா சிலரின் தூண்டுதலால் எனக்கு எதிரான கருத்துக்களை பரப்பி வருகிறார்கள். என்னை வழி அனுப்ப என் அம்மா ஏன் வரவில்லை. இப்போது என் பெயரை கெடுப்பதற்காகவே முயற்சிக்கின்றார். எனக்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் மீது அபாண்டமாக என் அம்மா பழி போடுகிறார்.

சில வழக்குகள் காரணமாக அம்மாவுக்கும் எனக்கும் இடையே பிரச்சனை இருந்து வருகிறது. சட்டப்படி அதனை நாங்கள் சந்தித்து வருகிறோம். நீதிமன்றத்திற்கு சென்று வருகின்றோம். சட்டப்படி தான் நடக்கிறோம். தனது குடும்பத்தில் தனிப்பட்ட பல விவகாரங்கள் உள்ளதால் அதனை தற்பொழுது பொது வெளியில் சொல்ல முடியவில்லை.

அரசு எனக்கு கொடுத்த பணத்தை, ஏற்கனவே எனக்கு உதவி செய்தவர்களுக்காக, அந்த அணிக்காக ஒரு நன்றி கடனாக கொடுத்தேன். அது ஆவணமாக உள்ளது. நான் கொடுத்த தொகை, பணம் என்பது அவர்களுக்கு மிகப்பெரிய பணமும் இல்லை. இந்த பிரச்சனையால் எனக்கு நிறைய தொந்தரவு ஏற்படுகிறது. பொறாமையால் என்னை முடக்க பார்க்கிறார்கள். அரசு உதவி செய்தால் நன்றாக இருக்கும். தொடர்ச்சியாக என் அம்மா என்னை குறித்து பேசுவது, என்னை விளையாட்டில் கவனம் செலுத்துவதை தடுக்கிறது" இவ்வாறு கார்த்திகா கூறினார்.

முன்னதாக கார்த்திகாவின் தாயார், ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில் , என் பொண்ணை மிரட்டி வச்சுஇருக்காங்க. என்னிடம் பேசமாட்டீங்குது.. என் பெண் நல்ல நிலைமைக்கு வந்த உடனே, பணத்தை அவர்கள் திருடுவதற்கு பிளான் போடுகிறார்கள். என் மகளை நான் பார்த்து ஏழு மாதம் ஆகிவிட்டது. என்னிடம் பேசுவதே இல்லை. என்னை பற்றி பொதுவெளியில் தவறாக பேசிவிட்டார்கள்" என்று ஆதங்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+